உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குடியிருப்பு மாடியை ஆக்கிரமித்து அட்டூழியம் வி.சி., பிரமுகர் உட்பட ஏழு பேர் கைது

குடியிருப்பு மாடியை ஆக்கிரமித்து அட்டூழியம் வி.சி., பிரமுகர் உட்பட ஏழு பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, பள்ளிக்கரணையில் புதிதாக கட்டப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பு மாடியை ஆக்கிரமித்து, கூரை அமைத்த வி.சி., பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.பள்ளிக்கரணை, காமகோடி நகரில் கீர்த்தி முருகாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கமலஹாசன் என்பவர் இதைக் கட்டி, முதல் தளத்தில் தன் அலுவலகத்தை நடத்தி வருகிறார்.இரண்டாவது தளத்தில் உள்ள, 'எஸ் 2' வீட்டில் வி.சி., பிரமுகர் செல்வகுமார், 36 என்பவர், வாடகைக்கு இருந்துள்ளார். அந்த வீட்டை ரம்யா சுதர்சன் என்பவர் வாங்கியுள்ளார்.மற்ற வீடுகளை கட்டுமான உரிமையாளர் கமலஹாசன் விற்க முயன்றபோது, செல்வகுமார் விற்க விடாமல் இடையூறு செய்து, அனைத்து வீடுகளையும் தனக்கு வாடகைக்கு கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.தவிர, மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து, அதில் தன் நண்பர்களோடு சேர்ந்து, தினமும் மது அருந்தி, சீட்டு விளையாடி தொல்லை தந்துள்ளார். வீட்டை வாங்க வருவோரை நாயை ஏவி விட்டு அச்சுறுத்தி உள்ளார்.கடந்த ஜன., 1ல், வீட்டின் மேல் மாடியை புகைப்படம் எடுக்க சென்ற கமலஹாசனின் ஆட்களை, வி.சி., பிரமுகர் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்ட கமலஹாசனையும் தாக்கி, பல்லை உடைத்துள்ளனர். அவர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிந்து தமிழரசன், 28, சுதாகர், 37, ஆகியோரை, ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த வி.சி., பிரமுகர் செல்வகுமார், 36, பரத், 27, கோவிந்தராஜ், 39, ஜெபர்சன், 42, ராகேஷ், 38 உள்ளிட்ட, ஐந்து பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

theruvasagan
ஜன 21, 2025 11:29

யாரப்பா அந்த மது ஒழிப்பு மாநாட்டை நடத்தின மகானுபாவர். கண்ட மேடைக்கு வரச் சொல்லுங்க. அவரோட புல்லிங்கோக்களுக்கு அந்த செய்தி போய்ச் சேரலையாம். இனனும் சரக்கு மிடுக்கு அடங்கமறு அத்துமீறுன்னு சொல்லிக்கிட்டு திரியறங்களாம். ஊருக்கெல்லாம் குறி சொன்ன பல்லி கழுநீர் பானையில விழுந்து முழுகிப் போச்சாம்.


Sekaran
ஜன 21, 2025 10:25

தமிழக .மக்களே, இது தான் ட்ராவிட ஆட்சியின் அவலம். நடு தர மக்களே இந்த ஆட்சி தொடர்ந்தால் உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விடுவீர்கள். சிந்தித்து நல்லவர்களை தேர்வு செய்யுங்கள். நல்லவர் என்றால் அண்ணாமலையை தவிர வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை.


vijai
ஜன 21, 2025 10:21

விடுதலை சிறுத்தை கட்சி உடனே தடை பண்ணனும்


Nandakumar Naidu.
ஜன 21, 2025 08:29

தலைவன் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி. தமிழகத்தில் அடுத்த கேடு கெட்ட கட்சி என்றால் இந்த வி சி கே தான்.


ராஜசேகரன்,தேனி
ஜன 21, 2025 09:18

தாழ்வான்களுக்கு தாழ்வு புத்திதானே இருக்கும் நல்ல புத்தி எப்படி இருக்கும்?


விவசாயி
ஜன 21, 2025 07:40

இந்தியாவிலேயே எனக்கு பிடிக்காத ஒரு கட்சி இருக்குதுனா அது இந்த வீணாப்போன வி சி க தான், அடாவடி அட்டூழியம் கலிசு கஞ்சா குடிக்கி பொம்பள பொருக்கிக பூரா பயலுகளும் இந்த வி சி க வுல தான் இருப்பாங்க, அவனுங்களுக்கு ஒரு பாதுகாப்பான சட்டம் வேற இருக்கு... கலக்கொடுமை


Padmasridharan
ஜன 21, 2025 07:32

கிட்டத்தட்ட 7 பேர் பட்டியல் இருக்கின்றது. ஒரே ஒருவருடைய புகைப்படம் மட்டும்தான் கிடைத்ததோ ?


N Sasikumar Yadhav
ஜன 21, 2025 07:17

திருமாவளவனின் வுடுதலை சொத்தைகளின் மானங்கெட்ட கொள்கைகளான அடங்கமறு அத்துமீறு வீண்சண்டைக்கு செல் என்ற கொள்கைகளை மிகச்சரியாக கடைபிடிக்கிறானுங்க ஏதாவது கேட்டால் நசுக்கிப்பிதுக்கிட்டாங்க என ஃபீலா விடுவானுங்க


vijaj,covai
ஜன 21, 2025 06:46

எல்லாம் pcr மற்றும் குருமாவின் தைரியம்


முக்கிய வீடியோ