உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பார்லிமென்டை முடக்குங்கள்: தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., யோசனை

பார்லிமென்டை முடக்குங்கள்: தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பார்லிமென்டை முடக்கி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கான நிதியை பெறுங்கள்,'' என, அ.தி.மு.க., - அருண்மொழித்தேவன் ஆலோசனை கூறினார்.

சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் அவர் பேசியதாவது:

தி.மு.க., அரசின் பட்ஜெட்டை, விளம்பர அறிவிப்பாகவே மக்கள் பார்க்கின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வை குறைக்க, எந்த திட்டமும் இல்லை.மத்திய அரசிடம் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்கிறீர்கள். ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எல்.சி.,க்கு நிலம் கையகப்படுத்தி கொடுக்க, ஏன் அக்கறை காட்டுகிறீர்கள்?காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அ.தி.மு.க.,வின் 37 எம்.பி.,க்கள், 22 நாட்கள் பார்லிமென்டை முடக்கினர். அதுபோல, தி.மு.க., கூட்டணியின் 39 எம்.பி.,க்களும் பார்லிமென்டை முடக்கி, மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ravi Kulasekaran
மார் 20, 2025 22:40

சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் போல அதிமுகவின் கணக்கு ஆனால் இதில் சில வேளை ராஜதந்திரம் கூட. என்ன நடக்கும்!நாடாளுமன்றத்தை முடக்க நினைத்தால் பாஜக அரசு 39 எம்பிக்கள் சஸ்பென்ட்!!எப்படி எடப்பாடியின் ராஜதந்திரம்!!! திமுக முடக்க நினைத்தால் தலையில் மண்.


ராமன்
மார் 20, 2025 21:54

கூட்டு களவாணிகள்..


RAMESH
மார் 20, 2025 19:03

கடைசிக்கு கேண்டின் போவதை நிறுத்துங்கள்.., பஜ்ஜி போண்டா விற்பனை குறைந்து மோடியின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையட்டும் திராவிட மாடல் உறுப்பினர்களே.


Anandan B M
மார் 20, 2025 18:12

தமிழக அரசுநமது மக்களுக்கு வேண்டிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறவேண்டும் வீண் விதண்டா வாதம் செய்யக்கூடாது


naranam
மார் 20, 2025 17:37

ரவுடிக்கு ரவுடி அட்வைஸ்!


c.mohanraj raj
மார் 20, 2025 15:14

மலையில் ஈடுபடும் அனைத்து எம்பிக்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள் சம்பளத்தை நிறுத்துங்கள்


ஆரூர் ரங்
மார் 20, 2025 14:16

எல்லா விதங்களிலும் மத்திய அரசைப் பகைத்துக் கொண்டு உருப்பட்ட மாநிலம் உண்டா?.


மூர்க்கன்
மார் 20, 2025 19:42

உண்டு. தமிழ் நாடு அடிமைகளுக்கு உரிமை பற்றி தெரிவதில்லேயே ???


Muralidharan S
மார் 20, 2025 14:01

பாராளுமன்றத்தை முடக்குவது... பாராளுமன்ற கேன்டீனில் வடை பஜ்ஜி போண்டா சாப்பிடிவுது.. இதுதான் திராவிஷா கட்சிகளுக்கு தெரியும்... பின்னே என்ன அறிவுபூர்வமாக விவாதங்களில் பங்கு கொள்ளவா முடியும்... ???


Muralidharan S
மார் 20, 2025 13:57

இப்ப புரிஞ்சுதா.. ஏன் இந்த இரண்டு திராவிஷ கட்சிகளும் ஒரே ...


Ganapathy
மார் 20, 2025 13:54

இதுக்கு பதிலாக நேரடியாக மக்களிடம் இனிமே எந்த தேர்தலிலும் எங்களுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லியிருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை