வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முதல்வருக்குத் தெரியாம மத்தவங்க லஞ்சம் வாங்குறாங்களாம். அதைத் தடுக்க அடை காக்க வேண்டியுள்ளது.
அடைகாப்பது அவர் விருப்பம். ஆனால் அதில் எதுவும் கூமுட்டைகள் இல்லாமல் இருந்தால் சரி.
காங்., எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., ஆப்பரேஷன் தாமரை மூலம் இழுக்க முயற்சிக்கலாம் என்பதால், அவர்களை பத்திரமாக பாத்துக்கொள்ளும் பொறுப்பை, அமைச்சர்களிடம் முதல்வர் சித்தராமையா ஒப்படைத்து உள்ளார்.கர்நாடகாவில் மேம்பாட்டு பணிகள் செய்வதில் தாமதம்; முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு, இடைத்தேர்தல், வக்பு வாரிய விவகாரம், காங்கிரஸ் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையில், காங்கிரஸ் அரசை கவிழ்க்க, பா.ஜ., 100 கோடி ரூபாய் பேரம் பேசியதாக, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கவுடா குற்றம்சாட்டி இருந்தார். இதை பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு செயல்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் சித்தராமையா, அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். ஆலோசனை
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்: வக்பு வாரிய விவகாரத்தை, விஸ்வரூபமாக்க, மாநில அளவில் பா.ஜ., போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகள், மடாதிபதிகள், புரோகிதர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.இதை தடுக்கும் வகையில், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், பொது மக்களை சந்தித்து, பா.ஜ.,வின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும்; இது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேவேளையில், லோக்சபா கூட்டத்தொடரில், மாநிலத்தின் நிலவரம் குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள் எடுத்துரைக்க வேண்டும். 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டில், பா.ஜ.,வுக்கு சாதகமாக, லோக் ஆயுக்தா அறிக்கை அளித்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா, அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைத்து, அதற்கு யாரை தலைமை வகிக்கலாம் என்றும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விரைந்து முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. விவாதம்
குறிப்பாக, ஆப்பரேஷன் தாமரை விவாதம் பெரிதளவில் விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே, ஆளுங்கட்சியை கலைக்கும் கட்சி பா.ஜ., என்ற பட்ட பெயரை சுமந்து வருகிறது. கடந்த 2018ல் ம.ஜ.த., - காங்கிரசின் 17 எம்.எல்.ஏ.,க்களை ஈர்த்து, கூட்டணியை கவிழ்த்த வரலாறு பா.ஜ.,வுக்கு உள்ளது. மீண்டும் அதுபோன்று செயல்பட்டு வருவதாக, குற்றம்சாட்டு உள்ளன.எனவே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு விலகாமல், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக செய்து தர வேண்டும். எனவே, கோழி முட்டைகளை அடை காப்பது போன்று, எம்.எல்.ஏ.,க்களை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது மாவட்ட பொறுப்பு அமைச்சர்களின் கடமை.பி.பி.எல்., ரேஷன் கார்டு விவகாரத்தில், அரசு ஊழியர்கள், வரி செலுத்துவோரின் பி.பி.எல்., கார்டுகளை, ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும், தகுதியான பி.பி.எல்., கார்டுகளை, ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்றக்கூடாது. இது தொடர்பாக துறை ரீதியாக கூட்டம் நடத்தி, முடிவெடுக்க வேண்டும். இதுபோன்று பல விஷயங்களை காங்கிரஸ் கையில் எடுத்து உள்ளது. இதனால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் பிடிக்காமல் இருக்க பொத்தி, பொத்தி பாதுகாக்க காங்கிரஸ் திட்டம் வகுத்து உள்ளது. மொத்தத்தில் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் காட்டில் மழை.நிலைமை பரபரப்பானால், காங்., - எம்.எல்.ஏ.,க்களை சொகுசு விடுதியில் அடைத்து வைத்து கண்காணிக்கவும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை கடைசி கட்டத்தில் அமல்படுத்தலாம் எனவும் பிளான் செய்து உள்ளனர். - நமது நிருபர் -
முதல்வருக்குத் தெரியாம மத்தவங்க லஞ்சம் வாங்குறாங்களாம். அதைத் தடுக்க அடை காக்க வேண்டியுள்ளது.
அடைகாப்பது அவர் விருப்பம். ஆனால் அதில் எதுவும் கூமுட்டைகள் இல்லாமல் இருந்தால் சரி.