உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலின் - சிதம்பரம் திடீர் சந்திப்பு

ஸ்டாலின் - சிதம்பரம் திடீர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.இது குறித்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது:பொங்கல் தினத்தை ஒட்டி முதல்வருக்கு சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார். சிதம்பரத்தின் தாய் லட்சுமியின் நினைவாக, 'லட்சுமி வளர்தமிழ் நுாலகம்' என்ற பெயரில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் பல்கலை வளாகத்தில் 13 கோடி ரூபாய் செலவில் இந்த நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நுாலகத்திற்கு அடுத்தபடியாக, பெரிய நுாலகமாக இந்த நுாலகம் கருதப்படுகிறது.இந்த நுாலகத்தை அழகப்ப செட்டியார் பல்கலையிடம் அர்ப்பணிக்கும் விழா ஜன.21ம்தேதி காரைக்குடியில் நடக்கவுள்ளது.நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, கவிஞர் வைரமுத்து, தமிழறிஞர்கள் பல்கலைகளின் முன்னாள் வேந்தர்கள் சிலர் பங்கேற்க உள்ளனர்.இந்த நுாலகத்தில் 2 லட்சம் தமிழ் புத்தகங்கள் மட்டும் இடம் பெறுகின்றன. நுாலக கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் கருத்தரங்கம் நடத்தும் அரங்கமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் படிக்கும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கும் இந்த நுாலகம் பயனுள்ளதாக அமையும். நுாலகத்தை திறக்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக சிதம்பரம் ஸ்டாலினைச் சந்தித்தார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mani . V
ஜன 16, 2025 12:41

ஒரு அம்மன் சல்லிக்கும் பிரயோசனமில்லை.


MARUTHU PANDIAR
ஜன 15, 2025 20:59

திஹார் ரிட்டர்ன் கிங் பின் வந்துட்டாரு பெரியார் மண்ணுக்கு, பெரியார் சீடரை பார்க்க அப்புடீங்கராங்க .


ஆரூர் ரங்
ஜன 15, 2025 18:47

லட்சுமி சிதம்பரம் கார்த்திக் எதுவுமே தமிழ்ப் பெயரில்லை. அது என்ன வளர்தமிழ்?


Indian
ஜன 15, 2025 17:55

முட்டாலும் மடையனும் சந்தித்து பேசி யது போன்றது.... ம்ம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 15, 2025 16:55

ஏனுங்க அப்பச்சி , லட்சுமி ஆச்சி பெயரோடு கவிதாயினி சௌந்தரா கைலாசம் பெயரையும் அந்த நூல் நிலையத்துக்கு வச்சிருக்கலாமே. சமத்துவம் பேசினால் மட்டும் போதாது. செயலிலும் காட்டவேண்டும். பொண்டாட்டியோட அம்மான்னா இளக்காரமா ?


Ramesh Sargam
ஜன 15, 2025 13:01

கூட்டுக்களவாளிகள்...


sankaranarayanan
ஜன 15, 2025 10:21

ஸ்டாலின் - சிதம்பரம் திடீர் சந்திப்பு ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு இரண்டும் சேரவே கூடாது நாட்டிற்கும் நல்லதல்ல எடுத்த காரியத்திற்கும் நல்லதல்ல காங்கிரசில் எத்தனையோ தலைவர்கள் ராகுலு - சோனியாஜி - பிரியங்கா அக்கா - கார்கே இவர்கள் எல்லோரும் இருக்கும்போது இதுபோன்று இவர் செய்யலாமா


Shekar
ஜன 15, 2025 09:34

அட விடுங்கய்யா...முதலாளிகிட்ட வேலைபாக்குறவங்க பொங்க காசு கொடுங்கய்யான்னு கேட்க போறதில்லையா


அப்பாவி
ஜன 15, 2025 08:48

அது அதுக்காகத்தான் இருக்கும். ஒரு கட்சி தலை மாற்றப்படுவார்.


தமிழ்வேள்
ஜன 15, 2025 07:48

துண்டு சீட்டு துரைராசா வுக்கு நூலகம் என்றால் என்ன என்று தெரியுமா? அங்கும் எவனாவது அரைகுறை எழுதித் தருவதை தப்பும் தவறுமாக வாசித்து.. அதாவது உளறி.. மானத்தை வாங்கவா? ஹையோ...ஹையோ..


சமீபத்திய செய்தி