உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி

கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே, அ.தி.மு.க., கூட்டணியின் அடிப்படை கொள்கை' என, அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சியில் பேசும் முன், முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து, அவரே கேட்க வேண்டியவை. கச்சத்தீவைப் பற்றி பேச, அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? 39 எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு, பார்லிமென்டில் பேசாமல், நீலிக்கண்ணீர் வடிக்கும் நாடகத்தை, மக்கள் நம்பத் தயாராக இல்லை. கச்சத்தீவைத் தாரைவார்த்தவர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று தி.மு.க.,வுடன் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ். கச்சத்தீவு பற்றி சண்டை போட வேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளுங்கள். கரூர் துயரத்தின்போது, அவர்கள் ஏன் வந்தனர்; இவர்கள் ஏன் வந்தனர்; இது அரசியல் தானே என கேட்கிறார். ஸ்டாலின். கரூருக்கு நள்ளிரவில் ஓடோடி சென்ற இவர், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை; வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? சென்னையில் விமானப்படை சாகசத்தின்போது உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை; ஸ்டாலின் செய்வது மட்டும் அரசியல் இல்லாமல் அவியலா? ஆட்சி நிர்வாகம், நிதி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் என அனைத்திலும் தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது. மக்களை வாட்டி வதைக்கும் தோல்வி மாடல் தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிப்பதே, எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை. தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்கள் நலன், மாணவர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படும் என்பதே, எங்கள் கூட்டணிக்கான பொது காரணம். இதைவிட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படை காரணம் தேவையா என்ன? தி.மு.க., ஆட்சியின் தவறுகளை சொன்னால்; குறிப்பாக, ஸ்டாலின் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அவரது கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது; அதற்கு, நாங்கள் என்ன செய்வது? ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sun
அக் 04, 2025 11:36

தப்பா சொல்றார் எடப்பாடி ! கண்ணாடிய பார்த்து ஸ்டாலின் எப்படி பேசுவார்?


ராமகிருஷ்ணன்
அக் 04, 2025 10:00

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் திமுகவினருக்கு தோல்வி பயத்தில் உளறல் அதிகமாகி வருகிறது. கரூர் கூட்டத்தில் நடந்த திமுக மற்றும் அணிலின் சதித் திட்டங்கள் மத்திய அரசின் பார்வைக்கு ஆதாரங்களுடன் போய்விட்டது, வரும் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெடித்து சிதறி இவர்களின் கூட்டணி சின்னாபின்னமாகி திமுக படுதோல்வி அடையும். ஒரு சீட் கூட ஜெயிக்க வழியில்லை. அதை உணர்ந்து திமுகவினர் பயங்கர பீதியில் இருக்கிறார்கள்


Apposthalan samlin
அக் 04, 2025 11:21

கனவு காணலாம்


baala
அக் 04, 2025 09:28

உங்களைபோல ஒரு பிறவி இந்த பூமியில் இனி பிறக்க கூடாது.


Oviya Vijay
அக் 04, 2025 09:19

2026 தேர்தலில் உங்கள் கட்சி கூட்டணி தோல்வி அடைந்தவுடன் உங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு களிப்புடன் கழிக்கப் போகிறீர்கள்??? இப்போதே முடிவு செய்து விட்டீர்களா?


ஜெய்ஹிந்த்புரம்
அக் 04, 2025 11:36

இவர் சும்மா இருந்தாலும் இவரோட வாயி சும்மா இருக்காது.


vivek
அக் 04, 2025 14:55

ஓவியாரே... எதிர் மறையாக நடந்தால் உமது இருநூறு கட் ஆகிவிடும்....இதயம் பத்திரம்


மோகனசுந்தரம்
அக் 04, 2025 06:27

அது என்னமோ தெரியவில்லை பழனி ஆண்டி அவர்களே, உங்களை ஏற்க மனம் ஒப்பவில்லை.