உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாகரிகம் தெரியாத முட்டாப் பய: எம்.பி.,; யாரடா சொல்ற முட்டாப் பயலே: எம்.எல்.ஏ.,; அரசு விழாவில் முகம் சுளிக்க வைத்த ஆளுங்கட்சியினர்

நாகரிகம் தெரியாத முட்டாப் பய: எம்.பி.,; யாரடா சொல்ற முட்டாப் பயலே: எம்.எல்.ஏ.,; அரசு விழாவில் முகம் சுளிக்க வைத்த ஆளுங்கட்சியினர்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் துவக்க விழா மேடையில், நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது தி.மு.க.,வை சேர்ந்த தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் இருவரும் ஒருவருக்கொருவர், 'முட்டாள்' என ஒருமையில் பேசி வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

பேனரில் படம்

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்' நேற்று துவங்கியது. காலை 9:30 மணிக்கு விழா மேடையில் கலெக்டர் ரஞ்ஜித் சிங், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், மருத்துவ அதிகாரிகள் இருந்தனர். 10:20 மணிக்கு எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணன் ஆகியோர் முகாமுக்கு வந்தனர். முகாம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரில், 'தேனி எம்.பி.,யின் படம் போடவில்லையே ஏன்' என தங்க தமிழ்செல்வன், கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் நல வாரியம் மூலம் உதவித்தொகைக்கான காசோலை, சான்றிதழ் ஆகியவற்றை எம்.எல்.ஏ., மகாராஜன் இருவருக்கு வழங்கினார். அதன்பின் நலத்திட்ட உதவிகளை தங்க தமிழ்ச்செல்வனிடம் கொடுத்து வழங்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார். அப்போது தங்கத்தமிழ்செல்வனிடம் இருந்த செக் கவரை பறித்து, பயனாளியிடம் மகாராஜன் வழங்கினார். உடனே, 'நீ கொடுக்கும் போது, நான் கொடுக்க கூடாதா' என எம்.எல்.ஏ.,விடம் எம்.பி., கடிந்து கொண்டு, 'நாகரிகம் தெரியாத முட்டாப்பய... அறிவு இருக்கா' என்று கேட்டார். இதில் மகாராஜன் டென்ஷன் ஆகி, 'யாரை பார்த்துடா முட்டாப் பயனு சொல்ற... ஏண்டா முட்டாப் பயலே... நான் யாருன்னு நினைச்சுக்கிட்டு இருக்க நீ' என ஒருமையில் திட்டினார். இதனால், இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. புரோட்டோகால் அதன்பின், 'நிகழ்ச்சி நடத்தும் முறை சரியில்லை, புரோட்டோகால் மெயின்டெய்ன் பண்ணவில்லை, புரோட்டோகால் தெரியாதவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்' என்று அதிகாரிகளை தங்க தமிழ்ச்செல்வன் கடிந்து கொண்டார். மேடையில் இருந்தவர்கள், இருவரையும் தனித்தனியாக சமாதானப்படுத்தினர். இதையடுத்து, துவக்க விழா நிகழ்ச்சி பாதியிலேயே முடிக்கப்பட்டு நன்றியுரை வாசிக்கப்பட்டது. மருத்துவ முகாம் தொடர்ந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Parthasarathy Badrinarayanan
ஆக 08, 2025 11:53

இருவரும் அவரவர் பற்றி அவர்கள் வாயால் உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்


RRR
ஆக 06, 2025 18:48

நாகரிகம்... அதுவும் தீயமுகவில்... நல்ல நகைச்சுவை...


Ramesh Sargam
ஆக 03, 2025 20:00

வடிவேலு படத்தில் கவுண்டமணி, செந்தில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசுவார்கள். இங்கே ஒரு மாற்றம். ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசுகிறார்கள். அவ்வளவுதான். இங்கே வடிவேலு யாரு? வேற யாரு, நம்ம அப்பாதான்.


theruvasagan
ஆக 03, 2025 17:58

கவண்டமணி நான் ஒரு பேமானி. செந்தில் நான் ஒரு பொறம்போக்கு. கவண்டர் நான் ஒரு சோமாரி. செந்தில் நான் ஒரு கேப்மாரி. கவுண்டர் நான் ஒரு மொள்ளமாறி. செந்தில் நான் ஒரு முடிச்சவிக்கி. வடிவேலு தங்கச்சி மேகலலையிடம். தங்கச்சி இந்த ரெண்டு பேரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உண்மையை பேசறாங்க உண்மையை பேசறவங்க தெய்வத்துக்கு சமானம்னு சொல்லுவாங்க. இந்த ரெண்டு பேருல உனக்கு பிடிச்ச ஒருத்தரை தேர்ந்தெடுத்துக்க. தமிழ்நாட்டு மக்களுக்கும் இதே மாதிரி நிலைமைதான். இல்லையில்லை. இன்னும் மோசம். ரெண்டு பேரையுமே தேர்ந்தெடுக்க வச்சுடுவாங்க.


naga
ஆக 03, 2025 16:41

இந்த தற்பெருமை தற்குறிகளுக்கு ஒரே சிகிச்சை ஓட்டு தான். ஒவ்வொருவரும் ஒத்த ஓட்டில் ஓட ஓட விரட்டி அடிக்கலாம். பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் குணம் கோபுரமாக உயர் வைத்து வாழ வைக்கும். ஒன்பது மாதங்களில் வரும் தேர்தலில் ஓட்டு சிகிச்சை அளிக்க மக்கள் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும்.


venugopal s
ஆக 03, 2025 13:59

பாஜக அரசியல்வாதிகள் போல் நாகரிகமாக மற்றவர்களுக்கு தெரியாமல் சண்டை போடப் பழகிக் கொள்ள வேண்டும் இவர்கள்!


krishna
ஆக 03, 2025 15:32

EERA VENGAAYAM VENUGOPAL ARBUDHAMAANA MURASOLI THUDAITHA MOOLAI VAAZHTHUKKAL.


சந்திரன்
ஆக 03, 2025 13:32

இவர்களை தேர்ந்து எடுத்த மக்களே....


venkateswaran
ஆக 03, 2025 13:00

இந்த அறிவு ஜீவிகள் இன்னும் சில மாதங்களில் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக மக்களிடம் ஓட்டு கேட்டு வருவார்கள்... ஏனெனில்


VSMani
ஆக 03, 2025 10:28

இந்த இரண்டு மு .... க்களை MLA, MP க்களாக தேர்ந்தெடுத்த மக்களை என்ன சொல்வது ?


VSMani
ஆக 03, 2025 10:27

ஐயோ பாவம் கலெக்டர் இரண்டு மு..... களுக்கு மத்தியில் .


புதிய வீடியோ