உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011ம் ஆண்டு காவல் துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் மீது 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, கடந்த பிப்., 21ல் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு மீது, கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அமர்ந்து பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது. கூடவே, அடுத்த விசாரணை நடைபெறும் வரை, சீமான் மீதான வழக்கு விசாரணைக்குஇடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் செட்டில்மென்டுக்கு தயார் என, உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார் சீமான்.'ஆனால், செய்தியாளர்களிடம் இது குறித்து பேசுகையில், 'செட்டில்மென்ட் தருவதாக நான் எங்கும் தெரிவிக்கவில்லை' என கூறியிருக்கிறார். 'மேலும், பாதிக்கப்பட்ட நபரை பாலியல் தொழிலாளி என கேவலமாக விமர்சித்து இருக்கிறார்,' என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, ''சீமானால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் நடிகை, சீமானை ஏற்கனவே புகழ்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். ''ஆக, இருவரும் மாறி மாறி பேசுவது தெரிகிறது. இருவரும் குழந்தைகள் கிடையாது,'' என கோபமாக கருத்துகளை வெளிப்படுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், 'பாதிக்கப்பட்ட பெண் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, திருமணம் செய்து கொள்வதாக சீமான் உறுதியளித்திருந்தார்; அந்த அடிப்படையிலேயே இருவரும் இணைந்து வாழ்ந்தனர். 'பின், வேறொரு பெண்ணை திருமணம் செய்து, புகார் அளித்திருக்கும் நடிகையை திருமணம் செய்யாமல் ஏமாற்றி உள்ளார். 'திருமணம் செய்யாமல் வாழ்ந்த காலத்தில், தொடர்ச்சியாக வன்புணர்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தான், சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. 'இப்போதும் கூட, நடிகை விஜயலட்சுமியை அவதுாறாக பேசி வருகிறார். இதற்காக சீமான், விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கோர வேண்டும்; அவதுாறாக பேசுவதை நிறுத்த வேண்டும். அதற்காக கூடுதலாக மனு தாக்கல் செய்யவும் தயாராக இருக்கிறோம்' என தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'சீமான், விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சீமான் கோரிக்கை ஏற்க முடியாமல் போகலாம்' என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

M Ramachandran
செப் 13, 2025 23:33

சிவப்பு தோல் பருவ வணப்பு ஜில் தட்டி அந்த தருணத்தில் நிதானம் தவிரி சொல்லிவிட்டார்.இப்போர் ஆட்டி வைக்குது.


M.Sam
செப் 13, 2025 20:29

தமிழர்களை ஏமாற்றும் அயோக்கியர்களின் பின்னல் செல்லும் அனைவரும் படித்த சிந்திக்க திராணி அற்ற அடிமை புத்தி உள்ள அடிமைகளே திருந்துங்க இல்ல அழிந்து போவீர்கள்


Vasan
செப் 13, 2025 16:42

சீமான் தங்கச்சியிடம் மன்னிப்பு கேட்பதில் கெளரவம் பார்க்க மாட்டார்.


Sridhar
செப் 13, 2025 16:08

இந்த குற்றத்தை சீமான் செஞ்சிருந்தாலும், அவர் மன்னிப்பு கேட்டாலும், செட்டில்மென்டுக்கு ஒப்புக்கொண்டாலும், தமிழக அரசியலுக்கு அவர் தேவை. அந்த மாதிரியான ஆளுங்க ஒரு இனப்பற்றோடு, வெறித்தனமா ஈவேரா பத்தின உண்மைகளை பேசபேசத்தான் நாயக்கன் பற்றிய விவரங்கள் மக்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இப்போ இல்லாட்டாலும் அடுத்த தலைமுறையினராவது காறித்துப்புவார்கள்.


Abdul Rahim
செப் 13, 2025 15:23

பிராபகரன் என் தலைவன் என்பான் என் அண்ணண் என்பான் ஆனால் அதே பிராபாகரனை பிடித்து வந்து தமிழ்நாட்டில் தூக்கில் போடவேண்டுமென சட்டமன்றத்தில் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்தை சபாநாயகராக இருந்து முன்மொழிந்த காளிமுத்து மகளை சொத்துக்காக திருமணம் செய்தவன் இந்த பணத்தாசை பிடித்த ஆமைக்கறியோன்.


Abdul Rahim
செப் 13, 2025 15:18

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றித்தியதோடு ,செய்தியாளர்களிடம் பேசும்போது அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி போன்ற கடுமையான வார்த்தைகளால் பேசுகிறார் என்றும் இதற்க்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டுமென்றும் விஜயலட்சுமியின் வக்கீல் சொன்னதால் அப்படி ஏசியதற்கு சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என நீதிபதிகள் கூறினார்கள் தவிர வாழாமல் ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டதற்க்காக அல்ல எனவே ஆமைக்கறி சைமன் அவதூறாக பேசியதர்காக மன்னிப்பு கோருவதோடு அந்த பெண்ணிற்கு உரிய இழப்பீட்டை அவரது வாழ்நாள் தேவைக்காக வழங்கியே ஆகவேண்டும் இல்லையேல் அவரது இரண்டாவது திருமணத்தை செல்லாது என நீதிமன்றம் தெரிவிக்கவேண்டும் , விஜலட்சுமியை மட்டுமல்ல ஏராளமான பெண்களின் வாழ்க்கையை இந்த ஆமைக்கறி காமுகன் சீரழித்திருக்கிறான் ,சினிமாவில் பணியாற்றியபோது இதே கேவல பொழப்பாக இருந்திருக்கிறான் போல்.


முதல் தமிழன்
செப் 13, 2025 14:59

ஏதாவது நிருபர் இதைப்பற்றி கேள்வி கேக்கணும், இவரு சூப்பரா உளறி கொட்டி உச்ச கோர்ட் கண்டனம் மற்றும் தண்டனை வாங்குவார். இவருக்கு வாயில் சனி, உடம்பு முழுவதும் தேவையில்லாத கொழுப்பு.


Vijay D Ratnam
செப் 13, 2025 13:17

அப்போ, திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி பலமுறை பாலியல் ரீதியாக அனுபவித்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா. சீமான் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ளவேண்டும். உடல்ரீதியாக மனரீதியாக கணவன் மனைவியாக வாழ்ந்து இருக்கிறார்கள். தர்மப்படி விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவி . விஜயலட்சுமியை ஏமாற்றிவிட்டு 2013 ல் கயல்விழியை திருமணம் செய்துகொண்டது அநியாயம், அக்கிரமம். ஆக அந்த கயல்விழியுடனான திருமணத்தை செல்லாது என்று அறிவித்து கயல்விழிக்கு சீமான் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்பதுதான் சரியான நீதியாக இருக்கும். சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அரசியல் அதிகாரம், ஆள்பலம், பணபலம் மிக்க ஒரு மனிதர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறைக்கு சென்றவர். அண்டை நாட்டின் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர். எந்நேரமும் தன்னை சுற்றி ஆட்கள் துணையோடு இருப்பவர். பாவம் அந்தப்பெண் விஜயலட்சுமி மார்க்கெட் இழந்த ஒரு துணை நடிகை. இப்போது ஏழ்மையில் தாய் தகப்பன் இல்லாமல், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியை வைத்துக்கொண்டு, ஏன் என்று கேட்க நாதியில்லாமல் ஆதரவு இல்லாமல் நிர்கதியாக நிற்கிறார். எவ்வளவு கொலை மிரட்டல்களை சந்தித்து இருப்பார், ஆபாச பேச்சுக்களால் மனம் புண்பட்டிருப்பார். வெறிபிடித்த ஓநாய்கள் கூட்டத்தின் மத்தியில் ஒரு சின்ன புள்ளிமான் சிக்கினால் எவ்வளவு அவஸ்தை படும். அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத வேதனையை அனுபவித்துக்கொண்டு இருப்பவர் விஜயலட்சுமி. இதை மனதில் கொண்டு சட்டத்திற்குட்பட்டு ஒரு சரியான நியாயமான நீதியை அந்த அப்பாவி பெண்ணுக்கு நீதிபதி வழங்கவேண்டும். அப்போதுதான் நீதிமன்றம் மீது, சட்டத்தின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.


ராமகிருஷ்ணன்
செப் 13, 2025 11:25

வாய்ச்சவுடால் சீமாண்டி விஜயலெட்சுமி விஷயத்தில் அடங்கி போவது நல்லது அது ஏனோ தெரியவில்லை. அரசியல் ஏமாற்றுக்காரர்கள் எல்லாம் ஜொள்ளு பயல்களா இருக்காங்க.


Kanns
செப் 13, 2025 11:02

If Vijayalakshmis Allegations TRUE in CourtTrial, Convict-Jail Seeman/Simon Sebastian Also Cheating People& Nation As Seemaan


புதிய வீடியோ