உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்; ராகுலுக்கு தமிழக காங்., துணை தலைவர் கடிதம்

தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்; ராகுலுக்கு தமிழக காங்., துணை தலைவர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விடம் 50 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு, தமிழக காங்., துணைத் தலைவர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=obfpthg0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

தி.மு.க., கூட்டணியில், 'ஆட்சியில் பங்கு' என்ற கோஷத்தை தேர்தல் நேரத்தில் எழுப்பவும், குறைந்த பட்சம் 25 தொகுதிகள் கேட்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டுள்ளது. 'காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்; ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும், துணை முதல்வர் பதவி கேட்க வேண்டும்' என்ற கோஷங்கள் காங்கிரசிலும் எழுந்துள்ளன.மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்த நாளை ஒட்டி, ஆட்சியில் பங்கு கேட்டு போஸ்டர் ஒட்டிய நிர்வாகிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'கூட்டணி ஆட்சி வேண்டும்; தி.மு.க.,விடம் 50 தொகுதிகள் கேட்க வேண்டும்' என சோனியா மற்றும் ராகுலுக்கு, தமிழக காங்., மூத்த துணைத் தலைவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'கடந்த 2006ல் நடந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அப்போது, தமிழக காங்கிரசுக்கு ஆறு அமைச்சர்களை தர கருணாநிதி முன் வந்தார். அன்றைய மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, மறைந்த சுதர்சனம், மற்றொரு மூத்த எம்.எல்.ஏ., ஆகியோர் அதை தடுத்துவிட்டனர். எனினும், வாரியத் தலைவர், அரசு வழக்கறிஞர் என, பல்வேறு அரசு பதவிகளை காங்கிரசாருக்கு கருணாநிதி வழங்கினார். ஆனால், தற்போதைய தி.மு.க., ஆட்சியில், பீட்டர் அல்போன்சுக்கு மட்டுமே சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பதவிக்காலம் முடிந்ததும், அதையும் நீட்டிக்கவில்லை. வாரியத் தலைவர் பதவி, நல வாரிய உறுப்பினர் பதவி போன்றவற்றில் காங்கிரசாருக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது; ஆனாலும், அது கானல் நீராகவே உள்ளது. கோரிக்கை மனுக்களோடு செல்லும் காங்கிரசாரை, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் மதிப்பதில்லை. தி.மு.க., பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்கிறது. அதில் மாற்றம் வர வேண்டும். காங்கிரசாருக்கு அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, டில்லி மேலிடம் முன்வர வேண்டும். அப்போதுதான், தமிழகத்தில் காங்., தனித்து வளர்வதோடு, காங்கிரசாருக்கு மரியாதையும் முக்கியத்துவமும் இருக்கும். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vijai hindu
ஏப் 22, 2025 18:23

என்னது விடுதலை சிறுத்தை 25 இடமா தனியா நின்னா ஒரு இடத்தில் கூட டெபாசிட் கிடைக்காது தைரியம் இருந்தா கேட்டு பாக்க சொல்லுங்க


pv, முத்தூர்
ஏப் 22, 2025 17:28

தைரியம் இருந்தால் கேட்டுப்பாரும்


N Srinivasan
ஏப் 22, 2025 13:47

கவலை படாதீர்கள். கண்டிப்பாக கிடைக்காது. DMK கொள்கைதான் உங்களுக்கு தெரியுமே. அவர்கள் மாநிலத்தில் முழு சாப்பிடும் எங்களுக்கு வேண்டும் என்பார்கள். நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பங்கு வேண்டும் என்று கேட்டுத்தான் பழக்கம்.


M S RAGHUNATHAN
ஏப் 22, 2025 13:25

ஆட்சியில் பங்கு கேட்பது இருக்கட்டும். கோவையில் ஒரு மாகராட்சி கழிப்பிடத்திற்கு மறைந்த மாபெரும் ஆளுமை மிக்க தலைவர் கக்கன் பெயரை வைத்து இருக்கிறீர்களே, அதை தட்டிக் கேட்க துணிவில்லை காங்கிரஸ்காரர்களுக்கு. உங்களுடைய ஒரு உன்னதமான தலைவரை அவமானப் படுத்திய கட்சியுடன் ஆட்சி பங்களிப்பா? வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் முதல்வரை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துங்கள். பெயர் மாற்றப் படலாம். ஆனால் அப்படி பெயர் வைப்பதற்கு எப்படி துணிவு வந்தது? அதே போல் அதிமுக அண்ணாமலை நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை சொன்னதற்கு வானத்திற்கும் பூமிக்கும் குதித்தீர்களே, இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள். சட்ட மன்றத்தில் காங்கிரஸும், அதிமுகவும் ஏன் குரல் எழுப்பவில்லை?


vijai hindu
ஏப் 22, 2025 18:24

எருமை மாட்டு மேல மழை பெய்யற மாதிரி தான்


Ramesh Sargam
ஏப் 22, 2025 12:36

ஆரம்பித்து விட்டது பங்காளிகள் போட்டி. இனி கூட்டணி விறுவிறுப்பாக இருக்கும்.


Muralidharan S
ஏப் 22, 2025 11:02

இத்தாலி கான்-cross இனி எப்பொழுதுமே சீட்டு கேட்டு பிச்சைதான் எடுக்கவேண்டும்.. எல்லா மாநிலங்களிலும்..


Muralidharan S
ஏப் 22, 2025 11:00

அதை விடுங்க...உங்க மத்திய ஆட்சியிலாவது, 1.76 லக்ஷம் கோடிகளில் ஏதாவது பங்கு குடுத்தாங்களா? இல்லை அதுவும் குடுக்கலயா ??


xyzabc
ஏப் 22, 2025 10:43

உரிமைகள் கேட்கப்பட வேண்டும். திராவிட மாடலின் லட்சியம்.


GUNA SEKARAN
ஏப் 22, 2025 08:34

2026ல் கூட்டணி ஆட்சிதான், தமிழ்நாட்டில். காங்கிரஸ் மற்ற மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிக்கு தயாராக வேண்டும்.


PARTHASARATHI J S
ஏப் 22, 2025 08:13

காங்கிரஸின் நிலைமை பாம்பின் வாய்த் தேரை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை