உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்

பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்

சென்னை நாடு முழுதும் உள்ள இஸ்லாமியர்கள் நேற்று, பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு, 'மோடியின் செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தை காறி உமிழ்வதை போல உள்ளது' என, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்திருப்பது, சர்ச்சையாகி உள்ளது.

அவரது அறிக்கை:

மோடியின் பக்ரீத் வாழ்த்து, போலி வேஷம். மத அடிப்படையில், மோடி இரட்டை வேடமிடுவது உலகறிந்த உண்மை. நடிகர் வடிவேலு பாணியில், 'ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்ன மரத்துல ஒரு குத்து' என்பது போல, 'காந்திக்கு ஒரு மாலை, கோட்சேக்கு ஒரு மாலை' அணிவிப்பதில் கூச்சமே இல்லாத வித்தைக்காரர். காலையில் கண்ணகி வேடம், மாலையில் தில்லுமுல்லு. இதே பாணியில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் பிரதமர் மோடி, இதுவரை தான் பங்கேற்ற 173 பிரசார மேடைகளில், 110ல் இஸ்லாமியர்களை தாக்கி பேசியுள்ளார். கடந்த தேர்தல் நேரத்தில் ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மோடி, இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அவர்கள் அதிக குழந்தைகள் பெற்றுள்ளனர் என்றும் வசைபாடினார். அதேபோன்று, காங்கிரஸ் கட்சி, ஹிந்துக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பிரித்து தர திட்டமிட்டுள்ளதாக மோடி பொய் பேசினார். இப்படி வக்கிரத்தின் உச்சத்தில் பேசிவிட்டு, வாழ்த்தும் சொல்வது தான் பா.ஜ., கூறும் சனாதனமா? அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஆணையிட்டு பதவியேற்ற மோடி, அரசியலமைப்பு சட்டம் தான் தனது வேதம் என்றார். ஆனால், அவரது செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தை காறி உமிழ்வதை போல் உள்ளது. இப்பேர்பட்டவர்களுக்கு ஜால்ரா போட கால்கட்டு போட்டிருக்கிறது அ.தி.மு.க., இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Dharmavaan
ஜூன் 09, 2025 08:52

ஏன் முதல்வர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாததை கண்டிக்க வேயில்லை பச்சோந்திகள்


Bhakt
ஜூன் 08, 2025 22:28

இன்னும் சில மாதங்கள் தானே. ஆடட்டும் கயவ கண்மணிகள்.


குடிகாரன்
ஜூன் 08, 2025 22:23

காலிப் பயல்கள் கழகம்


RAMESH
ஜூன் 08, 2025 22:21

இந்து பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்லாத நபரை பற்றி பேச திராணி இருக்கா கோல்டு ராஜா......அப்புறம் பிரதமரை பற்றி பேசலாம்...ஓட்டு அரசியல்....ஷா பேசிய டாஸ்மாக் ஊழல்....பெண்கள் பாலியல் புகழ் உனக்கே தெரியும் யார் என்று....புகார் கொடுத்து உள்ளார்கள் ஞாபகம் இருக்கா....நீ பேசுகிறாய் உலகம் போற்றும் உத்தமர் பற்றி....


A P
ஜூன் 08, 2025 21:14

உலகமே போற்றும் உத்தமராக இருக்கும், நேர்மை ஒன்றே தனது கொள்கையாகக் கொண்ட மோதி அவர்கள் இவருக்கும் சேர்ந்து தான் நாட்டின் பிரதமர் என்பதை வசதியாக மறந்து விட்டு, வருகிற 2026 தேர்தலில் தமிழ் மண் இவர்கள் வாயில் மண்ணை வாரிபோட்டு காறி துப்ப போவதை நினைத்து நினைத்து பயந்து போயிருப்பதால், இப்படி காலித்தனமாகப் பேசி வாங்கி கட்டிக்கொள்கிறார் போலும். பிற மதத்து பண்டிகைக்கும் வாழ்த்துச்சொல்லும் நல்லவரைப் பார்த்து பொறாமையே தவிர வேறொன்றுமில்லை. இந்த திருட்டுக் கும்பலே நாசமாகப் போகக் கடவது. இப்படி ஆயிரக்கணக்கான பேர் சாபம் இடும்போது, யாருடைய வாக்காவது பலிக்காமலா போய்விடும். இருக்குடீ ஒங்களுக்கு 2026ல் .


sankaranarayanan
ஜூன் 08, 2025 19:55

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பாரத பிதாமரை விமர்சனம் செய்திருப்பது, கண்டிக்கத்தக்கது முதலில் நல்ல பாலை கொடுக்கட்டும் தண்ணீர் கலந்த பாலையும் ,அளவை குறைத்து பாக்கெட் போடும்,தில்லு முல்லு வேளைகளில் ஈடுபடும் இந்த திராவிட மாடல் அரசு யாரோ கூவு என்பதற்காக கூவக்கூடாது உண்மையை தெரிந்து பேச வேண்டும் .இல்லையேல் இவர் பால் விற்பனையில் செய்யும் முழு தகிடுத்தனத்தையும் இனி வெளியிடுவோம்.


Nathan
ஜூன் 08, 2025 19:24

முஸ்லிம் மக்களை நம்பி பிழைப்பு நடத்தும் திருடர்கள் முன்னேற கழகம் அதன் ஏஜென்டுகளை எப்படி இழிபிறவிகளாக வளர்த்து விட்டுள்ளது பாரீர்


ஆரூர் ரங்
ஜூன் 08, 2025 19:09

முஸ்லிம்கள் மட்டுமே உலகெங்கும் நிறைந்து ஒரே காலிபேட் இஸ்லாமிய நாடாக திகழ வேண்டும் என்பதுதான் இந்தப் பண்டிகையின் கோட்பாடு / குறிக்கோள் என்றால் மோடி இதற்கு வாழ்த்து கூறியிருக்க வேண்டியதில்லை.


Subburamu Krishnasamy
ஜூன் 08, 2025 19:02

Unqualified political netas are more in Tamizhagam. Their comments are highly in bad taste. No maturity, no decency, behavior like mentally retarded person


பாரத புதல்வன்
ஜூன் 08, 2025 18:44

இவர் ஒரு கிரிப்டோ.... பிறவியும் கீழ்தரம் .... அவன் பேசுவதும் கீழ்தரம் கொண்ட வார்த்தைகள்.... 2026 ல் இந்த நாதரிகளை விரட்டி அடிப்போம் மக்களே.


புதிய வீடியோ