வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெண் ஆய்வாளரை பணியமர்த்தினால் அனைத்து பெண்களும் பரிசோதனை செய்து கொள்வார்கள். ஆள்வது திமுக.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில், மார்பக புற்றுநோயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், 25 சதவீதத்துடன் மார்பக புற்றுநோ யில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுதும் பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டதில், 23 சதவீத அளவிற்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு அடுத்த நிலையில், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்கள் வருகின்றன. உலகளாவிய புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில், 23 சதவீத அளவுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. தமிழகம், 25 சதவீதத்துடன் மார்பக புற்றுநோய் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r0czmdds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆரம்ப நிலையில், 'மேமோகிரா ம்' பரிசோதனையில் கண்டறிந்தால் மார்பகத்தை அகற்றாமல் குணப்படுத்தலாம் என்கிறார், மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் எம்.ரமேஷ். அவர் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனத்தின், ஐ.ஏ.ஆர்.சி., 'குளோபோகான்' இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புள்ளி விபரங்களை வெளியிடுகிறது. 2022 மற்றும், 2024ல் வெளியிடப்பட்ட புள்ளி விபர பட்டியலில், மார்பக புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது என்பது உறுதியாகிறது. 40 வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண் என்பது முக்கிய காரணம். முதுமை, குடும்ப ரீதியான பாதிப்பு, 10 வயதுக்கு குறைவான நிலையில் பூப்படைதல், 50 வயதுக்கு மேல் தாமதமாக மாதவிடாய் நிற்பது போன்ற காரணங்களால், இந்நோய் வரலாம். உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மது, புகைப்பழக்கம், 35 வயதுக்கு மேலான குழந்தைப்பேறு, பாலுாட்டாதிருத்தல் போன்றவையும் காரணங்கள் என்றாலும், இவற்றை எளிதாக தவிர்க்கலாம். மார்பக புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இருந்தால், முழுமையாக குணப்படுத்தலாம். இதை ஆரம்ப நிலையில் எளிய முறையில் கண்டறியலாம். அதற்கான அதிநவீன பரிசோதனை மேமோகிராம் கருவிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் உள்ளதால், பெண்கள் தயக்கமின்றி பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர்-
பெண் ஆய்வாளரை பணியமர்த்தினால் அனைத்து பெண்களும் பரிசோதனை செய்து கொள்வார்கள். ஆள்வது திமுக.