உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம்: கருணாநிதி அங்கீகரித்ததை ஸ்டாலின் புறக்கணிப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம்: கருணாநிதி அங்கீகரித்ததை ஸ்டாலின் புறக்கணிப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில், முதல்வர் ஸ்டாலின், நாடு முழுதும் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான 'ரூ ' என குறிப்பிட்டு உள்ளார். இந்த மாற்றத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.ரூபாய் என்பதை குறிப்பிட நாடு முழுவதும் தேவநாகிரி எழுத்துரு, கடந்த 2010ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசும், இந்த குறியீட்டை பயன்படுத்தி வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=suuft5ou&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற வாசகத்துடன் 2025- 2026ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் லச்சினயை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில், ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான 'ரூ' என்பதை முதன்மைப்படுத்தி லச்சினை வடிவமைக்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்திய அரசின் 14 அலுவல் மொழிகளில் ஒன்றை தான் முதல்வர் பயன்படுத்தி உள்ளார். இது தாய்மொழி மீதான பற்றை வெளிப்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரானது இல்லை எனக்கூறப்பட்டு இருந்தது. இந்த மாற்றம் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025 -26 ம் ஆண்டுக்கான தி.மு.க., அரசின் பட்ஜெட்டில், தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டு உள்ளது. இந்த குறியீடு, பாரதம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நமது நாணயத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் ஆவார். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழகத்தில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய - மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில், அடுத்ததாக இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தந்தை அங்கீகரித்ததை மகன் புறக்கணிக்கிறார்

ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கிய உதயகுமார், தந்தையும் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தர்மலிங்கம், தாயார் ஜெயலட்சுமி, மூத்த சகோதரர் ராஜ்குமார், இளையசகோதரர் விஜயகுமார் ஆகியோருடன் சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடந்த 2010 ஜூலை 24 அன்று சந்தித்தார்.இந்த புகைப்படத்தை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: ரூபாய்க்கான குறியீடு தேவநாகிரி முறையில் இருப்பதால் தான் அதனை நீக்கி உள்ளதாக, தமிழக மாநில திட்டக்குழு நிர்வாக துணைத்தலைவர் கூறியுள்ளார். இவரை போன்ற நபர்கள் முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்திருக்கின்றனர்.திறமையற்றதை மறைக்க வெற்று விளம்பரங்களுடன், அர்த்தமற்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தந்தை அங்கீகரித்ததை மகன் புறக்கணிக்கிறார். இவ்வாறு அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

கவலையில்லை

ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் அளித்த பேட்டி ஒன்றில், ' அரசு முடிவெடுத்து உள்ளது. இதற்கு உரிய காரணம் இருக்கும். அது எனக்கு தெரியாது. இதுவே எனக்கே செய்தியாக உள்ளது. என்ன சொல்வது என தெரியவில்லை. இக்குறியீடு 2010 முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பயன்படுத்தியது. இதனை மாற்ற வேண்டும் என தமிழக அரசு நினைக்கலாம். அதற்கு காரணம் இருக்கலாம். தமிழக அரசின் செயலில் எந்த வருத்தமோ, கவலையோ இல்லை ' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 101 )

RAMKUMAR
மார் 14, 2025 04:57

இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. நான் அப்பவே சொன்னேன்


ANACHI
மார் 14, 2025 04:17

ரூ ...வினால்...திருட்டு கும்பலுக்கு சிக்கிரம் பாடை ரெடி...


பாஸ்கர் மு
மார் 14, 2025 03:00

மக்களை இன,மதம், மொழி, சாதி,நிறம் ரீதியாக பிரித்தாள்வதுதான் அரசியலா? தேர்தலில் பதவி பறி போய் விடும் என்ற பதட்டத்தில் தமிழ் பற்று அதிகமாகி கொண்டிருக்கிறது போலிருக்கிறது.


ES
மார் 14, 2025 01:47

Nothing wrong in this. Just go read other news sites to see how bad government is performing in north states before preaching crap about our own state. They are not gods to dictate us what to do


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 13, 2025 23:28

ஆஹா ...... இந்த நடவடிக்கை மூலம் தமிழை வாழவைத்துவிட்டது திமுக .... ஊ பீ யி ஸ் பெருமிதம் ......


Bhakt
மார் 13, 2025 23:24

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என நிருபிக்கும் நைனா. மீன் கொழுத்தால் கொக்குக்கு லாபம்.


Kumar Kumzi
மார் 13, 2025 22:46

தமிழா மொதல்ல உன் பெயரை தமிழில் மாத்து கேடுகெட்ட தேசத்துரோகி திருட்டு திராவிஷ துண்டுசீட்டு


தத்வமசி
மார் 13, 2025 22:45

இப்படி செய்வதால் ஆட்சியின் அலங்கோலம் மாறப் போவதில்லை. உலகளாவிய வர்த்தகத்தில் போட்டியிடவே ரூபாய்க்கு ஒரு வடிவம் கொடுக்க அந்த குறியீடு பயன்படுத்தப் பட்டது. ரூ என்று போட்டு விட்டால் கும்மிடிபூண்டியையும் தாண்ட முடியாது. ஆக இவர்களின் அறிவு இவ்வளவு தான். இதை ஏற்கனவே தமிழக மக்கள் தங்களுக்குள் எழுதும் எழுத்து தான் இது.


Suppan
மார் 13, 2025 22:24

ரூபாய்க்கான சர்வதேசக்குறியீடு இவர்களுடைய கூட்டணி ஆட்சியின் போதுதான் அறிமுகம் ஆனது ? அப்பா செய்ததை மகன் புறக்கணிக்கிறார்.


Suppan
மார் 13, 2025 22:20

"யார் அந்த சார்", "டாஸ்மாக் கொள்ளை " "பிஎம்ஸ்ரீ சொதப்பல் " ஆகியவற்றை மடை மாற்ற இரு மொழிக்கொள்கை, ரூ ஆகியவற்றைக் கையில் எடுத்திடுக்கிறது இந்தக் கோமாளி அரசு .


சமீபத்திய செய்தி