உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஊதிய உயர்வு அறிவிப்புக்கு டாஸ்மாக் ஊழியர்கள் அதிருப்தி

ஊதிய உயர்வு அறிவிப்புக்கு டாஸ்மாக் ஊழியர்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாஸ்மாக்' கடைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்பட இருப்பதாக, சட்டசபையில் நேற்று முன்தினம், அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதற்கு, பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச்செயலர் தனசேகரன் அறிக்கை: தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவர் என்ற தேர்தல் வாக்குறுதி, எப்போது நிறைவேற்றப்படும் என்பது தெரியவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல் வழங்கப்பட்ட 2,000 ரூபாய் தொகுப்பூதிய உயர்வை, இந்த அரசு மூன்றாண்டுகள் எதுவும் செய்யாமல், அதை நகல் எடுத்து செயல்படுத்தி இருப்பது, ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மணி
ஏப் 24, 2025 20:58

கூடுதலா வாங்கறது போதும் உயர்வு கூடாது


RAMESH
ஏப் 24, 2025 18:53

பத்து ருபாய் காசு வாங்கும் போது இது எதற்கு....அரசுக்கு வீண் செலவு.....


Admission Incharge Sir
ஏப் 24, 2025 16:31

குடுக்கற கலெக்ஷனுக்கும் கிடைக்கிற கமிஷனுக்கும் சம்மந்தமே இல்லையே, எங்கயோ இடிக்குதே என்னும் உங்கள் மைண்ட்வாய்ஸ் இங்குவரைக்கும் கேட்கிறது. உங்களுக்கு அவ்வளவு தான் பங்கு, மீதி உள்ளதை பலபேருக்கு பிரிக்க வேண்டும், புரிகிறதா?


டாஸ்மாக் தாசன்
ஏப் 24, 2025 07:16

இதனால் டாஸ்மாக் குளிர்பானங்கள் விலை உயர்வு ஆகக் கூடாதுன்னு இறைவனை வேண்டுகிறேன்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை