உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு தராததால் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடங்கும் அபாயம்

எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு தராததால் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடங்கும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கல்வி திட்டப்பணிகளுக்கான மத்திய அரசின் நிதி வழங்கப்படாததால், ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசு, 6 - 14 வயதுடைய குழந்தைகளின் படிப்பை உறுதி செய்யும் வகையில், சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இலவச கல்வி

மேல்நிலை வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கான இலவச கல்வியை உறுதி செய்யும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த 2018ல், இவை இரண்டும் இணைக்கப்பட்டு, எஸ்.எஸ்.ஏ., எனும் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சமக்ர சிக் ஷா அபியான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முதலில், 50:50 என்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கின. பின், 55:45 என்ற விகித்திலும், தற்போது, 60:40 என்ற விகிதத்திலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்நிலையில், 2020ல், மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. இதை, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்கவில்லை. ஆனாலும், அவற்றில் உள்ள பல கருத்துகளை ஏற்று, செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பி.எம்.ஸ்ரீ எனும் திட்டமும் அதன் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. அதாவது, நாட்டில் உள்ள சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, புதிய கல்விக் கொள்கையின் செயல் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பள்ளிகளின் முடிவுகளின் அடிப்படையில், அது விரிவுபடுத்தப்படுகிறது.அந்த வகையில், 'தமிழக அரசும் பி.எம்.ஸ்ரீ திட்டம் உள்ளிட்ட தேசிய புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான், சமக்ர சிக் ஷா அபியான் திட்ட ஒதுக்கீட்டை வழங்க முடியும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.,க்கள் மற்றும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோர் வலியுறுத்தியும், மத்திய அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதை சரி செய்ய, தமிழக அரசு தன் பங்களிப்பை முன்கூட்டியே வழங்கி, நிலைமையை சமாளித்து வருகிறது. இதனால், தமிழக கல்வித் துறையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் என, கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

ரூ.2,152 கோடி

இதுகுறித்து, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் செல்லய்யா கூறியதாவது: தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்விக்காக மத்திய அரசு, 2,152 கோடி ரூபாயும், கடந்தாண்டு நிதியாக 249 கோடி ரூபாயும் தர வேண்டும். இதுவரை தராததால், 12,000 பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாற்றுத் திறனாளிகளின் பராமரிப்பு ஆசிரியர்கள் என, 15,000 ஆசிரியர்களின் ஊதியம், வகுப்பறை கட்டடங்கள், கற்றல் உபகரணங்கள், பயிற்சிகள் தடைபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, ஆசிரியர் பயிற்றுனர் சங்க தலைவர் முருகன் கூறியதாவது: கடந்த 2018ல், மாநில கல்வி திட்டங்களுக்காக ஒப்பந்தம் செய்த மத்திய அரசு, 2020ல் உருவான தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்து, எஸ்.எஸ்.ஏ., நிதியை மறுப்பது முறையல்ல. இதனால், 1.50 லட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ உதவி, சக்கர நாற்காலி, காதுகேட்கும் கருவி உள்ளிட்டவற்றை வாங்க முடியவில்லை.அவர்களுக்கான, 'பிசியோதெரபிஸ்ட்' உள்ளிட்டோரையும் நியமிக்க முடியவில்லை. மேலும், அவர்களுக்கு மாத உதவித்தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படுவதும் நிறுத்தப்படும். ஆதரவற்ற மாணவியருக்கான விடுதி, உணவு, படிப்பு உள்ளிட்டவையும் நிறுத்தப்படும்.

கைத்தொழில்

மாணவியரின் தற்காப்புக் கலைகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாததால், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும், கலை வகுப்புகளான ஓவியம், இசை, கைத்தொழில் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளன. பள்ளிகளுக்கான ஆய்வக கருவிகள், கம்ப்யூட்டர், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதைச் சார்ந்து, பத்தாண்டுகளுக்கும் மேல் பணியாற்றும், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள், 3,000 பயிற்றுனர்கள், 1,800 பிசியோதெரப்பிஸ்ட், 436 வட்டார வள மையத்தினர், 15,000 நிரந்தர ஆசிரியர்கள் உள்ளிட்ட, 32,000 ஊழியர்களின் பணிப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், தமிழகத்தின் கல்வி கட்டமைப்பே கலகலக்கும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.n. Dhasarathan
பிப் 19, 2025 21:11

எஸ் எஸ் எ நிதியை நிறுத்தியதற்கு முக்கிய காரணமே அண்ணாமலை என்றுதான் சொல்கிறார்கள், துரோகம் செய்வது இவர்தான், இவர் தினம் நுறு பொய்கள் சொல்வது ஏன் தெரியுமா ? திருப்பி திருப்பி ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று மூட ம்பிக்கையை சொல்வதை நம்புகிறார் போல. எத்தனை முறை சொன்னாலும் பொய் பொய் தான், உண்மை ஆகமுடியாது. ஒன்றிய அரசை தூண்டிவிட்டு தமிழகத்தில் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடக்குவது, பல்கலை கழகங்களை அழிப்பதற்கும் தமிழகத்தை நிதி நெருக்கடியில் சிக்க வைக்கவும் இவர்தான் முயற்சி செய்கிறார்.


ManiK
பிப் 19, 2025 19:05

அறிவில்லாத திமுக அரசும், நிதி குடும்பமும் தான் இதற்கான காரணம்.


ஆரூர் ரங்
பிப் 19, 2025 17:59

இத்திட்டம் வரும் முன் சம்பளம் கொடுத்துக் கொண்டுதானே இருந்தார்கள்?. ஒரு திட்டத்தையே எதிர்த்து கொண்டே அதற்கான நிதியையும் கேட்டால் எப்படி? யாரு அப்பன் வீட்டுப்பணம்?.


cyber cyber
பிப் 19, 2025 16:42

நைனாவிடம் கேட்டு பெரவும்


Sridhar
பிப் 19, 2025 13:57

மொத்த மத்திய கல்வி நிதிக்கும் இந்த எஸ் எஸ் ஏ திட்டம் ஒன்றுதானா? இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லையென்றால், கல்விக்கான மொத்த செலவையும் மாநில அரசுதான் ஏற்கவேண்டுமா? இதை பற்றிய விவரங்கள் மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால், ஏன் இதுசம்பந்தமாக முன்கூட்டியே ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துயரத்துக்கு ஆளாக்குகிறார்கள்? 4 லச்சம் கோடி கடன் வாங்கத்தெரிந்த மாநில அரசுக்கு 2000 கோடி ஒதுக்குவது மிக சிரமமான விசயமா?


Muralidharan S
பிப் 19, 2025 10:46

அறுபது வருடங்களாக திராவிஷ ஆட்சிகளில் பாடத்திட்டத்தின் தரம் குறைந்து, ஆசிரியர்களின் தகுதி , ஒழுக்கம் ஏகப்பட்ட பாலியல் புகார்கள் இன்று பள்ளிகளில் இருந்துதான் எழுகிறது, தரம் எல்லாம் குறைந்து, பள்ளிகளின் தரமும் குறைந்து, இதனால் மாணவர்களின் தரமும் குறைந்து, ஒழுக்கமும் குறைந்து பள்ளி மாணவர்களே பாலியல் குற்றங்களிலும் போதை பழக்கத்திலும் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்காலமே ஏற்கனவே முடங்கித்தான் போயுள்ளது.. என்னமோ மத்திய அரசு நிதி தராதால்தான் மாணவர்களின் எதிர்காலம் முடங்கும் அபாயம் என்று தலைப்பு இட்டு இருக்கிறீர்கள்.. அறுபது வருடங்களாக கோமாவில் இருந்தீர்களா ???.


N Sasikumar Yadhav
பிப் 19, 2025 04:57

கல்வியில் கூட மிக கேவலமான அரசியல் செய்கிறது திருட்டு திமுக . திராவிட களவானிங்க நடத்துகிற பலமொழிகள் கற்றுத்தரும் அரசு பள்ளிகளில் மட்டும் மூன்று மொழிகள் கற்று கொடுத்தால் திராவிட களவானிங்களின் கொள்ளையடிக்கும் வியாபாரம் படுத்துவிடும் என்பதற்காக மக்களிடம் பொய் சொல்லி பீதியை கிளப்புகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை