உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சட்டசபை தேர்தலை கள் நிர்ணயிக்கும்

சட்டசபை தேர்தலை கள் நிர்ணயிக்கும்

பீஹாரில் மதுவிலக்கு ஏற்படுத்தப்பட்ட பின், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. அங்கும் கள்ளச்சாராய பலி உண்டு. ஆனால் பீஹார் அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்துவிட்டது.இழப்பீடு கொடுத்தால், கள்ளச்சாராயத்தை ஊக்குவிப்பதாக அமைந்து விடும் என்று விளக்கம் அளித்தது. ஆனால், தமிழகத்திலும் கள்ளச்சாராய பலி நடந்தது. இங்குள்ள அரசு விரைந்து சென்று, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு தருகிறது. கள் விற்பனை மற்றும் கவன ஈர்ப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. அதற்கு பீஹார் முதல்வரை அழைக்கிறோம். வரும் 2026 சட்டசபை தேர்தலை கள் நிர்ணயிக்கும். தாய்ப்பாலுக்கு நிகரானது கள். திருச்சியில் நடைபெறும் கவன ஈர்ப்பு மாநாட்டிற்கான பிரசார வாகனம், ஒவ்வொரு ஊருக்கும் செல்லும். அது, கள்ளுக்கு தடையை நீக்க வலியுறுத்தி பரப்புரை செய்யும்.நல்லசாமி, கள் இயக்க தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

bgm
மே 19, 2025 21:28

வாக்குரிமை என்பது பேனா, கத்தியை விட மிக கூர்மையான ஆயுதம். அதை சரிவர பயன்படுத்தினாலே ஆட்சியாளர்கள் சரிவர ஆட்சி செய்வர்.


xyzabc
மே 19, 2025 10:38

நல்லசாமி அவர்களே, தமிழகத்தில் டாஸ்மாக்கை நிறுத்தினால் கெட்டசாமி ஆகி விடுவீர்கள்.


Kulandai kannan
மே 19, 2025 10:02

தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்கிறார்.


மணி
மே 19, 2025 09:22

விவசாயிக எக்காலத்திலும் ஒன்றிணய போவதில்ல அது நாரயணசாமி நாயுடு உடன் முடிந்துவிட்டது. ஒருங்கிணைக்க வலுவாண தலமை இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை