உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்

படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தபணி திட்டமிட்டபடி நேற்று துவங்கியது. அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டாத நிலையில், தி.மு.க., பூத் ஏஜன்டுகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, 2004ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பது, இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் போன்றோரை நீக்குவது, இதன் பிரதான நோக்கம். இதனால், சில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பணியை ஒத்திவைக்க வலியுறுத்தி, தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.எனினும், திட்டமிட்டபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர். கடந்த 2002 - 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் வீடுகளுக்கு சென்று, கணக்கெடுப்பு படிவத்தை வினியோகம் செய்தனர். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, அடுத்தமுறை வரும்போது உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூறி சென்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு, தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சி தலைமை உத்தரவுபடி, பூத் ஏஜன்டுகள், தேர்தல் அலுவலர்களுடன் சென்றனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒரு பூத் ஏஜன்டு, இரண்டு துணை ஏஜன்டுகள், 100 வாக்காளர்களுக்கு ஒரு ஏஜன்ட் என, தேர்தல் பணிக்கு, கட்சி தொண்டர்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது. அதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலருடன், தி.மு.க., தரப்பில் மட்டும், 10க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். கூட்டணி கட்சி பூத் ஏஜன்டுகளும் சென்றனர். ஆனால், அ.தி.மு.க, தரப்பில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
நவ 05, 2025 15:54

டக்கு முக்கு தாளம். திராவிட கும்பலால் நாறிய அரசியல். ஆரம்பித்த தலைகளெ சரி இல்லை. மணியம்மையை யால் ஒரு கட்சி உதயம். அவர்களின் சட்ட சபை நாகரிக பேச்சுக்கள். நாதம் பிடித்த கும்பலின் உறைகள் மக்களின் புத்தி பேதலித்து திருடர் கூட்டத்தை தவறான இடத்தில் உட்கார வைத்தகு அழகு பாரதத்தின் விளைய்வு வரி பணம் கொள்ளைய போய் கொண்டிருக்கு.


Subramaniyan Narayanamoorthy
நவ 05, 2025 13:07

தேர்தல் கமிஷனுக்கு என தனியாக எந்த ஒரு அலுவலரும் மாநில முதன்மை தேர்தல் அலுவலரை தவிர கிடையாது. தேர்தல் தொடர்பான எந்த பணியாக இருந்தாலும்- வாக்காளர் பெயர் சேர்க்க கணக்கெடுப்பு செய்தல், வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், தேர்தல் நடத்துதல் இவை எல்லாவற்றையும் அந்தந்த மாநில ஊழியர்கள் தான் செய்கிறார்கள். மாநிலத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கு / கட்சிக்கு தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை. வாக்காளர் கணக்கு எடுக்கும் பணியில் ஆளும் கட்சிக்கு பாதகமாக நடந்து கொண்டால் தங்கள் நிலை என்ன ஆகும் என்று அரசு ஊழியர்களுக்கு தெரியாதா. 2002 - 2004 ஆண்டுக்கு பின்பு வெளியான வாக்காளர் பட்டியலில் இருக்கும் தனது பெயரை மீளவும் பட்டியலில் தக்க வைத்துக் கொள்ள ஒருவர் அளிக்க வேண்டிய ஆதாரங்கள் கேட்டால் அது தவறா? அது தவறு என்றால், ஏற்கனவே 2002-2004 க்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் எந்த ஆதார அடிப்படையும் இல்லாமல் பெயர் சேர்க்க மாநில அரசு ஊழியர்கள் அவர்கள் தானே கணக்கு எடுத்தார்கள் பரிந்துரைத்தார்களா? 2002- 2004 ன் போது நடந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் போது கேட்கப்பட்ட அதே ஆதாரங்களை மட்டுமே கேட்க வேண்டும் என்றால் தற்போது உள்ள பட்டியலில் காணும் குறைகளை களைய வேறு கூடுதல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என்பது தவறா? நடைமுறையில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப சட்ட விதி முறைகள் / வழிகாட்டுதல்கள் வகுக்கப்பதில்லையா? ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகியவை , அடுத்த ஆண்டின் ஜனவரி முதல் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அப்போதும் கூட அளிக்கப்படும் விண்ணப்பங்கள், வீடு தோறும் சென்று சரி பார்க்கப்பட்ட பிறகு தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்ட துவக்கத்திலும், மழை காலம், பண்டிகை காலம் ஆகியவை வந்து கொண்டு தானே இருந்தன. அது மட்டும் இல்லாமல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு கூட வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணி நடை பெற்று வாக்கு சாவடிக்கு அந்த பட்டியலும் தானே வாக்கு பதிவின் போது அனுப்பப்படுகிறன்றன. அப்போது எல்லாம் எழுப்பாத அரை கூவல் இப்போது மட்டும் ஏன்?


Apposthalan samlin
நவ 05, 2025 11:10

பீகார் மாதிரி தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையம் தில்லு முள்ளு நடக்காது தமிழக குறிபாக தென் இந்தியா மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர் புதுசாக வெளி மாநிலத்தவர்களை சேர்க்கும் பொழுது ஆவணங்கள் சரி பார்க்க வேண்டும் .


ராமகிருஷ்ணன்
நவ 05, 2025 07:04

கள்ள ஓட்டு போடுவதற்கு எந்தெந்த வீடுகளில் வாய்ப்பு உள்ளது என்று திமுகவினர் கணக்கு எடுப்பதற்கு அதீத ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் எதிர் கட்சி ஆட்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நோட்டம் இடுகின்றனர். ஆபீஸ் சென்று வாக்காளர் பெயர்களை நீக்கி விடுவார்கள். அதிக திமுகவினர் வருவதற்கு அதுதான் காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை