உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திராவிட மாடல் அரசு; ஆன்மிக அரசு தான் முதல்வரின் மனம் குளிரவைத்த ஆதீனங்கள்

திராவிட மாடல் அரசு; ஆன்மிக அரசு தான் முதல்வரின் மனம் குளிரவைத்த ஆதீனங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''திராவிட மாடல் அரசு என்பதை விட, இது ஒரு ஆன்மிக அரசு,'' என, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் பள்ளி, சூளைமேடு, பாரத்வாஜேசுவரர் கோவில் அஞ்சுகம் துவக்கப் பள்ளி ஆகியவற்றுக்காக புதிய கட்டடங்களை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அந்நிகழ்வில், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:

திராவிட மாடல் அரசு என்பதை விட இது ஒரு ஆன்மிக அரசு. காரணம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அதிக திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆன்மிக விழாவில் தா, முதல்வர் அதிகம் கலந்து கொள்கிறார். அதனால் தான் இதை ஆன்மிக அரசு என்கிறேன். கல்விக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாக நம் முதல்வர் செயல்படுகிறார். எனக்கு முன் இருந்த ஆதீனங்கள் காலத்தில் ஒரு சில கோவில்களுக்கு மட்டுமே குடமுழுக்கு செய்யப்பட்டன. காரணம், பணம் இல்லாததால் அல்ல; செய்வதற்குரிய அங்கீகாரம் வழங்குவதற்கு உரிய ஆட்சி அமையாததே காரணம். ஐந்து ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்து, துறை சார்பில் 26,000 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 'தேர்' நிகழ்ச்சிகளுக்கு கூட இந்த அரசு தான் அதிக அளவில் செய்து கொடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.குன்றக்குடி பொன்னம்பல தேசிக அடிகளார் பேசுகையில், ''ஆன்மிகப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் முதல்வரை பாராட்டுகிறோம். அரசும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் இரு கண்களைப் போல்; எனவே, அரசுப் பள்ளிகளுக்கு கிடைக்கும் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு சலுகை, அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவருக்கும் கிடைத்தால் மேலும் சாதனைகள் தொடரும். காரணம், அங்கும் ஏழை பிள்ளைகள் தான் படிக்கின்றனர்'' என்றார்.மயிலம் பொன்னம்பலம் ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பேசுகையில், ''முருகன் என்றால் தமிழ் கடவுள் தான்; அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த நான்கு ஆண்டுகளில் முருகனை போற்றும் வகையில், 3,000 கோவில்களில் குடமுழுக்கு தமிழக அரசு செய்திருக்கிறது,'' என்றார். இந்நிகழ்வில், ஸ்ரீபெரும்புத்துார், ஸ்ரீஎம்பார் ஜீயர் மடம் ஸ்ரீ அப்பன் உலகாரிய ராமானுஜ எம்பார் ஜீயர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

A P
ஜூன் 28, 2025 23:20

திருநீறு கூட பூசாத முதல்வரின் கீழ் இயங்கும் அரசு, எப்படி ஆன்மீக அரசு ஆகும் என்று மக்களுக்கு இந்த ஜடாமுடிகள் விளக்கிச் சொல்ல கடமைப் பட்டுள்ளார்கள்.


Ramesh Sargam
ஜூன் 28, 2025 22:38

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். மதுரையில் அன்று நடந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றியடைந்ததை பார்த்து திமுக போன்ற கட்சிகளுக்கு திண்டாட்டம், திண்டாட்டம்.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 22:02

காலில் விழுந்த சின்னதுக்கு பாவமன்னிப்பு வழங்கிய இரண்டு வைணவ மடாதிபதிகளும் வரலையா?


sankaranarayanan
ஜூன் 28, 2025 20:23

அமைச்சர் சேகர் பாபுவின் தில்லு முல்லு ஆட்டங்கள் இனி எடுப்படாது ஒருபுறம் சனாத தர்மத்தை அழிப்பது மறுபுறம் ஆன்மிக மாநாடு என்று கூறுவது யார் காதில் பூவை இவர் சுற்றுகிறார்


V RAMASWAMY
ஜூன் 28, 2025 19:52

Forgive them Oh Lord, for, what they spoketh, not what they knew.


krishna
ஜூன் 28, 2025 17:00

IVARGAL AADHINANGAL.VEKKA KEDU.IVARGALAI MSKKAL BOYCOTT SEYYA VENDUM AANAAL ONNU MURUGAN MAANAATUKKU PINNAR DRAVIDA MODEL KUMBAL PAITHIYAM PIDITHU ALAIGIRADHU DHIDIR KADAVUL PAASATHIL.VITTA THUNDU SEATTU SENGAL THIRUDAN THERDHAL NERUNGUM PODHU PAZHANIKKU PAAL KAAVADI EDUTHAALUM AACHARYAM ILLAI.


mohana sundaram
ஜூன் 28, 2025 16:51

இவனுங்களுக்கு மூளை மழுங்கி பல நாட்கள் ஆகிவிட்டது


theruvasagan
ஜூன் 28, 2025 16:09

இது என்ன.ஆதினங்களுக்கு வந்த சோதனை. உங்கள் மீது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மரியாதையை குலைத்துக் கொள்ளும் விதமாக நடக்க எப்படி உங்களுக்கு மனது வந்தது.


பாரத புதல்வன்
ஜூன் 28, 2025 15:56

ஆதீனங்கள் கடவுள் மறுப்பு கொள்கை வாதிகளை புகழ்வது வெட்கக்கேடானது.... முதலில் இவர்கள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும். சுயமாக பேசாமல் யாரோ பேச வைக்கின்றனர்.


madhesh varan
ஜூன் 28, 2025 15:49

பிஜேபி சங்கிபசங்களுக்கு ஜெலுசில் பர்சல்பண்ணுங்க, இல்லாட்டி பவன்கல்யானு, அவன் அன்னான் சிரஞ்சீவி னு இன்னும் சில பைத்தியக்காரனுங்களை கூட்டிட்டுவந்து டிராமா போடுவானுங்க, சிரிப்பா இருக்கும்,


பாரத புதல்வன்
ஜூன் 28, 2025 16:16

200 ஓவா கொத்தடிமை க்கு பசுமாட்டு கோமியம் பார்சல் பண்ணுங்க... அப்ப தான் புத்தி வரும்..... உழைச்சி சாப்பிட தோணும்.... இல்லன்னா அடுத்தவனுக்கு ஜெலுசில் வாங்க அறிவுரை சொல்வது எளிது....


gs
ஜூன் 28, 2025 16:18

dash


krishna
ஜூன் 28, 2025 17:02

MADHESH UNNAI PONDRA KEVALA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI 200 ROOVAA OOPI KUMBALUKKU 200 ROOVAA OSI QUARTER IRU LANGAL.SANGI ENDRAAL DHEIVIGAM DESA PATTRU IRU KANGAL..IDHU KOODA UN MURASOLI MOOLAIKKU PURIYAADHU.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை