உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதம் பெரியாறு அணை!

மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதம் பெரியாறு அணை!

கூடலுார்: ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதம் என்ற சிறப்பை பெற்ற தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமான பணியை துவங்குவதற்காக (1987 செப்., 21) அடித்தள கல் இட்ட நாளை விவசாயிகள் நினைவு கூர்ந்தனர்.தென் தமிழகத்தில் தண்ணீர் இன்றி வறட்சி அதிகம் நிலவி வந்த போது அணை கட்ட இடம் தேர்வு செய்து முல்லையாறு பெரியாறு இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்காக 29.10.1886ல் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.அணை கட்டும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டது என்பதால் அணை நீரானது எல்லா காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேய அரசு ஒப்பந்தத்தில் நீண்ட பல்நோக்கு திட்டத்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

சிரமங்களுடன் கட்டப்பட்ட அணை

கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த இடத்தில் வனவிலங்குகள், பாம்புகள், ஆண்டின் பெரும்பகுதி ஓயாமல் பெய்யும் மழை என்ற இடையூறுகள் அதிகம் இருந்தது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு கட்டுமான பணியை துவக்குவதற்காக 1887 செப்.21 ல் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் லார்ட் கன்னிமாரா, அரசு செயலர் கர்னல் ஹாஸ்டெட்டுடன் இணைந்து ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் அணை கட்டுமான பணிக்கான முதல் கல்லை நட்டு பணியை துவக்கினார்.பல்வேறு இடையூறு களுக்கு மத்தியில் அணை கட்டுமானப் பணி நடந்தது. மணலும் சுண்ணாம்பும் கலந்து சுர்க்கிகளை உருவாக்கி, சிறு சூளைகளில் வைத்து சுட்டெடுத்து, 4 அங்குல சதுரத்திலும் ஒரு அங்குல கணத்திலும் கற்களுடன் மூன்று பங்கு மணலும் இரண்டு பங்கு சுண்ணாம்பு ஒரு பங்கு சுர்க்கியும் சேர்த்து கலவை தயாரிக்கப்பட்டது.கருங்கல்லை 6 அங்குல கணத்தில் உடைத்தெடுத்து அடுக்கி வைத்து சுர்க்கியும் கலவையும் உபயோகித்து அணை கட்டப்பட்டது. வெளியில் காணப்படுகின்ற கருங்கற்கள் கீழிருந்து 120 அடி உயரம் வரை இறக்குமதி செய்யப்பட்ட சிமென்டை பயன்படுத்தி பூசப்பட்டது. பல்வேறு சிரமங்களுடன் 5 ஆயிரம் தொழிலாளர்கள் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டனர். 1895ல் அணை கட்டி முடிக்கப் பட்டது.

அணை கட்ட செலவு

அன்றைய கணக்கின்படி முல்லைப் பெரியாறு அணை கட்டுமான பணிக்காக மொத்தம் ரூ.81.30 லட்சம் செலவானது. மதராஸ் கவர்னர் வென்லாக் பிரபு தலைமையில் 1895 அக்., 10ல் அணை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. பென்னிகுவிக் எனும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் அற்புதம் என முல்லைப்பெரியாறு அணை சிறப்பிக்கப்பட்டது. அந்த அதிசயத்திற்கு அடித்தள கல் இட்ட நாள் இன்று .

அணை கட்டும் போது இறந்த தொழிளார்கள்

பெரியாறு அணைக்கட் டு முகாமில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் படி 1892ல் 76 பேரும், 1893ல் 98 பேரும்,1894ல் 145 பேரும், 1895ல் 123 பேரும் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணம் அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு சிலரின் கல்லறை அணைப்பகுதியிலேயே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tetra
செப் 21, 2026 16:51

இதனால் தெரிவிக்கப்பட்டுள்ளது யாதெனில் கல்லணை என்ற அணை சோழனால் கட்டப்பட்டது அல்ல. அற்புதங்கள் எல்லாமே ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இவண் ஆங்கிலேய அடிமைகள்


ரங்கா
செப் 21, 2026 14:26

131 ஆண்டுகளாக அணை நீடித்து நிலைத்திருக்கிறது என்றால் இன்றைய நவீன இயந்திரங்கள் இல்லாமல் அன்றைய மனிதனின் உழைப்பு அளப்பரியது. இன்று லஞ்சம் வாங்கி நம்மூர் அரசியல்வாதிகளால் கட்டப்படும் கால்வாய்கள் சிறு மழைக்கே ஒரே மாதத்தில் போய் விடுகிறது.


உன்னுள் ஒருவன்
செப் 21, 2026 10:43

ஆங்கிலேயர்கள் அந்த காலத்திலேயே எப்படி இந்த அளவுக்கு மார்டனாக உள்ளார்கள் ஆச்சரியமாக உள்ளது... விமான போக்குவது இல்லாத அந்த காலத்திலேயே எப்படி இவ்வளவு பேர் நம்ம இடத்துக்கு வந்து தேனி வரை போயிருப்பார்கள்.. நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது


Radhakrishnan Seetharaman
செப் 21, 2026 09:45

ஆம், 1987ல் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. விளங்கிரும்


ராஜேந்திரன்,அரசங்குளம்
செப் 21, 2026 15:09

அடேய் போலி ராதா கிருஷ்ணா அச்சுப்பிழை என்பது நாளிதழ்களில் எப்போதாவது நடக்க கூடியதுதான் இந்த செய்திக்கு மட்டும் உன் comment ஐ போடு அதிகப்பிரசங்கி


Karthikeyan Mohan
செப் 21, 2026 07:34

Salute to everyone to build this historical Mullai periyar dam and those who dedicated and lost their life for us.


Shekar
செப் 21, 2026 10:37

Small correction, it is not Mullai periyar dam, it is Mullai periyaru dam.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை