உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆதவ் அர்ஜுனா பேசியது சரிதான் :சர்ச்சைக்கு கமா போடும் திருமா

ஆதவ் அர்ஜுனா பேசியது சரிதான் :சர்ச்சைக்கு கமா போடும் திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமைச்சர் உதயநிதியை விமர்சித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., வலியுறுத்தியுள்ள நிலையில், 'அவர் பேசியது சரியே' என கூறியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நான்கு ஆண்டுகளுக்கு முன், சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா' என்றார்.'ஆதவ் கருத்து எங்களுக்கு ஏற்புடையதல்ல; உதயநிதியை விமர்சித்தவர் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா வலியுறுத்தினார்.இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது:எல்லா கட்சியிலும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகளை சேர்த்துக் கொள்ளலாமா என, ஒவ்வொரு தேர்தலிலும், அவர்களது மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் கேட்கின்றனர். அதில், சேர்க்க வேண்டாம் என பெரும்பாலானவர்கள் சொல்கின்றனர். கடைசியில், தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தான் முடிவெடுக்கின்றனர்.அதேபோலவே, வி.சி., கட்சியிலும் அதன் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்து பேசுகின்றனர். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் தங்களுடைய கருத்தாக வைக்கலாம்; பேசலாம். ஒவ்வொரு கருத்தையும் தலைமையும் உள்வாங்கலாம். ஆனால், இறுதியில் தலைமை எடுப்பது தான் முடிவாக இருக்கும். வி.சி.,க்களை பொறுத்தவரை, கட்சியின் துணை பொதுச்செயலராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் எதிர்கால நலனுக்காக என்ன பேசினாலும் அது சரிதான். அதேபோல, கட்சியில் சீனியர்களாக இருக்கும் எம்.பி.,யாகவும், கட்சியின் பொதுச்செயலராகவும் இருக்கும் ரவிகுமார், துணை பொதுச்செயலர் வன்னியரசு ஆகியோர் கட்சி நலனுடன் சேர்த்து கூட்டணி நலனுக்காகவும் பேசியதும் சரியானது தான்.அதற்காக, கட்சியில் யாரையும் கருத்து சொல்லாதீர்கள் என தடுக்க முடியாது; தடுக்கவும் தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

theruvasagan
செப் 28, 2024 22:00

ராசா அர்ஜுன் ஆதவ். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நான் அங்கிட்டு நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும். உறவாட வேண்...டும்..ம்ம்ம். ம்ம்ம். இப்படியே கொஞ்சநாள் மெயின்டெய்ன் பண்ணுவோம்.


கடுகு
செப் 28, 2024 18:26

பனைமரத்துல ஒரு குத்து...தென்னைமரத்துல ஒரு குத்து...சூப்பர்ணே...


Manoharan. S. R.
செப் 28, 2024 13:19

திருமா வின் ஆசையை ஆதவ் மூலம் வெளிப்படுத்துகிறார்.


மோகனசுந்தரம்
செப் 28, 2024 13:08

இந்த விசிக கொத்தடிமைகள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள். அறிவாலயம் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள்


gopalakrishna kadni
செப் 28, 2024 11:36

பாவங்க திருமா. எவ்வளவு நாள் தான் காத்துக்கிடப்பாரு. அவரோட குமுறல் இப்படி வெளியே வருது.


gopalakrishna kadni
செப் 28, 2024 11:36

பாவங்க திருமா. எவ்வளவு நாள் தான் காத்துக்கிடப்பாரு. அவரோட குமுறல் இப்படி வெளியே வருது.


அஸ்வின்
செப் 28, 2024 09:22

கை தேர்ந்த நடிகன் தேற மாட்டார்


VENKATASUBRAMANIAN
செப் 28, 2024 08:16

எப்படியெல்லாம் நாடகம் போடுகிறார்கள். மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.


SUBBU,MADURAI
செப் 28, 2024 08:54

நாம் இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதாவது கட்சியின் அடி.மட்ட தொண்டர்களின் உணர்வுகளை ஆதவ் அர்ஜூன் பிரதிபலிக்கிறார் என்றும் அதே நேரம் விசிக கட்சியின் கூட்டணி கொள்கை கோட்பாடுகளை ரவிக்குமாரும் வன்னியரசும் எடுத்துரைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதெப்படி இருக்கு? திமுக கூட்டணியில் இருந்து எப்ப வேணாலும் கழண்டு போய் அதிமுககிட்ட கூட்டணி சேர்ந்துக்குவோம்னு மிரட்ட ஆதவ் அர்ஜுனாவை தூண்டி விடுவது. இங்கிட்டு எங்க திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி என்று திமுகவை ஐஸ் வைக்க வன்னியரசும் ரவிக்குமாரையும் பேச வைப்பது ஆக மொத்தம் ஏணி சின்னத்துக்கு ஒரு குத்து தென்னைமரத்துக்கு ஒரு குத்து எழுச்சித் தமிழரின் அரசியல் நிலைப்பாடு சூப்பர்ல!!


lana
செப் 28, 2024 06:52

நாம தான் காவிரி விவகாரத்தில் தெளிவாக சொல்லி விட்டது. கர்நாடக vck தண்ணீர் தர மறுக்கும். இங்கு உள்ள vck தண்ணீர் கேட்கும். அது தான் ஜனநாயகம்


ராம்
செப் 28, 2024 06:04

வளர்த்து விட்டதன் பலனை ஸடாலின் அனுபவிக்கப்போகிறார். கருணாநிதிக்கு தெரியும் எங்கே வைக்கவேண்டும் என்று.


சமீபத்திய செய்தி