உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதியை கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுக.,வில் மூன்று தரப்பினர் முயற்சி

உதயநிதியை கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுக.,வில் மூன்று தரப்பினர் முயற்சி

- நமது நிருபர் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில், தி.மு.க.,வில், மூன்று தரப்புக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lyq7phi5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அவரது மருமகன் சபரீசனும், 'பென்' நிறுவன இயக்குநர் மணிகண்டனும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஸ்டாலின் என்ன பேச வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, அனைத்தையும் 'பென்' நிறுவனம் தான் பார்த்து கொண்டது.

பொருளாதார நிபுணர்

ஆரம்பத்தில் இருந்தே தனி ரூட்டில் சென்றதால், உதயநிதியை சபரீசன் ஆட்களால், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தற்போது, கட்சியின் முகமாக உதயநிதி வளர்வதால், அவரை, தங்கள் வசம் கொண்டு வர, வெவ்வேறு வழிகளில் சபரீசன் முயற்சிக்கிறார். 'பென்' மணிகண்டனை, உதயநிதிக்கு பிடிக்காது என்பதால், அந்த இடத்துக்கு பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனை சபரீசன் கொண்டு வந்திருக்கிறார். அவர் வாயிலாக, உதயநிதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, சபரீசன் முயற்சிக்கிறார். உதயநிதி நண்பரான முன்னாள் அமைச்சர் மகேஷ், தேர்தலில் தோற்றதால், அவருக்கு போட்டியாக இருக்கும் முன்னாள் அமைச்சர் நேரு, எதிர்க்கட்சி துணைத் தலைவராகி, உதயநிதிக்கு நெருக்கமாகி வருகிறார். ஏற்கனவே, திருச்சியில் செல்வாக்கை இழந்த மகேஷ், கட்சியிலும் ஓரம் கட்டப்படுவோம் என பயப்படுகிறார். இதனால், உதயநிதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, அவரை மகேஷ் சுற்றி வருகிறார். உதயநிதி வசித்து வரும், அரசு பங்களாவான 'குறிஞ்சி' இல்லத்தில், இதுவரை இளைஞரணி நிர்வாகிகள் தான் ஆதிக்கம் செலுத்தினர். தற்போது, எல்லா நிர்வாகிகளையும் உதயநிதி சந்திப்பதால், இளைஞரணியினருக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது. எனவே, இளைஞர்அணியினர், உதயநிதியின் தனி உதவியாளர் செந்தில் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கி இருக்கின்றனர். உதயநிதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, இளைஞரணியினர் வாயிலாகவே, செந்தில் முயற்சி செய்கிறார். இந்த குழப்பத்தில், த.வெ.க., அரசுக்கு எதிரான செயல்பாடுகளில், உதயநிதி பின்தங்குகிறார்.

ஒரே அணி

அதற்கு, அவரின் அரசியல் செயல்பாடுகளை கவனிக்கும் குறிஞ்சி இல்ல அணிக்கும், இளைஞரணி தலைமையகமான அன்பகம் அணிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதே காரணம். இதை ஒன்றிணைத்து, ஒரே அணியாக செயல்பட வைத்தால், உதயநிதி வேகமெடுப்பார். இந்த சூழல் உருவானால், உதயநிதியை கட்டுப்படுத்தும் பிறரின் முயற்சி தோல்வி அடைந்து விடும். எனவே தான், அவரை சுற்றியுள்ள குழுவுக்குள் திட்டமிட்டு புகைச்சல் மூட்டப்படுகிறது. இதை சரி செய்யாமல், உதயநிதியால் வேகமாக செயல்பட முடியாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Muthaiyan
ஜூன் 26, 2026 18:10

திருட்டு திமுக சுருட்டிய பணத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் திமுக விற்கு இடமில்லை


ராஜன்
ஜூன் 25, 2026 18:02

உதயநிதி ஸ்டாலின் ஐ கட்டுப் படுத்த முடியும்


duruvasar
ஜூன் 25, 2026 15:08

நயமாக பேசினால் தாராளமாக சொல்லபடி நடப்பார் சிவனையும் விக்னேஷ்வரையும் . பூஜித்து வணங்கினால் எல்லாம் நன்மையில் முடியும்.


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஜூன் 25, 2026 14:44

திமுகவினர் எல்லோரும் சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவதில் நிபுணர்கள் மக்களை கொள்ளைகள் அடிக்க தயங்காதவர்கள். விஜய் மத்திய அரசின் உதவியுடன் ஊழல் கும்பலுக்கு முடிவு கட்ட வேண்டும்.


jss
ஜூன் 25, 2026 12:58

ஜெய ரஞ்சனெம் டுபீகூர்தான். ஒரு டுபாக்கூர் இன்னொரு டுபாபூரை விரட்டியது. அவ்ளோதான் மேட்டர். மற்றபடி இவருக்கு எதை எழுதி யார் கொடுத்தாலும் படித்துவிடுவார். அவர் என்ன பெரிய ஆப்ரஹாம் லிங்கன் அல்லது ஜான் கென்னடியா extemporaga பேசுவதற்கு. வேஸ்ட்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 25, 2026 12:52

புத்திசாலி பொருளாதார புலி ஜெயரஞ்சனா? விளங்கிடும்.


Rathna
ஜூன் 25, 2026 11:17

தேச விரோத ஹிந்து விரோத சக்திகள் அழிவது தமிழகத்திற்கு நல்லது.


duruvasar
ஜூன் 25, 2026 11:02

ஜெயரஞ்ன்னா , அந்த பிரபஞ்ச பொருளாதார மேதை ப்ரோக்கர் பொன்னம்பலத்தின் ஜுனியரா ?அவரு பெரிய அப்படக்கராச்சே .


Arul Narayanan
ஜூன் 25, 2026 18:09

கொஞ்சம் புரியும் படி க்ளூ கொடுங்கள் ஐயா. சிவன் விக்னேஸ்வரன் பொன்னம்பலம் இவர்கள் எல்லாம் யார்?


வில்லிபுத்தூரான்
ஜூன் 25, 2026 09:03

தீயமுகவில் வஞ்சம் பாதி இலஞ்சம் பாதி.அவ்வளவு தான்.


சனாதன திராவிடன், தீய மு க, அறிவில்லாலயம்
ஜூன் 25, 2026 07:16

இங்கே ஸ்டாலின் என்ன பேச வேண்டும் எப்படி நடக்க வேண்டும் அப்டின்னு குறிப்பிட்டு உள்ளது. அப்போ இவ்ளோ காலம் நடக்கத் தெரியாத பேசத் தெரியாதவரையா முதல்வராக தேர்ந்தெடுத்தது தீய மு க...? அப்போ அந்த இரும்புக் கரம், dumilakam எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் ஆர்டர் இதெல்லாம் கண்ணகி பட வசனமா?


முக்கிய வீடியோ