உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 120 தொகுதிகளில் த.வெ.க., போட்டி; மாவட்ட செயலர்களை களமிறக்க முடிவு

120 தொகுதிகளில் த.வெ.க., போட்டி; மாவட்ட செயலர்களை களமிறக்க முடிவு

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின், 120 மாவட்ட செயலர்களையும் வேட்பாளராக களமிறக்கவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கவும், விஜய் வியூகம் வகுத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=so0ry91l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சியை விஜய் தயார்படுத்தி வருகிறார். இதற்காக, 38 மாவட்டங்களில், கட்சி ரீதியாக 120 மாவட்டச் செயலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, ஐந்து கட்டமாக, மாவட்டச் செயலர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து, விஜய் பேசி வருகிறார். பின்னர், பட்டியல் வெளியிடப்படுகிறது.இதுவரை, 95 மாவட்டச் செயலர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியுள்ள, 25 மாவட்டச் செயலர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைத்தார். இதற்காக, சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடந்து வருகிறது. அதேநேரத்தில், விஜயை கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சியில், அ.தி.மு.க., தலைமையும் இறங்கிஉள்ளது. ஆனால், தனது தலைமையில்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ள விஜய், தி.மு.க., கூட்டணியில் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு துாண்டில் போட்டுள்ளார். இதுவரை எந்த கட்சியும், அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தனது புதிய படத்தை முடித்துவிட்டு, முழுவீச்சில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த, விஜய் தயாராகி வருகிறார்.அப்போது, தனது கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த பட்டியலை, விஜய் வெளியிடுவார் என, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. கட்சியின் மாவட்டச் செயலர்கள் 120 பேரையும் வேட்பாளர்களாக களமிறக்கவும், அவர் முடிவெடுத்து உள்ளார். 'ஆட்சியில் பங்கு' என்ற உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், எஞ்சியுள்ள 114 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க உள்ளதாவும், தேர்தல் செலவை அவரே ஏற்க இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Easwar Kamal
பிப் 13, 2025 18:49

120 தொகுதிக்கு ஆட்கள் இருக்கானுங்களா ? பிளேடு பக்கிரி , முடிச்ச அவுக்கி கொமாரு இவனுங்கல் எல்லாம் ஜெயிச்சு வரணும். இதுல தொகுதி வாரியா பேச வேற செய்யணும். ரொம்ப கஷ்டம்.


Suji Siva
பிப் 13, 2025 16:46

இது விஜய்க்கு தெரியுமா?


V GOPALAN
பிப் 09, 2025 15:44

Joseph Vijay will have to import tons of chicken Mutton and Beef and black money from Afghan and Pakistan to get DMK vote


SRaja Durai
பிப் 09, 2025 12:22

சகோதரா அவர் சரியாகதானே சொல்லிருக்கார்...120 +114 234


seshadri
பிப் 09, 2025 01:03

இன்னுமொரு மக்கள் நல கூட்டணி உருவாகும், மறக்காமல் வைகோ வை சேர்த்து கொள்ளவும். அவ்வாறு சேர்த்து கொண்டால்தான் எல்லாரையும் சேர்த்து புதை குழிக்குள் இறக்கி விடுவார்


M Ramachandran
பிப் 08, 2025 21:08

அவரவர்கள் சொந்த அச்சில் சூன்யம் வைத்து கொள்ள அழைக்கிறார்


Balasubramanian
பிப் 08, 2025 14:15

அட, தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி என்று இவருக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா!


SRaja Durai
பிப் 09, 2025 12:24

120+114=234


Bussy Bussy
பிப் 08, 2025 13:13

கூட்டணிக்கு வர்ர கட்சிகளோட செலவை அவரே ஏத்துக்கிறாரா. இருந்தாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி தான். இப்பவே அவருக்கு கண்ணைக்கட்ட ஆரம்பிச்சி இருக்கும். இதுல நீங்க வேற வயித்துல புளிய கரைக்கிறீங்க


புதிய வீடியோ