உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சரவை மாற்றம்: பல தரப்பிலும் ஏமாற்றம்

அமைச்சரவை மாற்றம்: பல தரப்பிலும் ஏமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

* உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால், தனக்கும் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் முரண்டு பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், துணை முதல்வர் பதவி வழங்கினால், தன்னிடம் உள்ள கனிமவள துறையை துரைமுருகன் விட்டுக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அந்த துறையை விட்டுக் கொடுக்க அவர் முன்வராததால், துணை முதல்வர் பதவி தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், துரைமுருகன் ஏமாற்றம் அடைந்துள்ளார் * சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது, அவரது பதவியை பறிக்க வைத்தது. கவர்னருடன் இணக்கமாகச் செயல்படாததால், பொன்முடியிடம் இருந்த உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டு, வனத்துறை தரப்பட்டுள்ளது * முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மஸ்தான் பதவி பறிபோகும் பட்சத்தில், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் வஹாப் எதிர்பார்த்தார். திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், சபாநாயகர் அப்பாவுவும் அமைச்சர் பதவி பெற தீவிரமாக காய் நகர்த்தினார். ஆனாலும், வாய்ப்பு கிடைக்கவில்லை* தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லை என்றும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த எம்.எல்.ஏ.,க்களில் சங்கரன்கோவில் ராஜாவும் ஒருவர் * கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பெரம்பலுார், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என, அம்மாவட்ட உடன்பிறப்புகளும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Matt P
அக் 04, 2024 04:19

கனிம வளத்துறையை துரை விட்டு கொடுக்கமாட்டாரு . பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் போலிருக்கு. மீசுக்கும் ஆசை கூழுக்கும் ஆசை துணை முதலவர் பதவியும் வெண்டும்..அவர் போலவே பேசணும்னர்...வயாசானாலும் பண ஆசை விடமாட்டேங்குது இந்த வயாசனக்கிழ.....


Ramesh Sargam
அக் 03, 2024 21:58

ஸ்டாலினுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் பிடிக்காது. ஆனால் ஒரே குடும்பம் ஒரே முதல்வர் பதவி ரொம்ப பிடிக்கும்.


Raj S
அக் 01, 2024 01:04

நீங்க சொல்றவர், சொந்த உழைப்புல மேல வந்தவர்... அப்பன் தயவுலயும், அப்பன் மற்றும் தாத்தா தயவுலயும் வந்த கழிசடைகள் மாதிரி இல்லைங்கறத புரிஞ்சுக்காத ஜென்மங்களா அந்த கட்சில இருக்கறதால தான் எல்லாரும் அப்டி சொல்றாங்க... இது கூட புரிஞ்சுக்க முடியாத கும்பல் தான் அந்த திருட்டு குடும்பத்தை தூக்கி புடிக்கிறாங்க போல...


வைகுண்டேஸ்வரன்
செப் 30, 2024 16:47

வாட்சமேன், அவதாரம் னு சொல்லிக்கிற ஒரே ஒரு மனிதனுக்கு கொத்தடிமை யா இருக்கிறதை விட ஒரு குடும்பம், ஒரு கோடி கொத்தடிமை பரவாயில்லை. அதென்ன திமுக வினரை மட்டும் கொத்தடிமை என்று எழுது கிறார்கள்?? பிற கட்சி ஆதரவாளர்கள் கொத்தடிமை இல்லியா?


krishna
செப் 30, 2024 21:24

UNGALAI VIDA SIRANDHA 200 ROOVAA COOLIE GOPALAPURAM KOTHADIMAI ENGUM PAARKKA MUDIYAADHU. VENUGOPAL UNGAL ALAVUKKU VARUVAAR.


sridhar
அக் 04, 2024 21:25

ரொட்டிக்கு பாலுக்கும் விலை போன பிறகு பழைய பெயர் எதற்கு.


ko ra
செப் 30, 2024 15:54

துரை முருகன் போட்டோ சூப்பர்.


vijai
செப் 30, 2024 12:16

ஒரு குடும்பம் ஒரு கோடி கொத்தடிமை


krishna
செப் 30, 2024 10:48

GOPALAPURAM KOTHADIMAI KUMBALUKKU MAATRAM KIDAYAADHU.


raja
செப் 30, 2024 09:48

திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்ப பரம்பரை கொத்தடிமைகள் விடியல் துக்லக் வாழ்க கோசம் போட்டு புலங்காகிதம் அடையரதொட நிருத்திகணும்....


vijai
செப் 30, 2024 09:19

பல்லு போன வயதில் பதவி ஆசைய பாத்தியா அதுவும் இரண்டு பதவி?


N Sasikumar Yadhav
செப் 30, 2024 08:33

திருட்டு திமுக கொத்தடிமைகளுக்கு எப்போதுமே கோபம் வரக்கூடாது


krishna
செப் 30, 2024 10:49

OOPIS BOY KUMBALUKKU 200 ROOVAA MATTUME.


முக்கிய வீடியோ