உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  டில்லி காற்று மாசால் வாக்கிங் போக முடியலை: தலைமை நீதிபதி வேதனை

 டில்லி காற்று மாசால் வாக்கிங் போக முடியலை: தலைமை நீதிபதி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''டில்லியில் நிலவும் கடுமையான காற்று மாசால், 'வாக்கிங்' கூட போக முடியவில்லை,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ''காற்று மாசால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது; வாதாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார். அதை ஆமோதித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''டில்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. ஒரு மணி நேரம் நடைபயிற்சிக்கு சென்றதால், எனக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது,'' என்றார். அங்கிருந்த வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை ஆன்லைன் முறைக்கு மாற்றக் கோரினர். இதை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''நிச்சயமாக, இது தொடர்பாக பரிசீலிக்கிறேன். வழக்கறிஞர்கள் சங்கத்துடன் ஆலோசனை செய்து, முடிவெடுக்கிறேன்,'' என்றார். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ