உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கலக்கத்தில் மத்திய அமைச்சர்கள்!

கலக்கத்தில் மத்திய அமைச்சர்கள்!

புதுடில்லி: இம்மாதம் 23, 24ம் தேதிகளில் டில்லியில் சிந்தனை அமர்வு எனப்படும், 'சிந்தன் சிவிர்' என்கிற ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் பிரதமர் மோடி. அனைத்து மத்திய அமைச்சர்களும் இதில் பங்கேற்பர்.மூன்றாம் முறையாக மோடி பிரதமராகி இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். சுய முன்னேற்றம், மக்களுடன் தொடர்பு, நிர்வாகம் ஆகியவை குறித்து இங்கு அலசப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ltckazvq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமைச்சர்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், அமைச்சகங்களிடையே ஒருங்கிணைப்பு என, பல விஷயங்கள் குறித்து பிரதமர் பேசுவார். பள்ளியில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் மார்க் அடங்கிய, 'ப்ரோகரஸ் ரிப்போர்ட்' போல அமைச்சர்களின் ரிப்போர்ட்கள் பிரதமருக்கு அளிக்கப்படும்.எனவே, இந்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் என, கடந்த 6 மாதங்களாக செய்திகள் அடிபட்டும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், அமைச்சரவை மாற்றப்படலாம் என பேசப்படுகிறது. பல அமைச்சர்கள் தங்கள் பதவி பறிபோகுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.அமைச்சரவை மாற்றம் நடக்குமா? நடக்காதா என்பது இருவருக்கு மட்டுமே தெரியும்; ஒருவர் பிரதமர், மற்றொருவர் அமித் ஷா என்கின்றனர் பா.ஜ.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

A.Gomathinayagam
செப் 20, 2026 14:04

அடித்தட்டு ,நடுதரமக்கள் வாழ்வில் பெரிய மாற்றம் வர போவதில்லை


Krishna
செப் 20, 2026 11:30

90% Ministers are UselessNikamma Wastes Without Independancy or Nationalism or Hinduization But doing Only Scientific MegaLoots by Licking PowerMisusing DictatorModi who Even Regularised Billions of AntiHindu ForeignInfiltrators With ModiMental Aadhar


ulguna
செப் 20, 2026 15:57

useless krishna by birth parents should treat this worthless brain and if no use throw krishan dustbin


subramanian
செப் 21, 2026 22:28

Hey Krishna the lunatic.... if you have proof....provide to court... and sue modiji. You cowardice, wicked.... go to hell....


Sathyanarayanan Sathyasekaren
செப் 20, 2026 10:15

ஊழல் செய்வதில்லை, மற்றவர்களையும் ஊழல் செய்ய விடுவதில்லை. வரி ஏய்ப்பு செய்ய முடியாமல் அனைத்து வழிகளையும் அடைத்து கொண்டு இருக்கிறார். அதனால் தான் அவர் மேல் கோபம்.


அப்பாவி
செப் 20, 2026 11:13

அமைச்சர்களுக்கு பதிலாக அதிகாரிகளும், தொழிலதிபர்களும் ஆட்டை போட ஆரம்பிச்சாச்சு. அமைச்சர்கள் ஒப்புக்கு சப்பாணி ஆயாச்சு.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 20, 2026 13:09

பாவம் சார் நீங்க. இன்னமும் கண்ண மூடிக்கிட்டே இருக்கீங்களா


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 20, 2026 09:47

மிக்சர் சாப்பிடும் ஒரு அமைச்சர் இங்கே இருந்தது உண்டு.


SUBBU,MADURAI
செப் 20, 2026 09:31

இங்கே எல்லோரையும் நக்கல், நையாண்டி பண்ணிக்கிட்டு திரிகிறார்கள்


சப்பானி அப்பாவி
செப் 20, 2026 11:16

என்ன பண்றது அப்பாவியா பெத்து தண்ட சோறு போட்டு வளர்கிறாங்க


அப்பாவி
செப் 20, 2026 07:04

அங்கே ஒரே ஒரு ஆல் இன் ஆல் அழகு ராசா தான் உண்டு.


அப்பாவி கொட்டாவி
செப் 20, 2026 11:14

இங்கேயும் சில தண்ட சோறு அப்பாவியா கருத்து போடும்


sankaranarayanan
செப் 20, 2026 04:41

நிதி அமைச்சர் மாடம் நிர்மலா ஸீதாராமன் ஒரு மாநிலத்தின் ஆளுநராக செல்லலாம் அதே இடத்திற்கு சக்திதாஸ் என்பவர் பழைய ரிசர்வ் வங்கியின் தலைவர் புது நிதிஅமைச்சராக வரலாம்நாடு நன்றாக இருக்கும் நிதி கட்டுக்குள் இருக்கும்


Tetra
செப் 20, 2026 07:19

நிர்மலா மேடம் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை