உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10.... 11.... 15... பாகிஸ்தானுக்கு சிந்தூர் பாடம் புகட்டிய இந்தியா!

10.... 11.... 15... பாகிஸ்தானுக்கு சிந்தூர் பாடம் புகட்டிய இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அன்று உரி, புல்வாமா, இன்று பஹல்காம் என பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மீண்டும் பாடம் புகட்டி இருக்கிறது.ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் ஏப்.22ம் தேதி கொல்லப்பட்டனர். யாதும் அறியாத சுற்றுலா பயணிகள் சிந்திய ரத்தத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அதிரடியான ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டி இருக்கிறது.ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் அத்துமீறி தாக்குதல்கள் நடத்தும் போது உரிய தருணங்களில் பாடம் புகட்டி இருக்கிறது இந்தியா. 2016ம் ஆண்டு உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல், அதனைத் தொடர்ந்து, இப்போது பஹல்காம் தாக்குதல் என பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு குறுகிய காலக்கட்டத்திலேயே இந்தியா பதிலடி தந்திருக்கிறது. உரி தாக்குதல் நடந்த 10 நாட்களுக்கு பின்னர் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதல் முடிந்து 11 நாட்களில் பதிலடியை இந்தியா அரங்கேற்றியது. தற்போது பஹல்காம் சம்பவம் நிகழ்ந்து 15 நாட்களில் கடந்த 2 முறையிலும் இல்லாத முறையில் போர்க்கால ஒத்திகை, இருநாடுகள் இடையே போர் பதற்றம் என்ற கோணங்களில் நடவடிக்கைகள் எடுப்பதாக பாகிஸ்தானை திசை திருப்பி, ஆபரேஷன் சிந்தூரை நிறைவேற்றி இருக்கிறது இந்திய ராணுவம். அனைத்துவித நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் மற்றும் அதற்கு நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு அளிக்கு நாடுகள், பயங்கரவாத இயக்கங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளதாக பலரும் புகழாரம் சூட்டி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் பயங்கரவாத குரல்வளையை தற்காலிகமாக நெரித்துள்ளது எனலாம். நினைத்தது நடந்தது என்பது ஒரு புறம் இருந்தாலும் பயங்கரவாதத்தின் ஆணிவேரை கண்டறிந்து அதை பிரதமர் மோடி அட்சரசுத்தமாக அழிக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பில் இருந்து ஒலிக்கும் குரல்களாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

spr
மே 07, 2025 17:30

இது ஒரு தாற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கலாகாது. பிரச்சினை நிரந்தரமானது தீர்க்கப்பட வேண்டுமானால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் உடனடியாக மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் தொடர்ந்து உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவோர் அனைவரையும் கண்டறிந்து நாடு கடத்த வேண்டும் இல்லையேல் சுட்டுக் தள்ள வேண்டும். இது இஸ்லாத்திற்கோ பாகிஸ்தானுக்கோ எதிரான போரல்ல என்பதனை உலக நாடுகள் குறிப்பாக பாகிஸ்தான் மக்கள் அறியச் சொல்ல வேண்டும் எந்தக் காரணம் கொண்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு இல்லை என்றொரு நிலையை உருவாக்க வேண்டும் இதனால் பயங்கர வாதம் இன்னும் அதிகரிக்கலாம் அனைத்து மாநில அரசுகளும் உளவுத் துறையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் பன்னாட்டு ஆதரவெல்லாம் நாம் அவர்களிடம் வாங்கும் ராணுவத் தளவாடங்களை பொறுத்த ஒன்றே எனவே மத்திய அரசு நம் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற வேண்டும்


Suresh sridharan
மே 07, 2025 16:12

சில தேச துரோகி தெருநாய்களின் சத்தம் அதிகமாக இருக்கு வீட்ல நல்ல டிரெயினிங் ஓட வளத்திட்டு இருக்கோம் ஞாபகம் இருக்கட்டும்


TR BALACHANDER
மே 07, 2025 13:50

ஜெய் ஹிந்து ......இந்தியா வலிமை சேர்ப்போம் அனைவரும் ஒன்று இணைந்து ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை