உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / "நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா

"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தனக்கு பல தரப்பில் இருந்து அரசியலுக்கு வருமாறு அழைப்புகள் வருகிறது. நானும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ரா கூறினார். 2008 ஆம் ஆண்டு ஹரியானாவில் வாத்ரா ரூ.7.5 கோடிக்கு நிலத்தை வாங்கி ரூ.58 கோடிக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதில் பல கோடி சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது. விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராபர்ட் வாத்ரா கூறியதாவது:

17 ஆண்டுகளுக்குப்பிறகு

மத்திய அரசும் புலனாய்வு அமைப்புகளும் அரசியல் நோக்கங்களுக்காக என்னை மீண்டும் மீண்டும் குறிவைத்து தாக்குகிறது. ஆனால் தான் அதற்கு அடிபணியப் போவதில்லை .அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளையே மீண்டும், மீண்டும் கேட்கின்றனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணை நடத்தப்படுவது ஏன்? இடையில் ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி?எல்லா ஆவணங்களும் எங்கள் நிறுவனத்திடம் சரியாக உள்ளது. 'நான் அரசியலில் நுழைய நினைக்கும் போதெல்லாம், அமலாக்கத்துறை மூலம் எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.' ஆனால் நான் கவலைப்படப் போவதில்லை. இன்னும் நான் வலுவாக வெளி வருவேன்.அரசியலில் சேருமாறு எல்லா இடங்களிலிருந்தும் அழைப்புகள் வருகின்றன' சரியான நேரம் வரும்போது நான் நிச்சயமாக அரசியலில் நுழைவேன். இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Gurumurthy Kalyanaraman
ஏப் 17, 2025 23:06

வாங்க சார் வாங்க. நீங்க வரலன்னு தான் விசாரமா உக்காந்து இருந்தோம். பஞ்சாப் மற்றும் சண்டிகர்–ல அடிச்சது போதாது என்று தெரிகிறது. சரிதானே?


பேசும் தமிழன்
ஏப் 17, 2025 20:37

எல்லாம்... நாட்டு மக்களாகிய எங்களின் தலையெழுத்து..... இந்த கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது..... கேட்க வேண்டியிருக்கிறது.


SUBBU,MADURAI
ஏப் 17, 2025 20:57

சோனியாவுக்கு பிடிக்காத மருமகன் இந்த ராபர்ட் வதேரா ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்.பிரியங்காவின் கணவராக வந்து சோனியாவின் குடும்பத்தை ஆட்டுவிக்க வந்த குறிப்பாக மைத்துனர் ராகுல்காந்திக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ராபர்ட் வதேரா அரசியலுக்கு வந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச குடும்ப மானத்தையும் கப்பலேற்ற வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
ஏப் 17, 2025 20:28

அரசியலுக்கு வருவதற்குமுன்பே பல ஊழல். வந்தபிறகு ஒரே ஊழல்தான்.


அரவழகன்
ஏப் 17, 2025 19:32

திஹார் நிரம்ப நிறைய ஆட்கள் தேவை இருக்கிறது வர்ரே... வா.


மொக்கச்சாமி
ஏப் 17, 2025 18:18

ஐயா, ராசா, ஊழல், வழக்குன்னு முன் தகுதியோட இருக்கிற நீங்க ரொம்ப லேட்டு சாமி. எப்பவோ வந்திருக்கணும். இங்க மகன், மருமகன் மாதிரி அங்க இல்லைன்ற கொறை இருந்து கிட்டே இருந்துச்சி. வாங்கய்யா, செல்வம் அண்ணெ போஸ்டரோட காத்துக்கிட்டு இருக்காரு.


Muralidharan S
ஏப் 17, 2025 16:55

வாங்க.. வாங்க.. இன்னும் என்ன மிச்சம் இருக்கு ??? 800 வருஷ இஸ்லாமிய படையெடுப்பு..கொள்ளை போனது.. 200 வருட கிருஸ்துவ படையெடுப்பு... இன்னும் கொள்ளை போனது.. அப்புறம் சுதந்திரம் வாங்கின பிறகு கான்-cross ரெண்டும் சேர்ந்து படையெடுப்பு.. இன்னும் கொள்ளை போனது.. அப்புறம் இத்தாலிய கான்-cross படையெடுப்பு.. மிச்சம் மீதியும் கொள்ளை போனது..


hariharan
ஏப் 17, 2025 16:02

அரசியலில் நல்லவர்கள் இருந்தார்கள். இப்பொழுது உள்ளவர்களை எண்ணிவிடலாம். நல்லவர்களாக இல்லாதோர் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் போன்று எண்ணமுடியாது. இவரும் அந்த கணக்கில் வருவதால் இப்போது இருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒருவேளை இவருடைய பெயரை மாற்றினால் ஏதோ பிழைப்பு நடத்தலாம்.


vijai hindu
ஏப் 17, 2025 15:41

அவர் கையை காட்டறத பார்த்தா சீக்கிரம் கைக்கு விலங்கு போடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு


ராமகிருஷ்ணன்
ஏப் 17, 2025 14:19

சுருட்டியதை பாதுகாக்க கட்டாயம் அரசியலுக்கு வருவாய்.


Balasubramanian
ஏப் 17, 2025 14:08

வேற வழி? கோர்ட்டு கேஸு இதில் இருந்து தப்பலாம்! இன்னும் துணை முதல்வர் கொசுக்கடி வழக்கு விசாரணைக்கு வரவில்லை! அவர் விளையாட்டு துறையில் இருந்து துணை முதல்வர் கூட ஆகி விட்டார்! செந்தில் பாலாஜி கின்னஸ் பெயில் வழக்கு தொடர்ந்து கேஸ் முடியாமல் மந்திரியாக உள்ளார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை