உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணி கட்சி தொகுதிகள் மீது வைகோ கண்; சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் 4 பேருக்கு கல்தா

கூட்டணி கட்சி தொகுதிகள் மீது வைகோ கண்; சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் 4 பேருக்கு கல்தா

தி.மு.க., கூட்டணியில், எட்டு தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க., திட்டமிட்டுள்ள நிலையில், தற்போதுள்ள நான்கு பேருக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமா என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a0zddwyh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் மதுராந்தகம், பல்லடம், அரியலுார், மதுரை தெற்கு, சாத்துார், வாசுதேவநல்லுார் ஆகிய ஆறு தொகுதிகளில் ம.தி.மு.க., போட்டியிட்டது. அதில், அரியலுாரில் சின்னப்பா, மதுரை தெற்கில் பூமிநாதன், சாத்துாரில் ரகுராமன், வாசுதேவநல்லுாரில் சதர்ன் திருமலைக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகளில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்க, ம.தி.மு.க., திட்டமிட்டு உள்ளது. ஆனால், ஏற்கனவே வழங்கிய தொகுதிகளை மட்டுமே இம்முறையும் கொடுக்கலாம் என தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. கடைசி நேரத்தில், ம.தி.மு.க.,விடம் இருந்து அழுத்தம் அதிகமாக இருக்குமானால், கூடுதலாக ஒரு 'சீட்' மட்டும் சேர்த்து கொடுக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் ம.தி.மு.க.,வுக்கு ஓரளவுக்கு செல்வாக்குள்ள எட்டு தொகுகுதிகளை தேர்வு செய்து, அத்தொகுதிகளில் சுற்றுப்பயணம் செல்லவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தயாராகி வருகிறார். வரும் 9ம் தேதி துாத்துக்குடி, 10ல் கடையநல்லுார், 11ல் கம்பம், 12ல் திண்டுக்கல், 13ல் கும்பகோணம், 14ல் நெய்வேலி, 18ல் சூலுார், 19ல் சென்னை வேளச்சேரி ஆகிய, எட்டு சட்டசபை தொகுதிகளை குறிவைத்து, வைகோ பிரசாரம் செய்யவிருக்கிறார். அதனால், தற்போதைய ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நான்கு பேரின் தொகுதிகள், அப்பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதால், அக்கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர். வைகோ தேர்வு செய்துள்ள எட்டு தொகுதிகளில், முஸ்லிம் லீக் போட்டியிட்டு வென்ற கடையநல்லுார், காங்கிரஸ் வென்ற வேளச்சேரியும் உள்ளதால், அக்கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் பரவி இருக்கிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.Ramachandran
ஆக 06, 2025 15:23

may be he will con 12 seats as part of NDA alliance. The sitting MLAs will con from the existing 4 seats and these are the other 8 seats that they will get to con in NDA alliance.


kanagaraj
ஆக 06, 2025 09:44

It is better to dissolve his party in the intrust of Tamizhagam


Subburamu Krishnasamy
ஆக 06, 2025 08:04

Gopalsamy is not authority to decide the contesting assembly seats. He is getting alms from Stalin. He is a spent out force in the state No future for his party. It is better to dissolve his party in the intrust of Tamizhagam


சமீபத்திய செய்தி