உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வரதர் கோவில் பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை; தங்க பல்லி என்பதே இல்லை என உதவி கமிஷனர் விளக்கம்

வரதர் கோவில் பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை; தங்க பல்லி என்பதே இல்லை என உதவி கமிஷனர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 'பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை, இருக்கும் பல்லி சிலைகள் தங்கத்தால் செய்யப்பட்டது இல்லை' என, கோவில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி தெரிவித்தார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சன்னிதியில் வெளிப்பிரகாரத்தில் வடக்கு மூலையில் உள்ள பல்லி சிலைகளை தொட்டு தரிசனம் செய்பவர்களுக்கு, சகல பாவங்களும் நீங்கும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், பல்லியை தொட்டு வணங்குவது வழக்கம். கோவிலில் திருப்பணி நடப்பதால், பல்லி தரிசனம் தற்காலிகமாக தெற்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவிலில் உள்ள பல்லி சிலைகளை மாற்ற முயற்சி நடப்பதாக, திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், பழமையான பல்லி சிலைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவற்றை மாற்ற முயற்சி நடப்பதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். கோவில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி, கோவிலில் உள்ள பல்லி சிலைகள் பற்றியும், அவை உள்ள இடத்தையும் காண்பித்து விளக்கினார். கோவிலில் உள்ள பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை என வும், அவை தங்க பல்லியே இல்லை எனவும், உதவி கமிஷனர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:ரங்கராஜ நரசிம்மன் என்பவர் கொடுத்த புகார் பொய்யானது.கோவிலில் உள்ள பல்லி சிலைகள் எங்கும் மாயமாகவில்லை. விசாரணைக்கு வந்த போலீசாரிடமும் பல்லி சிலைகள் காண்பிக்கப்பட்டன. அவர்களும் நாங்கள் கொடுத்த விளக்கங்களை ஏற்றுக்கொண்டனர். தங்க பல்லி என பலரும் கூறுகின்றனர். ஆனால், அவை தங்க பல்லியே கிடையாது. பித்தளையால் செய்யப்பட்டது. கோவிலில் மூன்று செட் பல்லி சிலைகளும், சூரியன் மற்றும் சந்திரன் சிலைகளும் உள்ளன.ஒன்று மிக பழமையானது. அவை நகை கொட்டடியில் உள்ளன. மற்றொன்று 1970ல், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கொடுத்த பல்லி சிலைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதால், பழுதடைந்து காணப்படுகிறது. பல்லி சிலைகள் கைகளில் கீறுவதால், அவற்றை மாற்றி, 2012ல், உபயதாரர் ஒருவர் கொடுத்த பல்லி சிலைகளை வைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.கமிஷனர் உத்தரவு இல்லாமல், பல்லி சிலைகள் மாற்ற முடியாது. கோவிலுக்கான 3 செட் பல்லி சிலைகளும் கோவிலில் தான் உள்ளன. அவை எங்கும் மாயமாகவில்லை. ரங்கராஜ நரசிம்மன் விளம்பரம் தேடவே இதுபோன்ற புகார்களை கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தங்க பல்லி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்த விளக்கத்தை காஞ்சி மண்டல இணைக் கமிஷனர் அறிக்கையாக அளிப்பார். - சேகர் பாபு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram pollachi
நவ 07, 2025 15:20

சிதம்பர ரகசியம் போல் ..... பல்லியை பார்த்தாலே பிரதோஷம், பிரதோஷம் என்று அழைக்கும் வழக்கம் உண்டு.... மேலும் பல்லியை அடித்து கொன்றால் அடுத்த பிறவியில் ஊமையாக பிறப்பார்கள் என்று கூறுவது உண்டு... ஊருக்கே சகுனம் சொல்லும் கடைசியில் கழி நீர் பானையில் விழுந்து விடும்.... அந்த காலத்து ஆட்கள் அறிவியல் பூர்வமாக சொன்ன பல விசயங்கள் இந்த காலத்தில் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள்... மூன்று முறை அத்தி வரதனை தரிசனம் செய்த மூத்த வாசகர்.... முரட்டு முட்டு வாசகர் அல்ல....


Indhuindian
நவ 07, 2025 13:25

இந்த கோவில்ல நகை சரிபார்ப்பு எப்போ பண்ணாங்க? பொதுமக்களும் உள்ளூர் அந்த கோவிலை பற்றி நண்டராக தெரிந்த முதுமக்கள் யாரவது அப்போ இருந்தங்களா?


Rajasekar Jayaraman
நவ 07, 2025 12:33

வரதரையே திருடும் கூட்டத்திடம் தங்க பல்லியை பற்றி கேட்டால் பதில் இப்படித்தான் வரும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2025 11:41

தங்கப்பல்லி கமாண்டர் சார் ஊட்ல அல்லது அமீச்சர் ஊட்ல இருக்குது ன்னு உண்மையவா சொல்ல முடியும்


கனோஜ் ஆங்ரே
நவ 07, 2025 10:35

மூடநம்பிக்கை எந்தளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்... நான் பிறந்த ஊரும், நான் பிறந்த இடமும் வரதர் கோவில் அடுத்த தெருவில்தான்... சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், மூலவரின் வெளிப் பிரகாரத்தில்.... தளத்தில் மேலே இந்த பல்லி சிலைகள் இருந்தது... நான் சிறிய வயதில், கீழிருந்து அண்ணாந்து அந்த கல்லால் வடிவமைக்கப்பட்ட பல்லி, சூரியன், சந்திரன் இவற்றை பார்ப்போம்... தலைக்கு மேலே தளத்தில் உள்ள அந்த கற்சிலைகளை மேலே பார்த்தால், பல்லி விழுந்த தோஷம் போய்விடும் என்று எவனோ ஒருத்தன் கொளுத்தி போட்டுட்டு போயிட்டான்... அவன் சொன்னத்தை செவிவழியாக இந்தியா முழுவதும் பரப்பினர்.. தங்க பல்லியோ, வெள்ளி பல்லியோ, எதுவும் அங்கே இல்லை... அது வெறும் கற்சிலைதான்... அந்த ஊரில் பரம்பரையாய் வசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு தெரியும்...


N Sasikumar Yadhav
நவ 07, 2025 13:36

இருக்கும் முட்டுகளில் நீங்க முரட்டு முட்டு திராவிட மாடல் கும்பலுக்கு என்பது பலருக்கும் தெரியும்


எவரகிங்
நவ 07, 2025 10:02

ரங்கராஜன் நரசிம்மன் ஒரு சுயவிளம்பர .....


nimalan
நவ 07, 2025 14:25

மேல் சட்டை அணியாமல் திருமண் பூசி பெருமாளே கதி என்று இருந்து கொண்டு கோவில்களில் நடக்கின்ற தவறுகளை பற்றி பேசினால் விளம்பரம் கிடைத்து விடுமா. அனைத்து சமுதாய மக்களாலும் வெறுத்து ஒதுக்கி வைக்க பட்டவர்கள் தான் இன்றளவும் பிராமண சமூகம் இருந்து வருகிறது. கோவில்களில் இறைவனை சார்ந்த விஷயங்களில் இதுதான் தர்மம் என்று ஒருவர் சுட்டிக்காட்டி பேசுவதில் என்ன விளம்பரத்தை தேடி விட முடியும். நரசிம்மன் அவர்களின் பிரபலம் தான் அவரை சிறையில் தள்ளியது.


ஈசன்
நவ 07, 2025 09:07

உதவி கமிஷனர் தங்க பல்லி என்று ஒன்று இல்லவே இல்லை என்கிறார். அமைச்சர் தங்க பல்லி காணாமல் போயிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். இதுல எதுங்க உண்மை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை