உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்

12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சட்டசபை தேர்தலில், கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, எட்டு தொகுதிகள் தர தி.மு.க., தலைமை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி., கட்சி, தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக அடுத்தடுத்த தேர்தல்களை சந்தித்து வருகிறது. இதனால் அக்கட்சி, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, வி.சி., தரப்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், கூட்டணியின் தலைமையான தி.மு.க., தரப்பில், ஏழு தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இரட்டை இலக்க எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை தி.மு.க., கொடுத்தால் உடன்படிக்கை செய்ய வேண்டாம் என திருமாவளவனிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அசோகன்
பிப் 26, 2026 11:33

5 வருடங்களாக திமுகவிற்காக எவ்வளவு ..... திமுக அதற்காக நன்றி காட்டவேண்டும்


ராமகிருஷ்ணன்
பிப் 26, 2026 09:37

அதிக சீட் கொடுக்காவிட்டால் கூட்டணி விட்டு வெளியே வந்து விடுவாயா. உன் கட்ட பஞ்சாயத்து கும்பல் விசிலடிச்சான் குஞ்சுகள் ஆகி விட்டார்கள் நீயும் அங்கே போய்விடு


Arul Narayanan
பிப் 26, 2026 08:22

திமுக நிலைமையை புரிந்து கொண்டு கொஞ்சம் இறங்கி ஏழு கூட்டணி கட்சிகளுக்கும் ஏழு இடங்களையும் புதிய கட்சிகளுக்கும் பதினைந்து இடங்கள் கொடுக்க தயாராகி தான் குறைந்த இடத்தில் அடங்க உள்ளது போல் தெரிகிறது. இந்த தெளிவை பழனிச்சாமி காட்டி இருந்தால் தேமுதிக போயிருக்காது. அதிமுகவும் கரைந்து போகாமல் பலம் பெற்று இருக்கும். அன்பு மணி விட்டு கொடுத்தால் ராமதாஸ் உள்ளே வரலாம். லெட்டர் பேடு கட்சிகளுக்கு கௌரவம் கொடுத்து அசிங்க பட வேண்டாம். ஆனாலும் பிரேமலதா போக்கால் தேமுதிக திரும்ப வர வாய்ப்பு உள்ளது.


கடல் நண்டு
பிப் 26, 2026 07:59

இருப்பை காட்டிக்கொள்ள போடும் டிராமா…மத்தபடி 1 சீட் குடுத்தாலும் நன்றிங்க எசமான் தான் ..


G Mahalingam
பிப் 26, 2026 07:34

சிவாஜி படம் போல அறிவாலயத்துக்கு வெளியே நன்றாக குரைப்பார்கள். உள்ளே சென்று வெளியே வந்த பிறகு மயக்க பெட்டியால் கொடுத்ததை வாங்கி கொள்வார்கள். பாஜாக மதவாத ஆட்சி வர கூடாது என்பதற்காக ஒத்து கொண்டோம் என்று ரீல் விடுவார்கள்.


தென்றல்மோகன்,சத்திரக்குடி
பிப் 26, 2026 06:54

ஸ்டாலின்: இன்னைக்கு தொகுதிப் பங்கீடு குறித்து பேசணும் திருமாவளவனுக்கு போன் பண்ணி காலையில் பத்து மணிக்கு அறிவாலயம் வரச் சொல்லுங்க. ஐயா அவரு நம்ம அறிவாலய வாசல்லதான் படுத்துக் கெடக்காரு இப்ப கூப்பிட்டாலும் உடனே ஓடி வந்துருவாரு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை