உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இம்மாத இறுதியில் நிறைவடையும் படப்பிடிப்பு; அரசியல் சுற்றுப்பயணம் துவங்கும் விஜய்

இம்மாத இறுதியில் நிறைவடையும் படப்பிடிப்பு; அரசியல் சுற்றுப்பயணம் துவங்கும் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இம்மாத இறுதிக்குள், 1.30 லட்சம் நிர்வாகிகள் நியமிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.த.வெ.க., கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகளில், கவனம் செலுத்தி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0unzd9ep&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியில் அமைப்பு ரீதியாக, 120 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுதும் உள்ள, 67,000 ஓட்டுச்சாவடிகளுக்கு ஏஜன்டுகளை நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட, ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கு, மண்டல வாரியாக இரண்டு நாள் பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கோவை மண்டல முகாம், சமீபத்தில் நடந்து முடிந்தது. காஞ்சிபுரத்தில், சென்னை மண்டல ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கான முகாம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இதுமட்டுமின்றி, கட்சிக்கு அமைப்பு ரீதியாக 63,000 நிர்வாகிகளை நியமிக்க, விஜய் முடிவெடுத்துள்ளார். இம்மாத இறுதிக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, கட்சி தலைமைக்கு பட்டியல் அனுப்ப வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் இன்று நடக்க உள்ளது. இதற்கிடையில், தன் கடைசி படமான ஜனநாயகன் சூட்டிங்கில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, இம்மாத கடைசியோடு படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைய உள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் முதல் தீவிரமாக அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கும் விஜய், வரும் ஆகஸ்ட் முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று கட்சியினரையும் மக்களையும் சந்திக்க முடிவெடுத்துள்ளார். இதற்கான பயண திட்டங்களை கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, வகுத்து வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

lana
மே 17, 2025 17:33

அடுத்த படம் வரை தீவிர அரசியல் நடக்கும்.


Sri Sri
மே 17, 2025 06:47

நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான். பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு... அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்... அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே... அது ரொம்ப அசிங்கம்... அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே... நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்... அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே... அசிங்கம் அவமானம் - நடிகவேள் எம்ஆர் ராதா


angbu ganesh
மே 17, 2025 09:45

எவ்வளவு சொன்னாலும் உரைக்காது அதுங்களுக்கு அவனுங்கள பெத்தவனுங்கள சொல்லணும் அவன் எங்க போனாலும் காலை கடனை தவிர்த்து போறாங்கன்னா எப்படி இவனுங்களுக்கு தெரியும் சும்மா விஜய் ஒரு மாயையை உருவாக்கி இருக்கார். அதாவது அவருக்கு இவ்ளோ ரசிகர்கள் ஆதரவு இருக்கற மாதிரி ஆனா உண்மை அதுவல்ல அவரிடம் உள்ள it விங் மற்றும் ப்ரோக்கர்கள் சிலர் இருக்கறானுங்க, அவனுங்கள வச்சுத்தான் காய் நகர்த்தப்படுகிறது, வேணும்னா தேர்தலின் பொது பாருங்க இவன் பண்ற அட்ராசிட்டி இவனுக்கு எங்க இருந்தோ பணம் வருது மத்திய அரசுக்குத்தான் வெளிச்சம்.


Subramanian
மே 17, 2025 12:35

அருமை, சரியான கருத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை