உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பானவை: தலைமை தேர்தல் கமிஷனர்

ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பானவை: தலைமை தேர்தல் கமிஷனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராம்கர்: ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை; சேதப்படுத்த முடியாதவை,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், மூன்று நாள் பயணமாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நேற்று சென்றார். இங்குள்ள மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று அவர் கலந்துரையாடினார். ஜார்க்கண்டில் உள்ள வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின் ராம்கர் மாவட்டத்தில் அவர் கூறியதாவது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்றவை என்றும், அவற்றை சேதப்படுத்த முடியும் என்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்; அது உண்மையில்லை. எந்த வித ஆதாரமும் இல்லாமல் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதுாறு பரப்பி வருகின்றன. அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்பே, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை இணையதளம் வாயிலாகவோ, ப்ளூடூத் எனப்படும் தொழில்நுட்ப முறை வாயிலாகவோ இணைக்க முடியாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓட்டுப் பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த முடியாது. மிகவும் பாதுகாப்பான வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், முறைகேடும் செய்ய முடியாது. எனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஏப் 13, 2025 22:05

அரசியல்வாதிகள்தான் பயங்கரமானவர்கள்.


pattu
ஏப் 13, 2025 18:57

வாக்குபதிவு இயந்திரத்தில் சின்ன வரிசைமுறையை ஒவ்வொரு தொகுதிக்கும் மாற்றி அமைக்க வேண்டும். தாமரை மூன்றாவது பட்டன் என்றால் 234 தொகுதிகளிலும் மூன்றாவது பட்டன் என்பது கேள்விக்குரிபானது. இவர்கள் மூன்றாவது பட்டனில் தனிச்சிறப்பான ஒரு Code-லை program-ல் சேர்த்து விட்டால். அது 50 ஓட்டு என்பதற்கு பதிலாக 150 ஓட்டு என்று கணக்கிட்டுக்கொள்ளும். இது போல் 50 500 5000 என்ற எண்ணிக்கையை அடையும்போது உங்கள் இஸ்டம் போல் ஓட்டை கூட்டிக்கொள்ளலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம். இதையெல்லாம் அந்த பட்டனுக்கான program பார்த்துக்கொள்ளும். அரசியல்வாதிகள் அல்லது கம்யூட்டர் நிபுணர்கள் கூட அந்த ஒவ்வொறு பட்டுக்கும் உள்ள program-யை படித்து பார்த்து புரிந்து கொள்ள முடியாது.


venugopal s
ஏப் 13, 2025 12:37

மத்திய பாஜக அரசு இவருக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதவி கொடுத்ததற்கு இந்தப் பொய் கூட சொல்லக் கூடாதா?


C.SRIRAM
ஏப் 13, 2025 18:16

இந்த மாதிரி வெட்டி நிரூபிக்கமுடியாமல் தொடர்ந்துஉளறுவதற்கு ஏராளமான மான நஷ்ட வழக்கு போட்டு கடும் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்


பிரேம்ஜி
ஏப் 13, 2025 07:46

எந்த வியாபாரியும் தான் விற்கும் எல்லாப் பொருளும் தரமானது என்றுதான் கூற வேண்டும்! வாடிக்கையாளர் தான் விழிப்பாக இருந்து தரமான பொருளை வாங்க வேண்டும்! தவிர அதிகாரி ஒன்றும் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் இல்லை! அவரும் ஒரு நம்பிக்கையில் தான் சொல்கிறார்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை