உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி.வி.ஐ.பி., பாஸ் ரத்து: மஹா கும்பமேளாவில் புதிய கட்டுப்பாடுகள்

வி.வி.ஐ.பி., பாஸ் ரத்து: மஹா கும்பமேளாவில் புதிய கட்டுப்பாடுகள்

பிரயாக்ராஜ்: மஹா கும்பமேளா நடக்கும் பகுதியில் கூட்டத்தை நிர்வகிக்கவும், பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய கட்டுப்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு விதித்துள்ளது.உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவில், மவுனி அமாவாசையான நேற்று முன்தினம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 2:00 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராட சங்கமத்தை நோக்கி முன்னேறியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்டத்தை நிர்வகிக்கவும் ஐந்து முக்கிய மாற்றங்களை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன் விபரம்:1. வாகனங்களுக்கு தடா: மஹா கும்பமேளா நிகழ்வு நடக்கும் பகுதிக்குள், அனைத்து விதமான வாகனங்கள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.2. வி.வி.ஐ.பி., 'பாஸ்' இல்லை: மிக முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் வி.வி.ஐ.பி., பாஸ்கள் இனி வழங்கப்படாது. எந்த சிறப்பு பாஸ் வைத்திருந்தாலும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இதில் எவ்வித விதிவிலக்குகளும் கிடையாது.3. ஒருவழி பாதை: பக்தர்களின் போக்குவரத்தை நிர்வகிக்க பிரயாக்ராஜ் முழுதும் ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.4. வாகன கட்டுப்பாடு: அண்டை மாவட்டங்களில் இருந்து பிரயாக்ராஜ் வரும் வாகனங்கள், மாவட்ட எல்லையிலேயே நிறுத்தப்படும். 5. பிப்., 4 வரை கிடுக்கி: கும்பமேளாவில் ஒழுங்கை பராமரிக்க, பிப்., 4 வரை பிரயாக்ராஜ் உள்ளே நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.மேலும், கூட்டத்தை நிர்வகிக்கும் பணியை வலுப்படுத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆசிஷ் கோயல் மற்றும் பானு கோஸ்வாமி ஆகியோர் உடனடியாக பிரயாக்ராஜ் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும், 2019ல் நடந்த அர்த் கும்ப நிகழ்வை மிக தெளிவாக திட்டமிட்டு அசம்பாவிதங்கள் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் என்பதால், மாநில அரசு அவர்களை வரவழைத்துள்ளது.இவர்களுடன், பெரும் கூட்டங்களை கையாண்ட அனுபவமுள்ள சிறப்பு செயலர் அந்தஸ்திலான ஐந்து அதிகாரிகளும் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக நேற்று முன்தினம் வரை, 27.58 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் வந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும், 7.64 கோடி பேர் புனித நீராடினர்.நேற்று முன்தினம் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்ட போதும், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. நேற்று காலை 8:00 மணிக்குள், 55.11 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் கும்பமேளா நடத்தும் அனைத்து மாநில அரசுகளும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான கும்பமேளாவை உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மாநில அரசுகள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜன 31, 2025 10:56

முப்பது பேர் இறந்ததாக மத்திய மாநில பாஜக அரசுகள் சொல்வதை நம்பமுடியவில்லை. உத்தரப் பிரதேச கொரோனா இறப்பு கணக்கு போல் இல்லாமல் இருந்தால் சரிதான்!


N Sasikumar Yadhav
ஜன 31, 2025 15:04

யாரு அந்த சாரு ? யாருடையது அந்த காரு ? முதலில் அதை சொல்லுங்க திரு கோபாலபுர கொத்தடிமை அவர்களே


அப்பாவி
ஜன 31, 2025 10:46

அதான் வி.ஐ.பி க்கள் எல்லோரும் வந்து ஸ்னாநம் பண்ணிட்டுப் போயாச்சே இன்னும் ரெண்டு பேர்தான் பாக்கி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை