உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிப்பு

மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிப்பு

சென்னை : ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறொருவரின் பெயருக்கு மாற்ற சொத்து வரி ரசீது, 'நோட்டரி கடிதம்' உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு, மின் வாரிய அலுவலகங்களில் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.உரிமையாளர் மறைவு மற்றும் சொத்து விற்பனை காரணமாக, வீடு, கடைகளின் மின் இணைப்பு, வேறு நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த சேவைக்கு, மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

புகார்

உயிரிழந்த நபரின் பெயரில் உள்ள மின் இணைப்பை மாற்ற, தாசில்தார் அலுவலகத்தில் வழங்கப்பட்ட வாரிசு சான்று, மற்ற வாரிசுகளின் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சொத்து விற்கப்பட்டால், புதிய உரிமையாளருக்கு சொத்து மாறிய கிரைய பத்திரம், பழைய உரிமையாளர் மின் இணைப்பிற்கு செலுத்திய வைப்பு தொகையை, புதிய உரிமையாளருக்கு மாற்றி தரும் ஒப்புதல் கடிதம் பதிவேற்றப்பட வேண்டும். இவற்றுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.தற்போது, தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்ற, 645 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பல அலுவலகங்களில், சொத்து வரி செலுத்திய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டு, அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

லஞ்சம்

இதுகுறித்து, மின் நுகர்வோர்கள் கூறியதாவது

மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்தாலும், அந்த சேவையை செய்து தருவதில்லை. விற்பனை பத்திரம், நோட்டரி கடிதம், வரி செலுத்திய ரசீது, ஆதார் நகல், சமையல் காஸ் சிலிண்டர் ரசீது கேட்கின்றனர்.உடனே சேவையை செய்து தர, லஞ்சமும் கேட்கின்றனர். எனவே, என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்ற விபரத்தை, மின் வாரியத்தின் அனைத்து அலுவலகத்திலும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பு முகாம் நடத்தப்படுமா?

மின் இணைப்பு பெயர் மாற்ற சேவையை செய்து தர, அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாமை, 2023ல் மின் வாரியம் நடத்தியது. ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த முகாமில், உடனுக்குடன் பெயர் மாற்றம் செய்து தரப்பட்டது. தற்போதும், இதேபோல மாநிலம் முழுதும் சிறப்பு முகாம் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நுகர்வோரிடம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Bhaskaran
ஜூன் 04, 2025 16:46

சிறப்பு முகாம் நடத்தி மக்களுக்கு நன்மை செய்தனர் ஆனால் அதனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்க முடியாமல் போனதால் மீண்டும் முகாம் நடத்துவதாக இல்லை என்று தகவல்


Gajageswari
ஜூன் 04, 2025 05:13

அரசு என்றால் அதன் பெயர் அலைகழிப்பு. கட்டிடம் கட்ட அனுமதி அளித்துவிட்டு, வாய்மொழியாக வேலை நிறுத்த சொல்லும் அதிகாரிகள்


Ethiraj
ஜூன் 04, 2025 04:24

Weekly once every Saturday there can be a camp in SE office to change of name in EB card can be organised


Saai Sundharamurthy AVK
ஜூன் 03, 2025 22:58

ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம் சரியில்லை. மின்வாரிய ஊழியர்களும் சரியில்லை. எதற்கெடுத்தாலும் பணம் கேட்கிறார்கள். பிச்சைக்காரர்களாகவும், அயோக்கியர்களாகவும் மாறியிருக்கின்றனர். வேலையும் தெரியவில்லை. வேலையில் சுத்தமும் இல்லை. ஏனோதானோ என்று செய்கிறார்கள். ஸ்டாலின் மின் கட்டணத்தை இந்த ஜூன் மாதத்திலிருந்து அதிகம் ஏற்றியிருக்கிறார். இவர் ஆட்சி தான் செய்கிறாரா


Ramesh
ஜூன் 03, 2025 21:54

மறைமலை நகர் அலுவகத்தில் ஒரு சிங்கிள் ஃபேஸ் இணைப்புக்கு Rs6000... லஞ்ச ஒழிப்பு தூங்குகிறதா?


முருகன்
ஜூன் 03, 2025 07:41

லஞ்சம் வாங்கினால் வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும் அதுவே இதற்கு தீர்வு


Saamaanyan
ஜூன் 03, 2025 06:58

போட வேண்டிய வாய்கரிசியை போட்டால் எந்த ஆவணமும் இல்லாமலே தானா வரும்...


CHELLAKRISHNAN S
ஜூன் 03, 2025 13:15

correct


Manaimaran
ஜூன் 03, 2025 05:24

காசு குடுத்த வீடு தேடி வரும் No அலைச்சல என்ன கூடுதல? கவனிக்கனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை