உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2006 போல் தொகுதி தேர்வு வேணும்: காங்கிரஸ் டிமாண்ட்!

2006 போல் தொகுதி தேர்வு வேணும்: காங்கிரஸ் டிமாண்ட்!

'காங்கிரஸ் அடையாளம் காண வேண்டிய 125 தொகுதிகளை, கட்சியின் பொற்காலமாக இருந்த 2006 சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி தேர்வு செய்யுங்கள்' என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், தமிழக காங்., செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி., வலியுறுத்தி உள்ளார். தேர்தல் வியூகம் தொடர்பாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்., ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், விஷ்ணுபிரசாத் பேசியது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4mardgil&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் 48 தொகுதிகளில் போட்டியிட்டு, 34ல் வென்றது. அப்போது, காங்., வாங்கிய ஓட்டு சதவீதம் அதிகம். காங்கிரசுக்கு பொற்காலமாக நடந்த தேர்தல் அது. கடந்த 2006 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வாங்கிய தொகுதிகளை அளவுகோலாக வைத்து, இடங்களை பெற்றால், வாங்குகிற தொகுதிகளில் வெ ற்றி பெறலாம். எனவே, 125 தொகுதிகளை அடையாளம் காணும் பட்டியலில், கடந்த 2011, 2014, 2016 ஆகிய தேர்தல்களை அளவுகோலாக வைத்து, தேர்வு செய்யும் முடிவை எடுக்க வேண்டாம். ஏனென்றால், அந்த தேர்தல்களில் காங்.,குக்கு பெரிய அளவில் வெற்றி கிட்டவில்லை. தி.மு.க.,வுடன் சட்டசபை தேர்தலுக்கான ஒப்பந்தம் போடும்போது, உள்ளாட்சி தேர்தல் பங்கீடு சதவீதம், அறங்காவலர் பதவி, வாரியத் தலைவர் பதவிகளுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட வேண்டும். அது கடைக்கோடி தொண்டர்களையும் மகிழ்ச்சியடைய வைக்கும். பள்ளம் தோண்டி விதை போட்டதும், அதற்கு தான் உரம் போட வேண்டும். விதை இல்லாத மண்ணிற்கு உரம் போடக்கூடாது. அதேபோல், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு விஷ்ணுபிரசாத் பேசிய பின், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசுகையில், “விஷ்ணு பிரசாத்தின் கருத்தை, டில்லி மேலிடத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்,” என உறுதியளித்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

theruvasagan
நவ 06, 2025 22:15

சத்திரத்து திண்ணையில் ஒதுங்கின ஆண்டி பிரம்மாண்ட மாளிகை கட்டி குடிபோகிற மாதிரி கனவு கண்டானாம். காலையில் விழித்துப் பார்த்தால் சத்திரத்து வாசலில் தரையி்ல் கிடக்கிறானாம். ராத்திரி அவன் பக்கத்தில் படுத்த யாரோ ஒரு போக்கிரி இடம் பற்றாமல் அவனை கீழே உருட்டி தள்ளிவிட்டதால் கீழே கிடக்கிறான். கான்கிராஸின் நிலைமை அதே மாதிரிதான்.


Santhakumar Srinivasalu
நவ 06, 2025 18:02

கொடுக்கற தொகுதி ₹ வாங்கீட்டு கம்முன்னு இருக்கனும். பீகார் நிலவரம் பார்த்துட்டு பேசிக்கலாம்!


Murthy
நவ 06, 2025 15:44

பார்ப்போம்


Santhakumar Srinivasalu
நவ 06, 2025 13:25

அதிக தொகுதி என்பது காங்கிரஸின் அழிவு! இந்தியா முழுக்க அழிவுக்கு பப்பு வும் தான் முழு காரணம்?


சந்திரசேகர்
நவ 06, 2025 10:35

வடிவேல் காமெடி நினைவுக்கு வருகிறது. யாருகிட்ட கேட்கிற அண்ணகிட்ட தானே கேளு கேளு. விற்று பிரசாத் அப்ப ஒரு நூறு சீட் கொடுக்க அண்ணே. மீதி வாசகர்கள் கற்பனைக்கு


SIVA
நவ 06, 2025 08:43

ரிசல்ட் 1996 போல் இருக்கும் ....


D Natarajan
நவ 06, 2025 08:20

கான்க்ரெஸ் க்கு அதிக சீட் கொடுத்தல் ADMK க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ஆகிவிடும்.


duruvasar
நவ 06, 2025 08:03

48 என்ற அளவுகோலாக வைத்து 25 இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி என சூசகமாக பிள்ளயார் சுழி போட்டுவிட்டார். ஆட்சியில் பங்கு என்ற வார்த்தையை கவனமாக தவிரது விட்டதை கவனிக்கவும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ