உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வானிலை முன்னறிவிப்பு செயலி: புதிய வசதிகளுடன் அறிமுகம்

வானிலை முன்னறிவிப்பு செயலி: புதிய வசதிகளுடன் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வானிலை எச்சரிக்கை, மழை நிலவரம் உள்ளிட்ட தகவல்களை, பொது மக்கள் அறிவதற்காக ஏற்படுத்தப்பட்ட, 'டி.என் அலர்ட்' மொபைல் போன் செயலி, நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.சென்னை தலைமை செயலகத்தில், கடந்த மாதம் 30ம் தேதி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, 'தங்கள் பகுதி சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை, பொது மக்கள் எளிதில் அறிவதற்கு வசதியாக, புதிய செயலி உருவாக்கப்படும்' என்று அறிவித்தார்.அதன்படி ஏற்கனவே இருந்த டி.என்.அலர்ட் செயலி, நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. இதிலுள்ள வசதி விபரங்களை, நேற்று சென்னை எழிலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாத் துார் ராமச்சந்திரன் வெளியிட்டார். 'கூகுள் பிளே ஸ்டோர், ஐஓஎஸ் ஆப் ஸ்டோர்' ஆகிய தளங்களில், 'TN- Alert' என, 'டைப்' செய்து, மொபைல் போன்களில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதன் வழியே, பொது மக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை தகவல்கள், முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அறியலாம். அடுத்த நான்கு நாட்களுக்கான, வானிலை முன்னறிப்பு, தினசரி மழை அளவு, நீர்த்தேக்கங்களின் நிர் இருப்பு, வெள்ள அபாயம் குறித்த விபரங்களை அறியலாம்.பேரிடர் மற்றும் கன மழை காலங்களில், பொது மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை