மனிதர்களால் முடியாதது மூடநம்பிக்கை செய்தது
காட்டு யானை மீது கல் எறிந்து சேட்டை
கர்நாடகாவின் நாகர்ஹோளே புலிகள் காப்பகம் வழியாக டூவீலரில் வந்த இருவர், காட்டு யானை மீது கல் எறிந்த வீடியோ, வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை தங்களை நோக்கி வருவதுபோலத் தெரிந்ததும் இருவரும் அங்கிருந்து தப்பினர். வீடியோ வலைதளங்களில் பரவிய நிலையில், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலைதளவாசிகள் கோரி வருகின்றனர்.புல்டோஸரில் வந்தார் புது மாப்பிள்ளை
உ.பி., பஹ்ரைச்சை சேர்ந்த மணமகன் அப்துல் கலாம், ஆடம்பரக் கார், குதிரை போன்றவற்றுக்கு பதிலாக புல்டோஸரில் மணமகள் வீட்டுக்கு ஊர்வலமாக வந்த நிகழ்வு, வலைதளங்களில் பரவியது. பாரம்பரிய உடையில், அவர் புல்டோஸரில் பயணித்தபோது வழியெங்கும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு படம் பிடித்தனர். திருமண ஊர்வலம் முதலில் காரில் செல்வதாக தான் திட்டமிட்டிருந்தனர்; 'முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புல்டோஸர் நடவடிக்கைகளால் கவரப்பட்ட மணமகன் ஜேசிபியையே முன்பதிவு செய்ய வலியுறுத்தினார் என்கின்றனர், உறவினர்கள்.தும்பிக்கை முகமூடியில் நம்பிக்கை ஆசிரியர்கள்
உ.பி., பரேலி பள்ளியில், குழந்தைகள் தினத்தன்று ஆசிரியர்கள் யானை முகமூடி அணிந்து, நாட்டிய நாடகம் நடத்தியது வலைதளங்களில் பரவி வருகிறது. ஆசிரியைகள், யானையின் தும்பிக்கை போன்று செய்யப்பட்ட முகமூடியை அணிந்து கொண்டு ஆடிப்பாடியதை கண்டு கூடியிருந்த மாணவ, மாணவியர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 'இவர்கள் தான் நம்பிக்கை ஆசிரியர்கள்' என்கிறார், வலைதளவாசி ஒருவர். இந்த வீடியோவை, இன்ஸ்டாகிராமில் 1.7 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர்.மனிதர்களால் முடியாதது மூடநம்பிக்கை செய்தது
நெரிசலான சாலையின் மையத்தடுப்பில் சிறிது இடைவெளி இருந்தாலும்போதும்; அதை பாதசாரிகள் வழியாக பயன்படுத்த தொடங்கி விடுவர். டில்லி மங்கோல்புரியில் பல்லாண்டுகளாக இப்படி நடப்பதை கண்ட வாலிபர், அதற்கு முடிவு கட்ட நினைத்தார். சாலை இடைவெளியில், வட்டம் போட்டதுபோல குங்குமத்தை கொட்டினார்; கிண்ணத்தில் கொஞ்சம் குங்குமத்தையும் வைத்து விட்டார்.'பில்லி சூனியமோ' என பயந்த பாதசாரிகள், அதில் செல்வதை தவிர்த்து ஒழுங்கான சாலையில் சென்றனர். வீடியோவை பார்த்த பலரும், 'அரசு உத்தரவால் முடியாத ஒன்றை, மூடநம்பிக்கை செய்திருக்கிறது' என பதிவிட்டனர். இன்னொருவர், 'இந்தியப் பிரச்னைகளுக்கு தேவை இந்திய தீர்வுகளே' என்று பதிவிட்டார்.தொப்பியை விழுங்கியது; தீவிர சிகிச்சையில் நீர் யானை!
துாங்கும் நாய்களுக்கு கடைக்காரர் 'காவல்'
50 மீட்டர் ஸ்கேட்டிங்; இளம்பெண் உலக சாதனை