உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீன் மார்க்கெட், மீன்பிடி துறைமுகங்களை துாய்மையாக பராமரிக்க என்ன திட்டம்? அரசிடம் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்

மீன் மார்க்கெட், மீன்பிடி துறைமுகங்களை துாய்மையாக பராமரிக்க என்ன திட்டம்? அரசிடம் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்

சென்னை: மீன் சந்தைகள், மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்களை துாய்மையாக பராமரிக்க, மீன்வளத்துறை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 'பிளாஸ்டிக் குப்பை, மரக்கழிவுகள், தெர்மாகோல் போன்றவற்றால், முக்கியத்துவம் வாய்ந்த சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், குப்பை தீவாக காட்சி அளிக்கிறது. காசிமேடு முதல் எண்ணுார் வரையிலான கடற்கரை பகுதிகள் குப்பை குவிய லாகவே உள்ளன. 'கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, மீனவர் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபற்றி, 2024 பிப்ரவரி 5ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மீன் சந்தைகள், மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்களில் கழிவுகள் அகற்றப்பட்டு, துாய்மையாக பராமரிக்கப் படுவதையும், தெர்மாகோல் பெட்டிகள், பிற மட்காத பொருட்களை முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்யவும், மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து, மீனவர்கள் சங்கங்களுக்கு வழிகாட்டுவதற்காக, தமிழக மீன்வளத்துறை செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக, மீன்வளத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தெர்மாகோல் பெட்டிகளை, மீண்டும் பயன்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து விவாதிக்க, மீன் வளத்துறை செயலர் தலைமையில், சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீன் சந்தைகள், மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்களை துாய்மையாக பராமரிக்க, மீன்வளத்துறை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மீன் வளத்துறையும், சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மைக் குழுவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை, டிசம்பர் 9ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vasan
நவ 04, 2025 10:50

அனைவரும் சைவத்துக்கு மாறி விடுங்களேன். மீன், மாமிசம் வேண்டாமே.


KOVAIKARAN
நவ 04, 2025 10:38

மீன் மார்க்கெட், மீன்பிடி துறைமுகங்களை துாய்மையாக பராமரிப்பதில் தமிழக சுகாதார துறைக்கு எந்த அக்கறையும் இல்லையா? தமிழக சுகாதார துறைக்கு இதில் சம்பந்தம் இல்லையா? இந்தக் குப்பையினால், பலவிதமான நோய்கள் பரவினால், சுகாதாரத் துறைதானே அதைத்தடுக்கமுடியும். ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிறைந்த சென்னை மாநகரகத்தில் உள்ள சுகாதார பிரிவு என்ன செய்ய முடியும்?


Ramesh Sargam
நவ 04, 2025 10:21

பேசாம வாசனை உள்ள மீன்களையே மீனவர்கள் பிடிக்கவேண்டும், அதையே விற்கவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றிவிடலாமா? என்னா ஒரு சில கோடிகள் செலவாகும் சட்டம் இயற்றி, நடைமுறைப்படுத்த. பரவாயில்லையா?


Ramesh Sargam
நவ 04, 2025 09:49

இறந்த மீன்கள் இருக்கும் இடம் துர்நாற்றம் அடிக்காமல் வாசனையாக இருக்குமா? சரி தூய்மையாக பராமரிக்க என்ன திட்டம் என்று அரசிடம் கேட்டது மிக பெரிய தவறு. இப்பொழுது அரசு பல கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் சென்ட், அதாவது வாசனை திரவியங்கள் வாங்கி மீன் மார்க்கெட், மீன்பிடி துறைமுகம் எங்கும் தடவுவார்கள். செல்லூர் ராஜு என்று ஒரு அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா? அதுபோல திமுக அமைச்சர்களும் சென்ட் வாங்கி பூசுவது போன்று ஏதாவது செய்து மக்கள் வரிப்பணத்தை ஆட்டைபோடுவார்கள். இது தேவையா?


அப்பாவி
நவ 04, 2025 08:11

மீன்கள் மீது சந்தனம் பூசலாம். செண்ட் அடிக்கலாம்னு திட்டங்கள் பரிசீலனையில் இருக்காம்.


Vasan
நவ 04, 2025 07:27

China Wuhan fish market : Covid-19 Coronavirus outbreak started from this fish market.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை