உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுல் தாமதமாக உணர்ந்த தவறை ஸ்டாலின் எப்போது உணருவார்?

ராகுல் தாமதமாக உணர்ந்த தவறை ஸ்டாலின் எப்போது உணருவார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: மத்தியில் காங்., கூட்டணி ஆட்சியில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தவறு. தெலுங்கானாவில் இப்போது நடத்தப்பட்டது போன்ற சமூகத்தின் 'எக்ஸ்ரே பதிவைக் காட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருக்க முடியாது' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார். 'மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பால், மாநிலங்களின் சமூக நீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூக நீதித் தேவைகளுக்காக தனித்தனியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்பது தான் ராகுல் கருத்தின் பொருள். இதைத்தான், நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்தக் கருத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும், அவரால், அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு ஜாதியின் மக்கள்தொகை விபரங்களை வெளிக்கொண்டு வரக்கூடியது. அந்த விபரங்கள் வெளி வந்தால், மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதல்வர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை. ஆட்சியை இழந்து, பத்தாண்டுகளுக்குப் பின், ராகுல் உணர்ந்த தவறை ஸ்டாலின் பதவிக் காலத்திலேயே உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

naranam
ஜூலை 27, 2025 15:39

ஜாதிவாரி கணக்கெடுப்பும் வேணாம் ஒரு மண்ணாகட்டியும் வேணாம்.. அதான் ஜாதியை பெரிய மண்ணு ஒழித்துவிட்டது என்று பேசிக்கிறாங்களே!


Oviya Vijay
ஜூலை 27, 2025 11:29

இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் கோமாளித்தனமான செய்கைகளை தவறு என்று 2026 தேர்தல் முடிவுகள் வரும் வேளையில் நீங்களும் தாமதமாக உணரப் போகிறீர்கள்... எப்போது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சண்டை வீதிக்கு வந்ததோ அப்போதே உங்கள் மதிப்பு ஊர் சிரிக்க ஆரம்பித்து விட்டது... உங்களைச் சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டங்கள் போடும் வெற்று கோஷங்கள் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு மாறாக தேர்தலில் விழப்போகும் அடி உங்களை நிலைகுலையச் செய்யலாம்... உணர்ந்து செயல்படுங்கள்...


Purushothaman
ஜூலை 27, 2025 14:48

அரசுக்கு எதிராக நியாயமாக போராடினால் கோமாளித்தனம் என்று விமர்சிப்பதா எல்லா கட்சிகளும் கலகத்தில் சிக்கியுள்ள...பாமக கலகத்தால் பிறந்த கட்சி...இதற்கு முன் பல உட்கட்சி பிரச்சினையை தாங்கி இன்றும் அதே வலிமையோடு உள்ள கட்சி...திராவிடிய மாடலை விமர்சித்தால் வலீக்கிறதோ


பழனி ராஜா
ஜூலை 27, 2025 11:29

ஏழைகள் எப்போதும் ஏழைகளாக வைக்க வேண்டும் என்று எல்லா ஜாதி பணக்காரர்களும் விரும்புவதால் தான் ஜாதிய இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஏழைகளை ஜாதி பிரிவினைக்கு பழக்கப்படுத்தி விட்டு பல ஜாதி பணக்காரர்கள் ஒன்று கூட முன்னேறுவார்கள்.


pmsamy
ஜூலை 27, 2025 09:38

போ டம்மி பீஸ்


Purushothaman
ஜூலை 27, 2025 09:17

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது தோல்வி அடைந்த திட்டம். MGR இதன் மூலம் நல்ல பாடத்தை கற்றுக் கொண்டார். வகுப்புவாத விகிதாசாரம் மிக சரியான நடைமுறை. தன்னுடைய ஆட்சி இழந்த பின் சிந்திப்பார் வாரிசு


பழனி ராஜா
ஜூலை 27, 2025 07:23

இட ஒதுக்கீடு என்பது ஜாதி பிரிவினையை வலுப்படுத்தும் திட்டம்.


D Natarajan
ஜூலை 27, 2025 06:31

சமூக நீதி என்றால் என்ன. அனைத்து ஏழை மக்களுக்கும் நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடு போய் சேரவேண்டும் . IPS IAS பதவியில் உள்ளவர்களின் குடும்பத்துக்கு , தலித், பிற்பட்ட வகுப்பினர், ஏன் இட ஒதுக்கீடு. 40% மெரிட் , 60% ஏழை & மெரிட் முறையில் இட ஒதுக்கீடு முறை செய்யப்பட வேண்டும்