உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பேரிடர் நிவாரண நிதியை எப்போது தருவீர்கள்? எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

பேரிடர் நிவாரண நிதியை எப்போது தருவீர்கள்? எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

'நிவாரணம் கிடையாது' என ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ள நிலையில் இந்த விஷயம் தொடர்பான உண்மை நிலவரம் வருமாறு: ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., - எம்.பி., சிவா பேசும்போது, ''மத்திய குழு அறிக்கை அளித்த ஒரு மாதத்திற்குள் பேரிடர் நிவாரண நிதி வழங்கிட வேண்டுமென்று விதிமுறைகள் இருந்தபோதிலும், அதை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது ஏன்.நிதியை விரைந்து விடுவிப்பதற்கு பரிசீலிக்க முடியுமா'' என கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில்: தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு என, தேசிய அளவில் கொள்கை உள்ளது. இதன்படி, கீழ்மட்ட அளவில் நிவாரண உதவிகளை அளிப்பது மற்றும் பேரிடர் நிர்வாக மேலாண்மை செய்யும் பொறுப்பு ஆகியவை மத்திய, மாநில அரசுகளை சார்ந்தது. மத்திய அரசை பொறுத்தளவில் தேவையான அடிப்படை உதவிகள் மற்றும் நிதி ஆதரவு ஆகியவற்றை அளிக்கும்.வெள்ளம், நிலச்சரிவு உட்பட 12 வகையிலான இயற்கை பேரிடர்கள் பட்டியலில் உள்ளன. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநில அரசே நிதியை வழங்கிட முடியும். அதேசமயம், அது விதிகளுக்கு உட்பட்டதாகவும், மத்திய அரசின் ஒப்புதலோடு, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியாகவும் இருக்க வேண்டும்.இயற்கை பேரிடரின் அளவு மோசமாக இருக்கும் பட்சத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியுதவி அளிக்கப்படலாம். அந்த நிதியுதவியும், மத்திய அமைச்சகங்கள் குழு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அந்த குழு அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டே இருக்கும்.முன்பெல்லாம் பேரிடர் நிகழ்வுடன், மாநில அரசு கேட்டுக்கொண்ட பின்னரே, மத்திய அமைச்சர் குழு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 19ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவின்படி, மாநில அரசின் தகவலுக்கு காத்திருக்காமல், பேரிடர் நிகழ்ந்தவுடன் உடனடியாக மத்திய குழு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதோடு, சேதாரங்கள் மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் வகையில் இந்த குழு செல்கிறது. அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட தேவைப்படும் பட்சத்தில், இந்த மத்திய குழு மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும். மாநில அரசின் கோரிக்கைகள் அடிப்படையில் மத்திய குழு, தன் இறுதி அறிக்கையை தயார் செய்யும்.அரசியலமைப்பு சட்டம் 29ன் கீழ், நிதிக்குழு அளிக்கும் அந்தந்த நேரத்து பரிந்துரைகளின் அடிப்படையில் தான், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதியை, இதற்கென இருக்கக்கூடிய விதிகளின்படியே செலவிட வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க, மாநில அரசுக்கு சுதந்திரம் உண்டு.பட்டியலில் வராத பிற பேரிடர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான வருடாந்திர ஒதுக்கீட்டில் 10 சதவீத நிதியை மட்டும் உடனடி உள்ளூர் பேரிடர் நிவாரண பணிகளுக்கு என விதிமுறைகளுக்கு உட்பட்டு செலவு செய்து கொள்ள மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

V GOPALAN
டிச 07, 2024 14:54

100 கோடி அன்பில் பொய்யாமொழி மற்றும் உதயநிதி பிறந்த தினத்தை அரசு நிதியின் மூலம் கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு ஒரு பைசாவும் தரக்கூடாது.


Ramesh Sargam
டிச 07, 2024 13:48

மத்திய அரசு தரும் நிவாரண நிதி எப்படி செலவிடப்படுகிறது என்று கணக்கு மாநில அரசு காட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டிருக்க வேண்டும்.


V RAMASWAMY
டிச 07, 2024 11:13

கலைஞர் நினைவகம், காட்சியகம், அது இது என்று கோடி கோடியாக செலவிடும் அரசுக்கு பேரிடர் நிவாரணத்திற்காக பணமா இல்லை? கொள்ளையடிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சில கோடிகள் கொடுத்தாலே போதுமே? ஆனால் நிவாரண நிதி என்கிற பெயரில் கொள்ளை அடிக்கப்படுமே , ஐயோ போதும்டா சாமி இந்த தமிழக கொள்ளை அரசியல்.


sankar
டிச 07, 2024 09:36

அன்னே - கோபாலபுரத்தில்தான் கொட்டிக்கிடக்குதே - நீங்கள் ஏன் அவர்களிடம் கேட்கவேண்டும்


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:35

அதாவது எங்கள் கட்சிக்கு நிவாரணம் எப்போது தருவீங்க ????


ஆசாமி
டிச 06, 2024 20:46

காசுக்கு மட்டுமே வாயை திறக்கும் திருட்டு திராவிசம்


NATARAJAN R
டிச 06, 2024 18:54

நிதி 2000 கோடி உடனே தர வேண்டுமாம் மத்திய அரசு. இவர்கள் ரூபாய் 16 கோடி மக்கள் வரி பணம் செலவில் பாலம் கட்டி அது திறந்த 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இவர்கள் 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் தேங்காமல் இருக்க இதுவரை என்ன செய்தார்கள் என்று பதில் இல்லை. எதிர் கட்சி தலைவர் கேள்வி கேட்டால் அவருக்கு கேட்க தகுதி இல்லை. பாஜக கேட்டால் அண்ணாமலை தோல்வி அடைந்த அரசியல்வாதி.அவருக்கு தகுதி இல்லை. பாமக கேட்டால் அவருக்கு வேறு வேலை இல்லை. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுக்கு முட்டுக் கொடுக்கவே நேரம் போதவில்லை. யார் இவர்களை கேட்பது? நீதிமன்றம் தலையிட வேண்டும்


Vadivelu, Tenkasi
டிச 06, 2024 18:14

திராவிட மாடல் சொல்லும் செய்தி என்ன? பொது மக்கள் அழியனும், திமுக மக்கள் மட்டுமே செழிக்கணும்.... யாரு செத்தால் என்ன... எனக்கு கஜானா நெறயனும்...அவ்வளவு தான் செய்தி.. ஓட்டுக்கு காசு வாங்கினால் இப்படிதான்


ஆரூர் ரங்
டிச 06, 2024 15:10

திமுக ஆட்சியே ஒரு பேரிடர்தான். 500 க்கு ஆசைப்பட்டு மக்கள் ஆப்பில் உட்கார்ந்து விட்டனர்.


pv,முத்தூர்
டிச 06, 2024 14:28

அனைத்து நிவாரண நிதியும் கள்ளச்சாராய மரணத்திற்கு வழங்கப்பட்டுவிட்து. அதுவும் தண்ணீரினால்தானே


சமீபத்திய செய்தி