உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காலையில் பெண்கள் பால் வாங்க போனால் கல்ப்ரிட்ஸ் வர்றாங்க; அதனாலேயே நேர மாற்றம்!

காலையில் பெண்கள் பால் வாங்க போனால் கல்ப்ரிட்ஸ் வர்றாங்க; அதனாலேயே நேர மாற்றம்!

சென்னை:''அதிகாலை 5:00 மணியில் இருந்து 6:00 மணிக்குள் பால் வாங்கச் சென்றால், 'கல்ப்ரிட்ஸ்' வருகின்றனர். இதனால், பூத்களில் பெண்கள் பால் வாங்கும் நேரம் 6:30 முதல் 7:30 மணியாக மாற்றப்பட்டு உள்ளது,'' என பால்வளத்துறை அமைச்சர் கண்ணப்பன் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க.,- நந்தகுமார்: அணைக்கட்டு தொகுதியில் அணைக்கட்டு, ஊசூர், ஒடுக்கத்துார் உள்ளிட்ட இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். ஏனெனில், பால் உற்பத்தியாளர்கள் 40 முதல் 50 கி.மீ., பயணித்து, வேலுாருக்கு பாலை எடுத்து செல்ல வேண்டி உள்ளது. நீண்ட துாரம் செல்வதால் பால் கெட்டு போகிறது. தனியார் நிறுவனங்கள் 10 கி.மீ.,க்கு ஒரு குளிரூட்டும் நிலையம் வைத்துள்ளன. அரசுக்கு பால் வழங்க முன்வரும் விவசாயிகளுக்காக, பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்து தர வேண்டும்.அமைச்சர் கண்ணப்பன்: ஒடுக்கத்துார் கிராமத்தில், 11 கிளை சங்கங்களில் இருந்து 3,990 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கு, 5,000 லிட்டரை விட கூடுதலாக பால் கிடைத்தால், குளிரூட்டும் மையம் அமைக்கலாம். தனியார், 56 ரூபாய்க்கு பால் விற்கிறது; நாம், 40 ரூபாய்க்கு விற்கிறோம். பால் கொள்முதலுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, 143 கோடி ரூபாயை முதல்வர் கொடுத்துள்ளார். பால் வாங்குபவரும் ஏழை; விற்பனை செய்பவரும் ஏழை. அவர்களை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.அத்துடன் நஷ்டம் இல்லாமல், ஆவினை நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, பிற பொருட்களை விற்கிறோம்; நல்லபடியாக போய் கொண்டு இருக்கிறது. முந்தைய அரசை விட 11 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் தட்டுப்பாடு இல்லை. பூத்களில் பால் வாங்கும் நேரத்தை மாற்றிக் கொடுத்துள்ளோம். அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்கு பெண்கள் பால் வாங்கச் சென்றால், 'கல்ப்ரிட்ஸ்' வருகின்றனர். முகம் தெரியாது. இதனால், காலை 6:30 முதல் 7:30 மணி வரை பால் வழங்குகிறோம். பெண்களுக்கு எந்த இடையூறும் கிடையாது. பூத்களுக்கு சென்று பால் வாங்குகின்றனர். எம்.எல்.ஏ., தன் லெட்டர் பேடில் கோரிக்கையை எழுதிக் கொடுத்தால், குளிரூட்டும் நிலையம் அமைத்து தர உதவியாக இருப்பேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kannan Ramachandran
மார் 22, 2025 10:59

கலப்ரிட்ஸ் தமிழாக்கம் தேவை


ஆரூர் ரங்
மார் 20, 2025 21:37

பிறரையும் தன்னைப் போல் நினைத்தால்.. தவறு தான்


Ramesh Sargam
மார் 20, 2025 20:43

அந்த கல்ப்ரிட்ஸ்களை பிடித்து சிறையில் அடைக்கவேண்டியது யார் பொறுப்பு? காவல்துறை பொறுப்பல்லவா? அந்த காவல்துறை யார் பொறுப்பில், அதாவது எந்த அமைச்சர் பொறுப்பில் உள்ளது? அவர் என்ன செய்கிறார்? பொறுப்பில்லாமல் தூங்குகிறார்.


sankar
மார் 20, 2025 19:37

இதைச் சொல்ல ஒரு அமைச்சர், வெட்கமாக இல்லையா?


theruvasagan
மார் 20, 2025 19:29

அப்ப காலை 5 மணியில் இருந்து 6 மணி வரை கல்பிரிட்ஸ் சுதந்திரமாக நடமாடலாம் போல. கல்பிரிட்ஸ் நடமாட்டத்தை முற்றிலும் ஒடுக்குவோம்ன்னு சொல்ல வாய் வரலியே. பொறுக்கிகள் என்று தமிழில் சொல்லாமல் கல்பிரிட்ஸ் என்று டீசன்டா சொல்லி அவங்க மனம் புண்படாதவாறு பேசுறாங்கப்பா.


vee srikanth
மார் 20, 2025 10:34

சுகன்யா பெயரில் யாராவது போயிருப்பார்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 20, 2025 09:45

தங்களது ஆட்சியில் எந்த அளவுக்கு கல்பிரிட்ஸ் இருக்கார்கள் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சரியாக நடக்கிறது காவல் துறை எந்த அளவுக்கு தங்கள் பணியை செய்கிறார்கள் திமுகவின் விடியல் ஆட்சியில் விடியற்காலையிலேயே கல்பிரிட்ஸ் சுதந்திரமாக சுற்றுகிறார்கள் என்று திமுக அமைச்சரே திமுக அரசுக்கு கொடுத்துள்ள நற்சான்றிதழ் அப்பா ஸ்டாலின் அவர்கள் அப்பப்பா என்று வியக்கும் அளவுக்கு அரசை திறம் பட நடத்துகிறார். வாழ்க தமிழகம் வளர்க தமிழ்


துன்பநிதி
மார் 20, 2025 09:11

நடப்பது நமது ஆட்சி என உறுதியாக நம்புகிறார்கள்.


அறிவுநம்பி
மார் 20, 2025 09:11

பால் பூத்துக்கு ஒரு சார் இருக்காங்க போலிருக்கே.


RAAJ68
மார் 20, 2025 08:46

எதற்கு அதி காலையில் பால் வாங்க செல்ல வேண்டும். நாளைய தேதி இட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் இன்று மதியமே விற்பனைக்கு வந்து விடுகின்றன. இதே பாக்கெட்டுகள் தான் மறுநாள் காலை விற்கப்படுகின்றன. எனவே முதல் நாள் சாயங்காலமே பால் பாக்கெட் வாங்கி விடுங்கள். அதிகாலை சென்று வாங்கினால் புதியதாக கறந்த பால் கிடைப்பதாக எல்லோருக்கும் நினைப்பு ஆனால் நீங்கள் வாங்குவது முதல் நாள் வந்த மறுநாள் தேதி யிட்ட பழைய பால் தான்.


சமீபத்திய செய்தி