வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரவிந்த் கெஜ்ரிவாலை கொண்டு வந்து பாபத்தை கட்டிக்கொண்ட அன்னா ஹசாரேயை தேடிப்பிடித்து கொண்டு வந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் .......
அம்மையாரின் இந்த கருத்து வெற்றி தோல்வி இரண்டும் வீரனுக்கு அழகு
டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில், யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில், மத்தியில் ஆளும் பா.ஜ., முடிவு எடுக்க முடியாமல் பரிதவித்து வருகிறது.டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. மதுபான ஊழல் வழக்கில் சிறை சென்ற அக்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் உள்ளார்.இதையடுத்து, அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.மொத்தம், 70 தொகுதிகள் உடைய மாநில சட்ட சபைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை. பெரும் குழப்பம்
தொடர்ந்து, ஆறு சட்டசபை தேர்தல்களில் தோல்வியடைந்துள்ள பா.ஜ., இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கட்சிக்கு உள்ள மிகப்பெரும் பிரச்னை, யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பதுதான்.இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணம், டில்லியைச் சாராத ஒருவரை வேட்பாளராக அறிவித்ததுதான். கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. டில்லியின் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றியது.கடந்த 2-015ல் நடந்த சட்டசபை தேர்தலில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கியது. ஆனால், தோல்வி அடைந்தது.இதைத் தொடர்ந்து, 2020 சட்டசபை தேர்தலில் முன்னாள் நடிகர் மனோஜ் திவாரியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ., அறிவித்தது. இதிலும், பா.ஜ., தோல்வியே அடைந்தது. முன்பு அவர், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியிலும், பின்னர் சிறிது காலம் காங்கிரசிலும் இருந்தார்.பா.ஜ., சார்பில் தொடர்ந்து மூன்று முறை டில்லியில் எம்.பி.,யாக இருந்தாலும், மனோஜ் திவாரி தலைமையில் போட்டியிட்ட பா.ஜ., தோல்வி அடைந்தது.இந்ந சூழ்நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் சட்டசபை தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்பதில் பா.ஜ.,வுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பரிசீலனை
இந்த போட்டியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முன்னிலையில் உள்ளார். கடந்த 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரசின் ராகுலை வென்றார். இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், கட்சித் தலைமையின் ஆதரவை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக, டில்லியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.டில்லி முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த சுஷ்மா சுவராஜின் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான பன்சூரி சுவராஜ் இந்த போட்டியில் உள்ளார்.இதைத் தவிர, லோக்சபா எம்.பி., கமல்ஜீத் ஷெராவத் உள்ளிட்டோர் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.விரைவில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து, தீவிர களப்பணியாற்ற பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் போட்டி அளிக்கக் கூடியவராக அவர் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் தற்போதைய நோக்கமாகும்- நமது சிறப்பு நிருபர் -.
அரவிந்த் கெஜ்ரிவாலை கொண்டு வந்து பாபத்தை கட்டிக்கொண்ட அன்னா ஹசாரேயை தேடிப்பிடித்து கொண்டு வந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் .......
அம்மையாரின் இந்த கருத்து வெற்றி தோல்வி இரண்டும் வீரனுக்கு அழகு