உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 1,000 கோடி அமுக்கிய தியாகி யார்?: அ.தி.மு.க., போஸ்டரால் பரபரப்பு

1,000 கோடி அமுக்கிய தியாகி யார்?: அ.தி.மு.க., போஸ்டரால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் நகரம் முழுதும் 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, '1,000 கோடி அமுக்கிய, அந்த தியாகி யார்?' என்று கேட்டு, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 'டாஸ்மாக்' ஊழல் குறித்து பா.ஜ.,வினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அ.தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சியினரும், இவ்விவகாரம் குறித்து தி.மு.க., அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாநகரம் முழுதும் பிரதான சாலைகளில் உள்ள சுவர்களில் 'டாஸ்மாக்' ஊழல் தொடர்பாக போஸ்டர்களை ஒட்டிஉள்ளனர். இவை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில், '1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, 1,000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?' என்று கேட்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 03, 2025 09:39

உறங்கி கொண்டிருந்த புலி எழுந்து விட்டது


முருகன்
மார் 28, 2025 16:39

இதை சொல்வதற்கு முதலில் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஊழல் குட்டையில் ஊறிய ஒரு கட்சி தானே அதுவும்


Padmasridharan
மார் 28, 2025 08:42

அமுக்கியது யாராக இருந்தாலும், , கொடுத்தது போதை பிரியர்கள்தான். பணம் கொடுத்த மது பிரியர்கள் உண்ணா விரதம் மாதிரி "குடிக்கா விரதம்" இருப்பார்களோ என்னவோ


ramesh
மார் 28, 2025 07:03

அப்பாவும் சித்தப்பா, மாமா. அண்ணன் ஆகியோர் தான்


சமீபத்திய செய்தி