உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் யார்?: வெளிநாட்டு துாதுவர்கள் ஆர்வம்!

விஜய் யார்?: வெளிநாட்டு துாதுவர்கள் ஆர்வம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: க ரூர் சோக சம்பவம், தமிழக வெற்றிக் கழகத்தை சோதனையில் ஆழ்த்தினாலும், இன்னொரு பக்கம் வெளிநாட்டு துாதுவர்கள் பலரும், விஜய் குறித்து அதிகம் தெரிந்து கொள்ளவு ம், அவரை சந்தித்து பேசவும் தயாராகி வருகின்றனர்.கிட்டத்தட்ட, 85 நாடுகளின் துாதரகங்கள் இந்தியாவில் உள்ளன. இதில் பலரும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அக்கடிதத்தில், 'தமிழக வெற்றிக் க ழகத் தலைவர் விஜயை சந்திக்க வேண்டும்; அதற்கான அனுமதி தேவை' என, குறிப்பிட்டுள்ளனராம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u33eugfz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெளிநாடு துாதுவர்கள் இந்தியாவின் மாநில கவர்னர்கள், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என, பலரையும் சந்திக்க வேண்டுமென்றால், மத்திய வெளியுறவுத் துறையின் அனுமதியை பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் துாதுவர்களோ அல்லது துாதரகத்தின் சீனியர் அதிகாரிகளோ யாரையும் சந்திக்க முடியாது.இந்தியாவில் நடைபெறும் பார்லிமென்ட் தேர்தல், சட்டசபை தேர்தல் தொடர்பாக, இந்த வெளிநாட்டு துாதரகங்கள் தங்கள் நாடுகளுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கம். தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள, த.வெ.க.,வின் கொள்கை என்ன... விஜய் முதல்வரானால் என்ன செய்யப் போகிறார் என, பல விபரங்களை அறிந்து கொள்ள, வெளிநாட்டு துாதுவர்கள் ஆவலாக உள்ளனர்.சென்னையில் உள்ள அமெரிக்கா உட்பட பல துாதரக சீனியர் அதிகாரிகள், விஜய் குறித்து தங்கள் நாடுகளுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பி விட்டனராம். இருப்பினும், விஜயை சந்திக்க ஆர்வமாக உள்ளனர். தனக்கு கடிதம் எழுதிய அதிகாரிகளுக்கு, ஜெய்சங்கர் அனுமதி அளித்து விட்டாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sun
அக் 19, 2025 18:49

ஒருவேளை நாற்பது பேருக்கு மேல் இறந்தது எந்த மூஞ்சியைப் பார்க்கப் போய்? அந்த மூஞ்சிய கொஞ்சம் நாமளும் பார்க்கனுமேன்னு நினைச்சிருப்பாங்க!


Ekanath Jaguva Krishnamoorthy
அக் 20, 2025 17:41

நம் தமிழ்நாட்டு மக்கள் நடிகர்களின் பின் செல்வது தவறல்ல. ஆனால் விஜய் ஒன்றும் எம்ஜிஆர் போல ஏழைகளின் பசியை அறிந்தவர் அல்ல. இவர் படத்தில் எப்படி ஒழுக்கமின்றி சிகரெட்,மதுவுடன் இருப்பதே இவருக்கு அரசியலுக்கு வர தகுதியில்லை. திராவிடத்தை ஒழிக்க ஊழலற்ற, அறிவும், ஒழுக்கமும், காலநேரம் பார்க்காமல் காமராஜர் போல ஒருவர் முதலமைச்சர் ஆக வரவேண்டும்.


ஆரூர் ரங்
அக் 19, 2025 10:37

வாடிகன் தூதரா?.


Arul Narayanan
அக் 19, 2025 09:39

அனுமதி அளிக்கும் முன் யோசிக்க வேண்டாமா?


RAAJ68
அக் 19, 2025 08:42

விஜயை பிரபலப்படுத்தியது திமுக தான்


அருண், சென்னை
அக் 19, 2025 07:35

NGOஸ்


புதிய வீடியோ