உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஓட்டு சரிவு ஏன்? ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

தி.மு.க., ஓட்டு சரிவு ஏன்? ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் களப்பணியை முடுக்கிவிட தொகுதிவாரியாக கட்சியினரை சந்தித்து கூட்டங்களை நடத்தி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.ஆளுங்கட்சியான தி.மு.க.,வை பொறுத்தவரை, கட்சிக்கான மாவட்டங்களை பிரித்து, சட்டசபை தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்கள் வாயிலாக கூட்டங்களை நடத்த துவங்கி விட்டனர். கடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று கொடுத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, கட்சி தலைமையிடம் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளது. இவர், கட்சி மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து, செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் செந்தில் பாலாஜி நேற்று ஆலோசனை செய்தார். தி.மு.க., வென்ற தொகுதிகளை தக்கவைக்கவும், புதிய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளையும் அப்போது வழங்கினார்.கூட்டத்தில், செந்தில் பாலாஜி பேசியதாவது: இன்னும், ஆறு மாத காலத்துக்குள் திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம் தொகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த பூத்களில் ஓட்டுகள் சரிந்தன என்பது குறித்து கணக்கெடுக்க வேண்டும். பா.ஜ.,வினர் எந்தெந்த பூத்களில் அதிக ஓட்டுகளை பெற்றனர்; அந்த இடத்தில், தி.மு.க.,வுக்கு ஏன் சரிவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் திரட்டப்பட வேண்டும். பலவீனமாக உள்ள அனைத்து பகுதிகளிலும், களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raj S
மே 30, 2025 23:20

ஒரு தேர்தல்ல தனியா நின்னு பாருங்க... தைரியம் இருந்தா...


Muralidharan S
மே 30, 2025 15:10

யாருங்க அந்த ஆய்வு செய்ய அறிவுறுத்திய கோமாவில் இருந்த நபர் - ?


ராமகிருஷ்ணன்
மே 30, 2025 12:53

திமுக ஆட்சியில் சுருட்டிய பணத்தை கொண்டு ஓட்டுக்களாக மாற்றும் டெக்னிக்கை சொல்லி கொடுக்கும் மீட்டிங்கு. மக்களின் பலவீனம் எது அங்கு தட்டி ஓட்டாக மாற்றனும். அரசின் தவறுகள் ஏராளமாக இருப்பதால் பலிக்காது


Kannan
மே 30, 2025 12:01

நான்கு வருடத்தில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமை, டாஸ்மாக் ஊழல், இந்துக்கள் மீது தாக்குதல் சொல்லி முடியாது. இதுவே திமுக வின் ஓட்டு சரிவுக்கு காரணம். 2026ல் திமுக ஆட்சிக்கு வருவது doubt.


sridhar
மே 30, 2025 11:29

ஆய்வு செய்து தான் கண்டுபிடிக்க வேண்டுமா? வீதியில் போகும் சாதாரண மனிதனை கேட்டால் 100 காரணம் சொல்வான் .


angbu ganesh
மே 30, 2025 11:26

கை புண்ணுக்கு எதுக்குங்க கண்ணாடி


குமார்
மே 30, 2025 11:16

கொஞ்ச நஞ்சமா பண்ணுனீங்க...ஓவரா ஆட்டம் போட்டா அப்படிதான்... தினந்தோறும் பாலியல் வழக்குகள்.. தினந்தோறும் கொலை கொள்ளைகள்...ஊழல்..திருடர்களுக்கு ஆதரவு..இப்படி ஆட்சி நடத்துனா ஓட்டு சரியாம என்ன பண்ணும்...


karthik
மே 30, 2025 09:40

அப்படி ஆய்வு செய்தால் மொத்த திமுகவையும் கலைத்துவிட்டு அத்தனை ஆட்களையும் புடித்து உள்ளே போடவேண்டிவரும்.


N Sasikumar Yadhav
மே 30, 2025 08:19

விஞ்ஞானரீதியாக ஆட்டய போட கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும்


புதிய வீடியோ