உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷா கருத்துக்கு பழனிசாமி மவுனம் ஏன்: திருமா

அமித் ஷா கருத்துக்கு பழனிசாமி மவுனம் ஏன்: திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார் : ''செல்வப்பெருந்தகை, ராமதாஸ் சந்திப்பு குறித்து, யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது,'' என்று வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துாரில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், என்று பா.ஜ., கட்சியினர் தான் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், முன்னாள் முதல்வர் பழனிசாமி இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.மேலும், தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., உள்ளதா அல்லது அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணியா என்பதை பழனிசாமி தான் விளக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாசை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்தது கூட்டணி குறித்து பேசுவதற்காகவா? என்பது எனக்கு தெரியாது. பா.ம.க.,வில் நிலவும் குழப்பம் தந்தை, மகனுக்கு இடையிலான ஒன்று. அதில் நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Nathan
ஜூன் 29, 2025 20:50

நீங்களே ஒரு செம்பு தூக்கி. நீங்களெல்லாம் திமுக போடும் பிச்சையை கிடைத்தது போதும் என்று ஸ்டாலினை அண்டி பிழைப்பு நடத்தும் அடியாள். நீங்களெல்லாம் இதை பற்றி பேசலாமா.


Kjp
ஜூன் 29, 2025 14:11

பாவம் திருமா. அதிமுக பாஜக கூட்டணி என்றதும் வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விட்டது.பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் கூட்டணி வைத்து இருந்தால் பதினேழு தொகுதிகளில் வென்று இருப்பார்கள்.இப்போதுள்ள கருத்து கணிப்பு திமுக வின் செல்வாக்கு மிகவும் சரிந்து விட்டது என்று காட்டுகிறது.நீஙகள் தலித் மக்களுக்கு திமுக கூட்டணியில் இருந்து சாதித்து விட்டீர்கள்.பழனிச்சாமி உமக்கு ஏன் கவலை.திமுகவில் உமக்கு என்ன மரியாதை என்று எல்லோருக்கும் தெரியும்.பிளாஸ்டிக் நாற்காலியை யாவது தக்க வைக்கப் பாருங்க


Rajan A
ஜூன் 29, 2025 14:01

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குனு கேட்டியே, பதில் வந்ததா? ஏதோ 2-3 சீட் கிடைக்கும். பிழைப்பு ஓடும்.


yts
ஜூன் 29, 2025 12:10

அது அது அவர்களுடைய கவலை உனக்கு எதுக்கு உன் வேலையை மட்டும் பார் குருமா


theruvasagan
ஜூன் 29, 2025 10:44

ஆட்சியில் பங்கு என்று மேடை மேடையா நீங்க கூவுறதற்கு டீம்கா கருத்து சொல்லாமல் மவுனமாக இருப்பதற்கு என்ன காரணம். முதலில் அதை சொல்லுங்க.


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 29, 2025 10:21

திருமாவளவனுக்கு உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சியில் பங்கு பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தானே, திமுகவிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு தமிழக தலீத் மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் தன் சந்தோஷம் தன் நலத்தை பற்றி மட்டுமே கவலை படும் திருமா இப்படி வயிறு எரிய பேசக்கூடாது.


உ.பி
ஜூன் 29, 2025 10:17

ப்ளாஸ்டிக் சேர் பத்தி ஏன் மௌனம்


Krishna Moorthy
ஜூன் 29, 2025 09:47

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என நீங்கள் கூறியதற்கு திமுகவின் பதில் என்ன என்று முதலில் பொதுவெளியில் போட்டு உடைத்துவிட்டு பின்னர் அதிமுக, பாஜக மற்றும் பாமக பற்றி கருத்து கூறலாமே? முடியுமா?


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 29, 2025 09:38

அதிமுக கட்சி பாஜக கட்சிக்கு எதிராக ஏதாவது எதிர் கருத்து சொல்லி கூட்டணி உடைய வேண்டும் என்று கனவு காண்கிறார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக வெளியே போக வேண்டிய சூழ்நிலை வரும்..அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதால் அங்கும் செல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது இவருக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டது.அதுதான் தினமும் புலம்பி தவிக்கிறார்.. வட மாவட்டங்களில் இவரை விட பாமக கட்சிக்கு செல்வாக்கு அதிகம்..திமுக கழட்டி விட்டால் இவர் தனித்தோ அல்லது தவெக கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும்.. அது திமுக கட்சிக்கு சாதாகமாக மாறும்..மொத்தத்தில் இவரது நிலை பாமக நகர்வை நம்பி உள்ளது..


Balaa
ஜூன் 29, 2025 09:31

நீ அதிக தொகுதி கேட்போம் என்று சொன்னதற்கு கூட திராவிட முதல்வர் மௌனம். அங்க கேளு. ஊருக்கு உபதேசம் வேண்டாம் மா.


முக்கிய வீடியோ