வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிவகுமார் தலையில் ....
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முதலீட்டாளர்களின் மாநாட்டை நடத்தியது, அம்மாநில அரசு. வெளிநாட்டு முதலீடு களை கர்நாடகாவில் ஈர்க்க, இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வருவதாக இருந்தது; ஆனால், கடைசியில் இவர்கள் பங்கேற்கவில்லை.'பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், 'பிசி'யாக இருப்பதால், இந்த இரண்டு தலைவர்களாலும் பங்கேற்க முடியவில்லை' என, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'கார்கே, கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் கூட, ஏன் தன் சொந்த மாநிலத்தில் நடைபெறும் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை' என, கட்சிக்குள் பேசப்படுகிறது.'பட்ஜெட் குறித்த விவாதங்களில், லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுலும் அதிகமாக பேசவில்லை. அதே போல ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கேவும் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்கவில்லை. அப்படியிருக்க என்ன பெரிய பிசி? ஏன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை?' என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.கர்நாடகாவின் துணை முதல்வராக இருப்பவர், சிவகுமார். காங்கிரஸ், கர்நாடகாவில் வெற்றி பெற இவர் முக்கிய காரணம்; ஆனால், இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை.'சித்தராமையாவைத் துாக்கி விட்டு, எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என, கட்சி மேலிடத்தை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் சிவகுமார். இந்நிலையில், கர்நாடகா நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிரச்னை வரும் என்பதால், இருவரும் பங்கேற்கவில்லை என, கூறப்படுகிறது.
சிவகுமார் தலையில் ....