உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரைமுருகனை நீக்காமல் நீலிக்கண்ணீர் வடிப்பதா: ஸ்டாலினுக்கு பா.ஜ., கேள்வி

துரைமுருகனை நீக்காமல் நீலிக்கண்ணீர் வடிப்பதா: ஸ்டாலினுக்கு பா.ஜ., கேள்வி

மதுரை: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன், போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக இருந்தது. தமிழக அரசு இன்றுவரை ஒரு கிராம் அளவுக்குக்கூட 'சிந்தடிக் டிரக்ஸ்' பிடிக்கவில்லை. ஏனென்றால், தி.மு.க.,வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் தான், அதை உலகம் முழுதும் வினியோகம் செய்தார். அடுத்த தலைமுறையை அழிக்கக்கூடிய தீய சக்தியாக முதல்வர் ஸ்டாலின் அரசு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடப்பதை தி.மு.க., எதிர்க்கிறது. 11வது முறையாக தற்போது இம்முகாம் நடக்கிறது. 10 முறை நடந்த போதும், இது தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. வட மாநில பெண்கள், பன்றிகள் போல பிள்ளை பெற்றுக் கொள்கின்றனர் என, பன்றியோடு வட மாநில பெண்களை ஒப்பிட்டு கேவலமாக பேசியவர் அமைச்சர் துரைமுருகன். அவரை, அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஸ்டாலின் ஏன் நீக்கவில்லை? ஆனால், இன்று வட மாநிலத்தவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anbarasu K
நவ 05, 2025 02:00

துரை சாரெல்லாம் போயிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்


Anbarasu K
நவ 05, 2025 01:51

துரை சம்பாரிச்சது போதுங்க வயசான காலத்துல இதெல்லாம் தேவையா போவியா வீட்டை பாக்க காலம் மாறி போச்சுங்க துரை சார் பழைய காலம் இல்ல தும்முனாவே நியூஸ் வந்துரும் போங்க ரெஸ்ட் எடுங்க


Vasan
நவ 04, 2025 18:35

மகளிரை படு கேவலமாக பேசுவதில் சிறந்தவர் பொன்முடியா, துரைமுருகனா? இந்த பட்டிமன்றத்திற்கு யாரை நடுவராக நியமிக்கலாம்?


ELANGOVAN
நவ 04, 2025 12:35

துரைமுருகன் என்ன தவறாக சொல்லி இருக்கிறார்?


Suppan
நவ 04, 2025 16:47

திராவிடனுக்கு இதெல்லாம் மரியாதைக் குறைவாகத்தெரியாது. நல்ல பண்பு இருந்தால்தானே. அமைச்சரோ பாராளுமன்ற போ அங்கத்தினரோ சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, வெற்றிகொண்டான் போன்றவர்களோடு போட்டி போடுகிறார்கள். பொன்முடியைப்பற்றி கேட்கவே வேண்டாம்


SUBBU,MADURAI
நவ 04, 2025 07:20

இந்த துரை முருகன் ........


Appan
நவ 04, 2025 07:09

வயதானவர்களை பேண வேணும் தான். அதற்காக அவர்களை அமைச்சர்களாக போட்டால் நாடு என்ன ஆகும்? அப்போ அரசியல். அதிகாரம் என்பது தனிமனித சுகத்துக்கா என்று ஆகிவிடாதா? எது எப்படியோ இந்த வரும் தேர்தலோடு திமுக ஆட்சி முடிவுக்கு வந்து விடும். அப்புறம் திமுக இளைஞர்கள் சினிமாவில் நடிக்கலா, சினிமா எடுக்கலாம், வயதானவர்கள் ஓய்வு எடுக்கலாம். மக்கள் பணி மகேசன் பணி போய் இப்போ மக்கள் பணி பணம் சம்பாதிக்க, சுகத்தை அனுப்பிக்க என்றாகி விட்டது.


புதிய வீடியோ