உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  குடும்ப தொழிலை பாதுகாக்க கர்நாடகாவுக்கு துணை போவதா?

 குடும்ப தொழிலை பாதுகாக்க கர்நாடகாவுக்கு துணை போவதா?

சென்னை: கர்நாடகாவில் உள்ள குடும்ப தொழிலை பாதுகாக்க, மேகதாது அணை பிரச்னையில் கர்நாடக அரசுக்கு, தி.மு.க., ஆட்சியாளர்கள் துணையாக இருப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தின் ஜீவ நதியான காவிரி நீரை நம்பித்தான், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நதி உள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமல், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த அரசை, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று, ஏற்கனவே அ.தி.மு.க., சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2024 பிப்ரவரி 1ம் தேதி, டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டத்தில், மேகதாது அணை பிரச்னையை கர்நாடக அரசு எழுப்பியது. அப்போது, தி.மு.க., அரசு மவுனமாக இருந்ததற்கு, கண்டனம் தெரிவித்தேன். அனைத்தையும் மீறி, உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்ற தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த தி.மு.க., ஆட்சியாளர்களின் செயல், மன்னிக்க முடியாத குற்றம். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்க, தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
நவ 14, 2025 21:50

கர்நாடகாவில் கருணாவின் குடும்பத்தொழில் என்னென்ன இருக்கு என்று தெரியுமா ? முக்கியமா செல்வியின் சாராய ஆலை


Anand
நவ 14, 2025 13:03

அந்த குடும்பம் என்றைக்குமே தமிழ்நாட்டிற்கு நல்லது நினைத்ததில்லை. தாங்கள் வளம்பெற, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற, தமிழையும், ஜாதி,மதத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்தி தாங்கள் சுபபோகமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள், ஓட்டுப்போடும் மக்களுக்கு குவார்ட்டர், கோழிபிரியாணி மட்டும் போதும்.


Manyam
நவ 14, 2025 12:50

தமிழக சர்க்கரை ஆலைகளை வாழ்வாதாரமாக நம்பியிருந்த சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் போனது உங்கள் ஆட்சியில் திரு பழனிசாமி அவர்களே. அப்பொழுது உங்கள் தலைமையில் இருந்த அரசு தமிழக அரசு ஆதரவின்றி கூண்டோடு சர்க்கரை ஆலைகளை மூட காரணமாக இருந்தது மற்றும் பெரும்பாலான தமிழக ஆலைகள் கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்தது. அந்த துயரத்தை இன்னும் பல தொழிலாளர்கள் அனுபவிக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் தமிழ் நாட்டின் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இறந்ததை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொணடவராயிற்றே. உங்களை நம்பியிருந்த உங்கள் கட்சியினரை பற்றி கவலையில்லாமல் சுயநலத்தில் கட்சியை விட்டு நீக்கிய நீங்கள் இந்த தமிழ் மக்கள் மட்டும் எம்மாத்திரம்.


Vasan
நவ 14, 2025 11:43

கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் திமுக தேர்தலில் போட்டியிட்டு, எல்லா மாகாணங்களிலும் திமுகவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டுமென்பது என் நீண்ட கால ஆவல். டாக்டர் கருணாநிதி காலத்தில் எதிர்பார்த்தேன், நடக்க வில்லை. திரு ஸ்டாலின் காலத்திலும் அது போன்ற அணுகுமுறை தென்படவில்லை.


சூர்யா
நவ 14, 2025 16:39

அ.தி.மு.க வாவது தமிழ்நாடு தாண்டி கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை ருசித்துள்ளது. தி.மு.க கும்மிடிப்பூண்டியைத் தாண்டியதில்லை. ஆசைப் படுறதுதான் படுறீங்க ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஆகனும்னு ஆசைப்படுங்களேன்! ஆசை கொஞ்சம் பெருசாவாவது இருந்துட்டு போகட்டும்!


Sun
நவ 14, 2025 11:10

மேகதாது அணை கட்டட்டும் கொர்ர்ர்ர், முல்லைப் பெரியாரில் அணை கட்டட்டும் கொர்ர்ர்ர், எதிர்கட்சிகள் கேள்வி கேட்கட்டும் உர்ர்ர்ர்......


SS
நவ 14, 2025 09:55

இவர் பிஜேபியுடன் வைத்தது யாருக்காக?


Mennon Kasirajam
நவ 14, 2025 07:39

அட போயா தமிழக கச்சத்தீவை விற்க தலையாட்டிய ஏங்களைப்பார்த்தா....பேசாம டாஸ்மாக் போயா.


raja
நவ 14, 2025 06:15

மண்ணாங்கட்டி.. குடும்பம் முக்கியமா தமிழன் நாளை முக்கியமா.. மூனுவெல சோத்தை பொட்டா கட்டுமரம் சொன்ன சோற்றால் அடித்த பிண்டங்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமா சுரண்டி புறங்கை நக்கும் திருட்டு திமுகவுக்கு ஒட்டு போடாம போயிடுமா என்ன...


முக்கிய வீடியோ