உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிரந்தரமாக்கப்படுமா சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

நிரந்தரமாக்கப்படுமா சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களான மதுரை, செங்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்ட நகரங்களுக்கு வந்து செல்ல தேஜஸ், வந்தே பாரத், குருவாயூர், வைகை, கொல்லம், பொதிகை, சிலம்பு, முத்து நகர், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, பாண்டியன் உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன.ஆனாலும் விடுமுறை நாட்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை அதிகம் உள்ளதால் வாரத்தில் ஒரு நாள், இரு நாள், மூன்று நாட்கள் என சில சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.அந்த வகையில் திருநெல்வேலி- - மேட்டுப்பாளையம், தாம்பரம்- - கொச்சுவேலி (திருவனந்தபுரம் வடக்கு), ரயில்கள் வாரத்தில் ஒருநாளும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் வாரத்தில் இரண்டு நாளும், தாம்பரம் -- செங்கோட்டை, சென்னை சென்ட்ரல் -- போடி ரயில்கள் 3 நாள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகிறது.மேலும் பல ஆண்டுகளாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் வாரத்தில் மூன்று நாள் மட்டுமே இயங்குகிறது. தேனி மாவட்டத்திற்கு என தினசரி ரயிலும் இயக்கப்படவில்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதிக வருமானம் வரும் தென் மாவட்ட நகரங்களுக்கு இத்தகைய சிறப்பு ரயில்களை நிரந்தரமாக இயக்குவதில் ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னர் இயக்கப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிரந்தர ரயிலாக தினமும் இயங்கி வருகிறது.எனவே மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் தற்போது சிறப்பு ரயிலாக இயங்கும் அனைத்து ரயில்களையும் தினசரி ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கிஜன்
பிப் 10, 2025 06:53

திருநெல்வேலி சென்னை ...மற்றும் சென்னை நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்கள் .... இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் ஓடிய அனைத்து ஆம்னி பேரூந்துகளையும் நிறுத்த செய்துவிட்டன .... கடைசியாக YBM என்று ஒரு பேரூந்து பகல் நேரத்தில் ஓடியது ...இப்போது அதுவும் இல்லை ..... இந்த ரயில்களை நிரந்தரமாக்க ஆம்னி லாபி விடாது .... இல்லையெனில் நெல்லையிலிருந்து விடுவிக்கப்பட்ட எட்டு பெட்டி வந்தேபாரத் ரயிலை செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு அருப்புக்கோட்டை காரைக்குடி திருச்சி வழியாக இயக்கி இருக்கலாம் .... கூட்டம் நிரம்பி வழிந்திருக்கும் .... அப்படியே சத்தமில்லாமல் அமுக்கி விட்டார்கள் ..


அப்பாவி
பிப் 10, 2025 08:32

என்ன உளறுறீங்க. பஸ் கட்டணம் மிக மிக அதிகம். சென்பை திருச்சி சிறப்பு ரயில் கட்டணம் 145 ரூவா. பிரயாபம் சுமார் 5 மணி நேரம் தான். பஸ்ஸில் போனால் 300 ரூவா உருவி 7,8 மணி நேரத்தில் கொண்டு சேர்ப்பார்கள். கண்ட கண்ட குப்பை ரெஸ்டாரண்டுகளில் நிறுத்தி நாற அடிப்பார்கள்.


அப்பாவி
பிப் 10, 2025 06:44

10 ரயில்கள் தேவைப்படும் இடத்தில் நாலு ரயில்கள் ஓடுது. நாமதான் வல்லரசுன்னு மெடல் குத்திப்பாங்க.எல்லோரையும் சுற்றுலா வேற போகச் சொல்லுறாரு.


N Sasikumar Yadhav
பிப் 10, 2025 18:31

உங்க எஜமான் கட்சியான திருட்டு திராவிட மாடல் 40 பாராளுமன்ற கேண்டின் டோக்கன்களை உருப்படியாக பேச சொல்லுங்க . கேண்டினில் சூடாக போடப்படும் மசால்வடை வாசனை வந்தவுடன் மோப்பம் பிடித்து கொண்டு ஏதாவது சாக்கு சொல்லி வெளிநடப்பு செய்து கேண்டினுக்கு ஓடிவிடுகிறானுங்க