உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அழிவின் விளிம்பில் ரஞ்சன்குடி கோட்டை 1,000 ஆண்டு பொக்கிஷத்தை பாதுகாக்குமா தொல்லியல் துறை?

அழிவின் விளிம்பில் ரஞ்சன்குடி கோட்டை 1,000 ஆண்டு பொக்கிஷத்தை பாதுகாக்குமா தொல்லியல் துறை?

பெரம்பலுார்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுாரில் இருந்து, 18 கி.மீ., துாரத்தில் சாலையின் இடதுபுறம் அமைந்துள்ளது மங்கலமேடு கிராமம். இங்கிருந்து, அரை கி.மீ.,யில், வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை உள்ளது. ரஞ்சன்குடி கிராமத்தில் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இக்கோட்டை, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.கோட்டை பற்றிய முழு வரலாறு இதுவரை கண்டறியப்படவில்லை. பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் 1751ல் நடந்த போரில், ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்தனர்.

நினைவுச்சின்னம்

ஜாகீர்தாரர்கள் இக்கோட்டையை தலைமையிடமாக்கி ஆட்சி செய்ததும், பின் சந்தாசாகிப் என்ற மன்னன், ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் உள்ளன. கோட்டையின் வெளிப்புற சுற்றுச்சுவர்கள், வேலுார் கோட்டை போன்று காணப்படுகிறது.மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோட்டையை சுற்றிலும், எதிரிகள் ஊடுருவாமல் இருக்க, அகலமான அகழி அமைக்கப்பட்டுஉள்ளது. 44 ஏக்கர் கோட்டையின் மேல்புற தோற்றம், செஞ்சிக்கோட்டை போல கம்பீரமாக காட்சி தருகிறது.கோட்டையை சுற்றி உயர்ந்து நிற்கும் மதில் சுவரின் நான்கு புறங்களிலும் இடையிடையே பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவர்களில், பாண்டி நாட்டுக்கான மீன் சின்னங்கள், போர்வாள்கள் செதுக்கப்பட்டுள்ளன.இங்குள்ள வழிபாட்டு மண்டப துாண்களில், சிவபெருமானை பசு வணங்குவது போன்ற ஓவியங்கள் மற்றும் கலை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.கோட்டையின் மேல்புறத்தில், ராணியின் அந்தப்புரத்தை ஒட்டி, நீச்சல் குளம் அமைக்கப்பட்டுஉள்ளது. மேற்புற கோட்டையில், ஆயுத கிடங்கு, போர் காலங்களில் தப்பி செல்ல சுரங்கப்பாதை போன்றவை வியப்பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.கோட்டையின் உட்புறம் மசூதி, அதன் அருகிலேயே சிவன், விநாயகர் சிலைகளும் உள்ளன.இந்த கோட்டையில் இருந்து, ஏராளமான பழங்கால வரலாற்று நாணயங்கள், பீரங்கி குண்டுகள் அக்கால மன்னர்களின் பயன்பாட்டு பொருட்கள் கிடைக்க பெற்று, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பெருமை வாய்ந்த இந்த நினைவுச்சின்னம், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

திறந்தவெளி கழிப்பறை

சமீபமாக இக்கோட்டை சமூக விரோதிகளின் கூடாரமாகவும், காதலர்களின் அந்தப்புரமாகவும் மாறி வருகிறது.கோட்டையின் படிக்கட்டுகள் உட்பட பல இடங்களில் கற்கள் மற்றும் சுவர்கள் பெயர்ந்து வருகின்றன. கோட்டையின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் முளைத்துள்ளன.கோட்டை நுழைவாயில் பகுதிகள், திறந்தவெளி மதுக்கூடமாகவும், திறந்த வெளி கழிப்பறையாகவும் உள்ளன.இவை, சுற்றுலா பயணியரை முகம் சுளிக்க வைக்கின்றன. பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இங்கு துப்புரவு பணிகளும் செய்வதில்லை.கோட்டையின் நுழைவாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சுவரை சுற்றிலும் குளம் போல மழைநீர் தேங்கி நிற்கிறது. மதில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு, சிதிலமடைந்து வருகின்றன.

அரசுகளுக்கு கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை புனரமைத்து பாதுகாக்க வேண்டும். குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, இந்திய தொல்லியல் துறைக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கு, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜன 19, 2025 17:09

இந்த கோட்டை மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று செய்தியில் எழுதிய பிறகும் கூட தமிழக அரசை குறை கூறும் நமது சங்கிகள் அறிவுத்திறன் பாராட்டுக்குரியது!


சண்முகம்
ஜன 19, 2025 16:37

1,000 வருடமான கோட்டை என்றால், மத்திய தொல்லியல் துறை என்ன செய்கிறது?


Nandakumar Naidu.
ஜன 19, 2025 14:22

இந்த ஆட்சியில் அதெல்லாம் எதிர் பார்க்க முடியாது. இவர்களின் நோக்கம் மக்களின் பணத்தை எப்படி கொள்ளையடிப்பது, ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் எப்படி அவமதிப்பது, ஹிந்து கோவில்களை எப்படி இடிப்பது, மத வாதிகளின் மற்றும் ஹிந்து விரோத அரசியல்வாதிகளின் காலை கழுவி எப்படி குடிப்பது, இதிலேயே யோசனை செய்ய மற்றும் இவைகளை செயல் படுத்த நேரம் சரியாக உள்ளது. இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் திருந்தினால் சரி.


subramanian
ஜன 19, 2025 13:35

தீய திமுக ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் இருக்கும்


kulandai kannan
ஜன 19, 2025 12:39

இந்தக் கோட்டைக்கு அருகில் ஒரு கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளித்தால், தமிழகத்தில் திடீர் ஆர்வலர்கள் தோன்றுவார்கள்.


புதிய வீடியோ