உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பீஹார் தேர்தலுக்காக பா.ஜ., அறிவித்த திட்டங்கள்... கைகொடுக்குமா? : சலுகை மழையால் எதிர்க்கட்சியினர் திணறல்

பீஹார் தேர்தலுக்காக பா.ஜ., அறிவித்த திட்டங்கள்... கைகொடுக்குமா? : சலுகை மழையால் எதிர்க்கட்சியினர் திணறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீ ஹாரில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல், நடக்க உள்ளது. இதற்காக, அங்கு, மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பா.ஜ., கூட்டணி அரசுகள் சலுகை மழையை பொழிந்து வருகின்றன. இது எதிர்க்கட்சிகளை திணறடித்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்து வரும் வாரங்களில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த ஓராண்டாகவே, வாக்காளர்களை ஈர்க்கும் நடவடிக்கையை மத்தியில் ஆளும் பா.ஜ., மாநிலத்தை ஆளும் தே.ஜ., கூட்டணி மற்றும் பிரதான எதிர்க்கட்சிகள் ஈடு பட்டுள்ளன. அறிவிப்பு இதில் தே.ஜ., கூட்டணி, மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதற்கான காய்களை ந கர்த்தி வருகிறது. இதனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, வாக்காளர்களை ஈர்க்க, அதுவும் பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கையில் பா.ஜ., கூட்டணி முந்திக் கொண்டது. அதன் ஒருபடியாகவே, பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அறிவிப்பு அமைந்தது. பீஹாரில் உள்ள 75 லட்சம் பெண்கள் சுயதொழில் துவங்குவதற்காக முதல்வரின் மகளிர் சுயஉதவி திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் சுயதொழில் துவங்க 10,000 ரூபாய் வழங்கப்படும். அதில், அவர் சாதிக்கும்பட்சத்தில், 2 லட்சம் ரூபாய் வரை நிதி உயர்த்தி தரப்படும். பெண் வாக்காளர்களை மனதில் வைத்து அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை திக்குமுக்காட வைத்திருக்கிறது. தவிர, வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் முதல்வராக பதவியேற்பதற்கும், இத்திட்டம் பெரிதாக கைகொடுக்கும் என, அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்க மாட்டார் என்பது உறுதியாகி இருப்பதும் பா.ஜ.,வுக்கு சாதகமான பலனையே தரும் என்கின்றனர். மகளிருக்கான சலுகைகளை அறிவிப்பதற்கு முன்பாக, கடந்த 24ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பீஹாரின் உள்கட்டமைப்புகளுக்காக பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி பாதையாக அமைப்பதற்கு 3,822 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதே நாளில், பக்தியார்பூர் - ராஜ்கிர் - திலையா இடையிலான 104 கி.மீ., ரயில்வே பாதையை இரு வழித்தடமாக மாற்றுவதற்கு 2,192 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. இதற்கு முன்பாக, கடந்த செப்., 10ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது, பீஹாரில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற 7,616 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டிருந்தது. நிதி ஒதுக்கீடு பீஹாருக்கான மத்திய அரசு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்த அதே நேரத்தில், மாநில அரசின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கான திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக, பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பீஹாரில் 11,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல் படுத்துவதற்கான நிதி ஆதாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இப்படி கடந்த ஓராண்டாகவே, பீஹாரில் வெற்றிக்கனியை பறிக்கும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டு பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்து வருகிறது. அதே சமயம், சமீபத்தில் தேர்தல் கமிஷன் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., இடதுசாரிகள் ஆகியவை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஓட்டு அதிகார யாத்திரை என்ற பெயரில் பீஹாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும், மக்களை ஈர்க்கும் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இவை தேர்தலில் நிச்சயம் சாதகமாக அமையும் என்பது, பா.ஜ., கூட்டணியின் கணிப்பாகும். இதனால் திக்குமுக்காடியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஓட்டு திருட்டு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதில் இருந்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், பிரசாரங்கள் எதை நோக்கி இருக்கும் என்பதை யூகிக்க முடியும். எந்தப் பிரசாரம் எடுபடப் போகிறது என்பது வாக்காளர்களின் கைகளில் உள்ளது.

நிறைவேற்ற முடியாது!

பீஹாரில் தேர்தலையொட்டி நிதிஷ் குமார் அரசு அளி த்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தேர்தலை மனதில் வைத் து , நிதிஷ் குமார் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அவற்றை நிறைவேற்ற 7 லட்சம் கோடி ரூபாய் தேவை. தற்போதைய அரசிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை. தவிர, நான் அளித்த வாக்குறுதிகளை அப்படியே நகல் எடுத் து தான் நிதிஷ் குமார் அரசு அறிவித்திருக்கிறது. தேர்தலில் தே.ஜ., கூட்டணியை எதிர்கொள்ள எங்களிடம் வேறு திட்டம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலானதும், அதை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.-- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை